என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல இந்தி நடிகரும், 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய்குமார், பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கிறார்கள்.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவிகள் குவிகின்றன.

பிரபல இந்தி நடிகரும், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய்குமார் பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கி உள்ளார். ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு அசாமில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்துக்கு நிவாரண நிதியாக அக்ஷய்குமார் ரூ.2 கோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், விஜய்யிடம் ரசிகர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது, அவர்களுடன் நான் நடித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன் என நடிகை தேவயானி கூறியுள்ளார்.
நடிகை தேவயானி தன் திரையுலக வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’மும்பையில் இருந்து வந்த எனக்கு பேரும், புகழும் கொடுத்தது தமிழகம் தான். நமது கையில் எதுவும் இல்லை. இங்கு எனக்கு, இவ்வளவு அன்பும், பாசமும் கிடைக்கும்; இவ்வளவு அதிக படங்கள் செய்வேன்னு எதிர்பார்க்கவே இல்லை.
எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, 100 சதவீதம் உண்மையாக செய்தேன். அதற்கு மேல், கடவுள் கொடுத்தது தான் இது... நடிகர் அஜித்துடன், காதல் கோட்டை படத்தில் நான் நடித்ததை எப்போதும் மறக்க முடியாது. இப்ப கூட, நான் எங்கு சென்றாலும், அந்த படத்தின் கேரக்டர் பெயரான, 'கமலி' என்று தான், பலரும் என்னை கூப்பிடுகின்றனர்.
அதுபோல, சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்களும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நடிகர்கள் விஜய், சரத்குமார், முரளி, பார்த்திபன், மம்மூட்டி போன்றோருடன் பல படங்களில் நடித்துள்ளேன். அஜித், விஜய்க்கு, ரசிகர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. இவ்வளவு வருடமாக சினிமாவில் இருக்க வேண்டும் என்றால், தனித்திறமை வேண்டும்; அடையாளம் வேண்டும்; உழைப்பு, கடுமையான முயற்சி எல்லாம் அவசியம். அவர்கள் இருவரிடமும் அது இருக்கிறது.

அது, கடவுளின் ஆசிர்வாதம். அவர்களுடன் நான் நடித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன். சினிமாவுக்குப் பின், 'டிவி'யிலும், பல, ஹிட் கொடுத்தேன். குறிப்பாக, கோலங்கள் தொடரில் நான் நடித்ததை மறக்கவே முடியாது. அந்த தொடரில், என் பெயர் அபி. பலர், அந்தப் பெயரையும் சொல்லி, என்னை அழைக்கின்றனர். அந்த சீரியலில் நடித்ததற்காக, தமிழக அரசு விருதும் எனக்கு கிடைத்தது. முதல்வராக இருந்த கருணாநிதியிடம் விருது வாங்கினேன்.
என்னமோ தெரியவில்லை, ரஜினியுடன் சேர்ந்து நடிக்க, இதுவரை வாய்ப்பு கிடைக்கவே இல்லை. 'நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்; கிடைக்காமல் போவதற்கு, ஏதாவது ஒரு காரணம் இருக்கும்' என, நினைத்துக் கொள்வேன். 'எல்லாம் கடவுள் செயல்' என்று தான் நினைத்துக் கொள்வேன்.என் கணவர், இயக்குனர் ராஜ்குமார், என்னை அவ்வளவு அழகாகப் பார்த்துக் கொள்கிறார்.
மகள்கள், இனியா, ஒன்பதாவது படிக்கிறார்; பிரியங்கா, ஏழாவது படிக்கிறார். உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துகிறேன். குறைவாக சாப்பிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். நன்றாக உழைக்கிறேன். சும்மா இருப்பதே இல்லை. அதனால், 20 ஆண்டு களுக்கு முன் பார்த்தது போலவே, இப்போதும் இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன்னை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் மீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் என இந்துஜா தெரிவித்துள்ளார்.
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அவரை பற்றிய கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்துவருகின்றனர். இது பற்றி இந்துஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

“நான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே என்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள். நான் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்” என கூறியுள்ள அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து என்ஜாய் செய்கிறேன், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை விளம்பரம் தான் செய்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிடுவேன் என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
டிவி, மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி வெங்கடாச்சலம். நேர்கொண்ட பார்வை படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பின்னர் தொடர்ந்து படங்கள், இணைய தொடர்கள் என அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது பயணம் எளிதாக இல்லை. எந்த பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆடிஷன் மூலமாக மட்டுமே இந்த இடத்துக்கு வந்தேன். டிவியில் இருந்து இணைய தொடரில் நடித்தேன். அதன் பின்னர் தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை வாய்ப்பு தான் எனக்கு திருப்புமுனை. எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக வந்த வாய்ப்பு அது.

விஜய்யுடன் நடிப்பதற்காக தான் காத்திருக்கிறேன். விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிடுவேன். அஜித் சார் ரொம்ப மரியாதையான நபர். நட்புடன் பழகினார். குடும்பத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்”. என கூறினார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’தலைவர் 168’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'தர்பார்'. நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீப் பாப்பர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும், ரஜினியின் 168வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளது. ரஜினியுடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்பட பல நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித் நடிப்பில் தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வி செண்டிமென்ட்டை தொடர்ந்து வந்த சிவா, ரஜினியின் 168வது படத்திற்கு 'வியூகம்' என தலைப்பு வைக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை வைத்து 2.0 படத்தை இயக்கிய சங்கர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். 1997-ல் வெளியான இந்தியன் படத்தின் 2ஆம் பாகமாக இப்படம் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அதிக பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 யில் கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய அமிர்தா ராம் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அணிந்து இருந்த உடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து அமிர்தா ராம் இந்தியன் 2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நடிகர் அபி சரவணன் உதவி செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா (வயது 85). நாட்டுப்புற பாடகியான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவை முனியம்மா பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து சினிமாவில் பிஸியான பரவை முனியம்மா 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இறுதியாக 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கினார்.

அதன் மூலம் மாதந்தோறும் ரூ6 ஆயிரம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையறிந்த நடிகர் அபி சரவணன், பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி, துணிகள், தேவையான பொருட்கள், பணம் ஆகிய உதவிகளை செய்திருக்கிறார். மேலும் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும் கூறியிருக்கிறார்.
விழாவுக்கு தாமதமாக வந்ததால், நடிகையின் மூக்கை ரசிகர்கள் உடைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நூரின் ஷெரீப். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியின் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் தான் பிரபலமாக இருந்தார். புருவங்களை உயர்த்தி கண்ணடிக்கும் அவரது வீடியோ மிகப்பெரிய வைரலானது.
ஒரு அடார் லவ் படம் வெளியான பிறகு நூரின் ஷெரீப் தான் பெரிதும் பேசப்பட்டார். படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டது. இதனால் பிரியாவை விட நூரின் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் நூரின் ஷெரீப் ஒரு துடிப்பான பெண்.
பையன்களை போல் பைக் ஓட்டுவது, துறுதுறுவென ஏதாவது சேட்டை செய்வது, ஆண் நண்பர்களுடன் சகஜமாக ஊர் சுற்றுவது என மிகவும் ஜாலியான கேரக்டர் கொண்டவர். இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நூரின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.

வலியை பொறுத்துக் கொண்டு விழாவில் கலந்துகொண்டார். தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.
ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாய் கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு நூரின் வந்தபோது, சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நூரின் மூக்கில் ரத்தம் கொட்டுவது அவர் கதறி அழுவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.
கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கைதி படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இருப்பினும் இதுவரை யாரும் கைதி படத்தின் ரீமேக் உரிமையை பெறவில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா - மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார். தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படம், சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி, சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் மெர்சல், சர்கார் போன்ற படங்கள் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது பிகில் படமும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இதற்கு முன்னர் மெர்சல், சர்கார் போன்ற படங்கள் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது பிகில் படமும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தை ‘தளபதி 64’ படக்குழுவினர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர்.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தளபதி 64 படக்குழுவினர் பிகில் படத்தை சென்னையில் பார்த்துள்ளனர்.

தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சாந்தனு ஆகியோருடன் பிகில் படத்தில் நடித்த கதிர் உள்ளிட்டோர் படம் பார்த்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படத்தை நடிகர் விஜய் விரைவில் பார்க்க இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் பெப்பியான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






