என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் பிர்லா, பவித்ரா நடிப்பில் உருவாகி உள்ள ’ஊர காணோம்’ படத்தின் முன்னோட்டம்
    வடிவேலு கிணத்த காணோம் காமெடியை நம்மால் மறக்க முடியாது. இப்போது ’ஊர காணோம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையையும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

    இதற்காக நவம்பர் மாத பனிப்பொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது. இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

    ஊர காணோம்

    படத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு கே.எஸ்.சரவணகுமார். இணைத்தயாரிப்பு சகுந்தலா. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த்.
    அஜித் அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. 

    அஜித்

    படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

    தனுஷ்

    இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது. மேலும் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அப்போது ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
    முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. நடிகைகள் சிலர் உடல் நலம், மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. இதற்காக அவர்கள் சிகிச்சை எடுத்து குணமானார்கள். தீபிகா படுகோனே, ஆண்ட்ரியாவும் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அமிதாப்பச்சன் பேசியதாவது:- “நான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கிறேன். ஹெபடைடிஸ் பி பிரச்சினையில் இருந்தும் மீண்டேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி உடல் பரிசோதனை செய்துகொள்வது சம்பந்தமான விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறேன். எனது உடலில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது.

    அமிதாப்பச்சன்

    மீதி 20 சதவீத கல்லீரலோடுதான் நான் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்களுக்குமே சிகிச்சை இருக்கிறது. எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது கூட 8 வருடங்கள் வரை தெரியாது. எனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்று கூறி வருகிறேன். உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற நோய் பாதிப்புகள் உங்களுக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடும். அதற்கான சிகிச்சையையும் பெற முடியாது.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.
    ஜேம்ஸ் பாண்ட் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.

    ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ. கடந்த 2015-ல் வெளியானது ஸ்பெக்டர் திரைப்படம். இதில் நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன.

     நோ டைம் டூ டை

    இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு 'நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

    இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காதலில் நேர்மை மிக முக்கியம் என கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
    தனுஷ் நடிப்பில் வெளியான ‘‌ஷமிதாப்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் அக்‌‌ஷரா ஹாசன். அதன் பின்னர் அஜித்-சிவா கூட்டணியில் வெளியான ‘விவேகம்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்த கடாரம் கொண்டான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அக்‌‌ஷராவின் நடிப்புக்கு பாசிடிவாக விமர்சனங்கள் வந்தன. 

    தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் ‘பிங்கர்டிப்’ என்ற வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்‌‌ஷரா ஹாசன். சமூக வலைதளங்களை வைத்து திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த தொடரை ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். மொபைல் செயலிகளை மையமாக வைத்து படத்தின் கதை நகர்கிறது. 

    பிங்கர்டிப் வெப்சீரீஸ் குழு

    வரும் ஆகஸ்ட் 21-ந் தேதியிலிருந்து 25-க்குள் ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் அக்‌‌ஷரா ஹாசன் பேட்டியளித்தார். அவரிடம் காதலில் எது முக்கியம்? என்று கேட்டதற்கு காதலில் நேர்மை மிக முக்கியம். சமூகவலைதளங்கள் மற்றும் மொபைலிடம் இருந்து சற்று விலகி இருங்கள். சக மனிதர்களிடம் பேசி பழக வேண்டும் என்றும் கூறினார்.
    காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், முதன்முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது. இதனிடயே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

    மெய் படக்குழு

    அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தினேன். மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்”. 

    இவ்வாறு அவர் பேசினார். 
    மெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை குழு வேண்டுமென்றே சான்றிதழ் தர மறுத்ததாக இயக்குனர் எம்.எஸ்.ராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
    ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடந்த இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற பெயரில் புதிய படம் தயாரானது. இந்த படத்தை எம்.எஸ்.ராஜ் டைரக்டு செய்தார். புதுமுகங்களும், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும் நடித்தனர். தணிக்கை குழுவினர், படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்தனர். 

    கவுதமி தலைமையிலான மேல் முறையீட்டு குழுவும் தடை விதித்தது. இதனால் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற்று படத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:- “மெரினா புரட்சி படப்பிடிப்பை 2017 இறுதியில் முடித்து 2018-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பினோம். ஆனால் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். 

    மெரினா புரட்சி

    இங்கிலாந்து, நார்வே, ஓமன் உள்ளிட்ட 11 வெளிநாடுகளில் தமிழர்கள் தன்னிச்சையாக படத்தை வெளியிட்டனர். சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் தணிக்கை சான்றிதழ் பெற்று திரையிட்டனர். இந்த ஆதாரங்களை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து ஐதராபாத்தில் நடிகை ஜீவிதா தலைமையிலான தணிக்கை குழு பார்த்து யு சான்றிதழ் அளித்தது.

    அதன்பிறகும் அலைக்கழித்து 100 நாட்கள் கடந்த பிறகு சான்றிதழ் அளித்தனர். இதனால் எனக்கு ரூ.12 லட்சம் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டது. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
    நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள 'லவ் ஆக்‌‌ஷன் டிராமா' திரைப்படம் ஓணம் பண்டிகையன்று திரைக்கு வருகிறது.
    நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, மலையாளத்தில் 2016-ம் ஆண்டு வெளியான புதிய நியமம் படத்திற்குப் பின் வேறு படத்தில் நடிக்கவில்லை.

    இந்த படத்திற்கு பின், அவர் நிவின் பாலியுடன் இணைந்து 'லவ் ஆக்‌‌ஷன் டிராமா' படத்தில் நடித்துவந்தார். கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் (செப்டம்பர்) அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    நயன்தாரா 

    ஓணத்தின் போது வெளியாக உள்ள படத்தை குறிக்கும் விதமாக, நயன்தாரா விளக்கை ஏற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால் இந்த மலையாள படத்தை நயன்தாரா பெரிதும் நம்பி இருக்கிறார் என்கிறார்கள்.
    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
    கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தேவ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் கார்த்தி மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் நடிக்கிறார். பெரும்பாலும் சிறைச்சாலைக்குள் காட்சிகள் நடைபெறுவதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை. 

    இதையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடிக்கிறார். கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ’சுல்தான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு அதிருப்தி அடைந்தனர்.

    சுல்தான் படக்குழு

    இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே டைட்டிலில் பத்தாண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.
    ராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்திருக்கும் படம் ’தண்டகன்’. அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும்,  மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராட்சசன் வில்லன் 'நான்' சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

    தண்டகன் படக்குழு

    இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர். 

    இப்படத்திற்கு ஒளிப்பதிவு - தளபதி ரத்னம், இசை - ஷ்யாம் மோகன், எடிட்டிங் - வசந்த் நாகராஜ், சண்டைப் பயிற்சி - பில்லா ஜெகன், நடனம் - ஸ்ரீசெல்வி, மக்கள் தொடர்பு - சக்தி சரவணன்.
    பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். 

    தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். 

    கமல்ஹாசன், மதுமிதா

    பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- ‘பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். 

    நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவருக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. 

    எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் லாஸ்லியா நன்றாக தான் இருந்தார். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவரது மனம் மாறிவிட்டது. 

    மதுமிதா

    பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர். கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. 

    நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

    ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’.

    இவ்வாறு மதுமிதா தெரிவித்துள்ளார்.
    ×