என் மலர்
சினிமா செய்திகள்
அமிதாப் பச்சன் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராயின் மானேஜரை நடிகர் ஷாருக்கான் காப்பாற்றியுள்ளார்.
இந்தி சினிமாவில் தீபாவளி பண்டிகைக்காக நட்சத்திரங்கள் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் விருந்து கொடுப்பார்கள். அதில் மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய இல்லத்தில் தீபாவளிக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்.
அந்த விருந்தில் இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அந்த விருந்தில் ஐஸ்வர்யாராயிடம் பல ஆண்டுகளாக மானேஜராக பணியாற்றி வரும் அர்ச்சனா சதானந்த்தும் பங்கேற்றிருந்தார். இந்த விருந்துக்காக அமிதாப்பச்சனின் வீடு அழகான விளக்குகளால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபாவளி விருந்தில் பங்கேற்றிருந்த அர்ச்சனாவின் ஆடையில் திடீரென்று விளக்கில் இருந்து தீப்பற்றியது. இதனை பார்த்த அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்த நடிகர் ஷாருக்கான் உடனே தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை பயன்படுத்தி அர்ச்சனாவின் ஆடையில் இருந்த தீயை அணைத்தார். இந்த சம்பவத்தால் அர்ச்சனாவின் கை மற்றும் கால்களில் நெருப்புக் காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு சற்று காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அமிதாப்பச்சனின் வீட்டிலிருந்து அர்ச்சனாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் சரியாகி விடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்திலிருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுருதிஹாசன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக இயக்கிய படம் ‘தெறி’. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.
மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் மிக பெரிய வெற்றியால், ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் நடித்தார் விஜய்.

இந்த படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போது வெளியானது. இருந்தாலும், தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஹீரோயினாக சுருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் சுருதி நடிக்கலாம் என தெரிகிறது. இன்னொரு ஹீரோயின் யார் எனத் தெரியவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.

அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யஷ்-ராதிகா தம்பதிக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கன்னட சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யஷ். கடந்தாண்டு வெளியான கேஜிஎப் படம் மூலம் நாடு முழுக்க பிரபலமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

யஷ் கடந்த 2016-ம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை, யஷின் விரலை பிடித்தவாரு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் பிகில் படமும், கார்த்தியின் கைதி படமும் தீபாவளியையொட்டி வெளியான நிலையில், மீண்டும் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் பிகில் படமும், கார்த்தியின் கைதி படமும் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு படங்களும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ம், கார்த்தியின் அடுத்த படமான சுல்தானும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களும் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதேபோல் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன், கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதேபோல் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன், கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கதிர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஜடா’ படத்தின் குழுவினரை இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் மூலம் உற்சாகப்படுத்தி உள்ளார்.
கதிர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜடா’. அறிமுக இயக்குனர் குமரன் இயக்கும் படத்தை பொயட் ஸ்டூடியோ தயாரித்திருக்கிறது. கால்பந்தாட்ட வீரனை பற்றிய இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படத்தில் முக்கியமான ஒரு பாடலை அனிருத் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அவரை அணுகியிருக்கிறார்கள். அனிருத்தும் பாடலின் டியூனைக்கேட்டு உற்சாகமாகி பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.

பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சமீபத்தில் வெளியான 'கைதி' திரைப்படத்தில் சிறப்பான இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ் அடுத்து வெளிவரவிருக்கும் "ஜடா" படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார்.
லஷ்மி குறும்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை லட்சுமி பிரியா, திடீர் என்று எழுத்தாளரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லட்சுமி பிரியா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
லட்சுமி பிரியா சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால் குறும் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார். அவர் நடித்ததில் மிகவும் பிரபலமான குறும்படம் தான் “லஷ்மி”. இது லஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும்.

இந்த குறும்படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது. தற்போது நடிகை லட்சுமி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
லட்சுமி-வெங்கட்ராகவன் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கடபதாரி’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கபடதாரி'. இதில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது இவர்களுடன் கமலின் 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற பூஜா குமார் இணைந்திருக்கிறார்.

சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீண் கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர். சத்யா, சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் பிரபல வில்லன் நடிகர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய்யின் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிக்கி உயிர் தப்பியிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத்தீயால் பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸ் சொகுசு வீடு எரிந்து நாசமானது. இந்த தகவலை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது. இதனால் தப்பி செல்ல வழி தெரியாமல் தவித்தார்.

2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று அர்னால்டை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்று டுவிட்டரில் அர்னால்டு பாராட்டி உள்ளார். இதுபோல் காட்டுத் தீயில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்கள் கிளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.
அர்னால்டு, லிண்டா ஹாமில்டன் ஆகியோர் நடித்துள்ள டெர்மினேட்டர் டார்க் பேட் படம் திரைக்கு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக இந்த படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது.
அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்த நாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ளார்.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் நேற்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம்.சரவணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஆர்.ரகுநந்தன் ‘அந்த நாள்’ படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த படம் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பெற்றது. சீதக்காதியில் முதியவராக வந்தார்.
விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அடுத்து இன்னொரு தெலுங்கு படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ஏஏ20 என்று பெயர் வைத்துள்ளனர். இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சங்கத்தமிழன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மற்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.
மர்கோனி மாதை என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த சைரா நரசிம்ம ரெட்டி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தி படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது.






