என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தை ‘தளபதி 64’ படக்குழுவினர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர்.
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

    இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தளபதி 64 படக்குழுவினர் பிகில் படத்தை சென்னையில் பார்த்துள்ளனர்.

    தளபதி 64 படக்குழு

    தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சாந்தனு ஆகியோருடன் பிகில் படத்தில் நடித்த கதிர் உள்ளிட்டோர் படம் பார்த்தனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படத்தை நடிகர் விஜய் விரைவில் பார்க்க இருக்கிறார். 
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

    இயக்குனர் சஞ்சய் பாரதி - அனிருத்

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் பெப்பியான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தவம்’ படத்தின் முன்னோட்டம்.
    இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் ‘தவம்’. இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது. இப்படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

    ஒளிப்பதிவு - வேல்முருகன், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த், கலை - ராஜு, எடிட்டிங் - எஸ்.பி.அகமது, நடனம் - ரவிதேவ், ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை - குமரவேல், சரவணன், தயாரிப்பு - வசி ஆஸிப், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த ‘பட்லர் பாலு’ படம் அமையும் என்கிறார்கள். 

    யோகிபாபு

    இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் காமெடி கலந்த திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்  சுதிர்.M.L

    முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
    இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, சமூகத்தை கேள்வி கேட்க புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

    இந்த நிலையில் ராதிகா ஆப்தே இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் குல்சன் தேவய்யா, சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டரானது குறித்து ராதிகா ஆப்தே கூறும்போது, “நான் இயக்குனரானது திடீரென்று நடந்து விட்டது. இதன் மூலம் ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்று முழுமையாக கற்றுக்கொண்டேன்” என்றார்.

    ராதிகா ஆப்தே

    படத்தின் தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன் கூறும்போது, “இது சமூகத்தை கேள்வி கேட்கும் வித்தியாசமான படம். இந்த படத்தின் மூலம் ராதிகா ஆப்தே திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார்” என்றார்.
    வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை என்று பிரபல நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர். அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் அனுஷ்காவை காதலிப்பதாக பரவும் தகவலுக்கு பதில் அளித்து பிரபாஸ் அளித்த பேட்டி வருமாறு:

    அனுஷ்காவும், நானும் சில படங்களில் சேர்ந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. 11 வருடங்களாக இந்த நட்பு நீடிக்கிறது. மற்றவர்கள் நினைப்பதுபோல் இது காதல் இல்லை. எங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆவதுவரை இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 

    பிரபாஸ் - அனுஷ்கா

    அனுஷ்காவை பொறுத்தவரை அழகானவர். பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். எங்கள் இருவரையும் சினிமாவில் ஒரு ஜோடியாகவே பார்த்தனர். எங்களுக்குள் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றும் பரவும் வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை. நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். அதன்பிற்கு இந்த வதந்தி நின்றுவிடும்.

    இவ்வாறு பிரபாஸ் கூறினார்.
    தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. குறிப்பாக தனுஷ் 50 வயது நிரம்பியவர் தோற்றத்தை அப்படியே பிரதிபலித்ததாக சமூக வலைத்தளத்தில் பாராட்டினர். 

    மலையாள நடிகை மஞ்சுவாரியர் அசுரன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாகி உள்ளார். அவரது தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சொந்த குரலில் திருநெல்வேலி பாஷை பேசி நடித்து இருந்தார். பசுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். 

    ஷாருக்கான் - தனுஷ்

    இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 

    அசுரன் படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது. இந்தி அசுரன் படத்தில் ஷாருக்கானே நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    ஆந்திரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப் பேற்றார்.

    கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை பிரபல டைரக்டர் ராம்கோபால்வர்மா இயக்கி வருகிறார்.

    இப்படத்துக்கு ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி, வேடத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருகிறார். இவர் தமிழில் அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

    அஜ்மல்

    இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படம் குறித்து அஜ்மல் கூறும் போது, இப்படம் அரசியல் திரில்லர் மற்றும் மாநிலத்துக்கு தொடர்புடையதாக இருக்கும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. நான், ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் அவரது வீடியோக்களை பார்த்து அவரை போல் என்னை மாற்றி கொண்டு நடித்து வருகிறேன்.

    தற்போதுவரை அவரது வேடத்தில் நடித்ததற்கு நல்ல கருத்துக்கள் வந்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி வேடத்துக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. இறுதியில் அவரது உயரம் மற்றும் உருவ ஒற்றுமைக்கு நான் சரியாக இருப்பேன் என்று கருதினர். நான் ஏற்கனவே கோ படத்தில் முதல் அமைச்சராக நடித்து இருக்கிறேன்' என்றார்.
    போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் முன்னோட்டம்.
    'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கைதி’ திரைப்படம் தெலுங்கிலும் மாஸ் காண்பித்து வருகிறது.
    கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்‌ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், இப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் கிடைத்திருக்கிறது. அதுபோல், கைதி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்து மாஸ் காண்பித்து வருகிறது. 

    கைதி படத்தில் கார்த்தி

    மேலும் அதிக தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் கிடைத்து வருகிறது. தெலுங்கிலும் கார்த்திக்கு அதிக ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.

    தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 

    காஜல் அகர்வால்

    இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலும் உறுதிப்படுத்தி உள்ளார். தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    “நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரை மணப்பேன்.”

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார். 

    இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் சில பாகங்கள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தீபிகா படுகோனே

    இந்தப் படம் குறித்துப் பேசிய தீபிகா, “திரவுபதி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய கதாபாத்திரம் இது என்று உண்மையாக நம்புகிறேன். மகாபாரதம் இதிகாசக் கதையாகவும், கலாச்சாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்காகவும் அறியப்பட்டாலும், நிறைய வாழ்க்கைப் பாடங்களை மகாபாரதத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். புதிய ஒரு பார்வையில் சொல்லும்போது அது சுவாரஸ்யமாக இருப்பதோடு மிகவும் விசே‌ஷமானதாகவும் அமையும்“ என்றார்.
    ×