என் மலர்
சினிமா

கைதி படத்தில் கார்த்தி
தெலுங்கிலும் மாஸ் காட்டும் கைதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கைதி’ திரைப்படம் தெலுங்கிலும் மாஸ் காண்பித்து வருகிறது.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் கிடைத்திருக்கிறது. அதுபோல், கைதி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்து மாஸ் காண்பித்து வருகிறது.

மேலும் அதிக தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் கிடைத்து வருகிறது. தெலுங்கிலும் கார்த்திக்கு அதிக ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






