என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    சைக்கோ படக்குழு

    இயக்குனர் மிஸ்கின் தற்போது துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் நடத்தி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
    ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. இவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தி பியானிஸ்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். ரோமன் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ‌ஷரன் டேட் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். 1970-ம் ஆண்டு லண்டன் சென்ற போது ஒரு கலவரத்தில் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்தார். 

    இதனை தொடர்ந்து 1977-ம் ஆண்டு பதிமூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் வசிக்க ஆரம்பித்தார். அந்த வழக்கில் அமெரிக்க போலீஸ் ரோமன் போலன்ஸ்கியை தேடி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆஸ்கர் அகாடமியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ரோமன் போலன்ஸ்கி தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். 

    இந்த நிலையில் ரோமன் போலன்ஸ்கி மீது பெண் ஒரு பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவர், 1975-ம் ஆண்டு தனக்கு 18 வயதாக இருந்தபோது அங்குள்ள ரிசார்ட்டில் வைத்து ரோமன் போலன்ஸ்கி தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். 

    ரோமன் போலன்ஸ்கி

    தற்போது 60 வயதை கடந்துள்ள மோன்னியர் என்ற அந்த பெண் பிரெஞ்சின் லி பாரீசியன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் ஜே அக்யூஸ் என்ற படம் அடுத்த வாரம் பிரான்சில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மோன்னியர், ரோமன் போலன்ஸ்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தகவலை தெரிவித்திருக்கிறார். 
    பிரேம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் காதலில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவில் வலம் வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். 

    மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் ரசிகர்களை கவர்ந்தது நடிகை அனுபமா தான். இவர் தொடர்ந்து தனுஷ் நடித்த கொடி படத்திலும், வேறு தெலுங்கு படங்களிலும் நடித்தார். 

    அனுபமா பரமேஸ்வரன்

    இப்போது படவாய்ப்புகள் இல்லாமல் மாடலிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். படங்களில் கவர்ச்சிக்கு மறுத்து வந்த அனுபமா சமீபத்தில் பத்திரிகையின் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

    சமீபத்தில் குளத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இவர்தான் அனுபமாவின் காதலர் என்ற ரீதியில் செய்திகள் பரவுகின்றன. 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
    கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டதால், இதர மொழிகளின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. 

    'பிகில்' படத்துக்கு போட்டியாக வெளியானதால், முதல் வாரத்தில் 250 திரையரங்குகளில்தான் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ச்சியாக திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3 வாரங்களில் இந்தப் படம் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளதாக, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். 

    கைதி படத்தில் கார்த்தி

    மேலும், சென்னையில் 'பிகில்' திரையிடப்பட்டு வந்த முக்கியத் திரையரங்குகளில் 'கைதி' மாற்றப்பட்டுள்ளதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இதனிடையே, 'கைதி' படத்தின் வசூல் தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் விசாரித்தபோது, 2019-ம் ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த படங்கள் வரிசையில் 'கைதி' இணைந்துவிட்டது என்றனர்.

    மேலும், 'கைதி' படத்தின் திரையரங்க டிக்கெட், தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் வந்த மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக குறிப்பிட்டனர். 
    நடிகர் சூர்யா - இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் முதல்முறையாக இணைய இருக்கிறார்.
    சூர்யா-இயக்குனர் ஹரி கூட்டணியில் வந்த ஆறு, வேல் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 2010-ல் மீண்டும் இவர்கள் கூட்டணியில் சிங்கம் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

    அதன்பிறகு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் 2013-ம் ஆண்டும், சிங்கம் 3-ம் பாகம் 2017-ம் ஆண்டும் வெளியானது. தற்போது மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி இணைய இருக்கிறது. இந்த கூட்டணியில் முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர் இமான் இணைந்திருக்கிறார்.

    சூர்யா - ஹரி - இமான்

    இந்த புதிய படம் சிங்கம் 4-ம் பாகமா? அல்லது வேறு கதையா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது சுதா கொங்கரா இயக்கி இருக்கும் சூரரைப்போற்று படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படும் பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறலுக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்
    மும்பை:

    லதா மங்கேஷ்கர் இந்தி மொழியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை லதா கொண்டாடினார்.

    இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை உடல்நிலை சற்று தேறியதும் லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார். அவர் ஓய்வெடுத்து வருவதாக லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் குறிப்பிட்டுள்ளார்.

    லதா மங்கேஷ்கர் 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
    மேயாதமான் படம் மூலம் பிரபலமாகி தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த இந்துஜா, அஜித் பட வாய்ப்பை இழந்ததாக பேட்டியில் கூறியிருக்கிறார்.
    அஜித் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளிவந்தது. விஸ்வாசம் சூப்பர் ஹிட்டானது, நேர்கொண்ட பார்வை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்தது. நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 

    இதில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்து வருகிறது. மேலும், பல விருதுகள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிகில் படத்தில் நடித்த இந்துஜா தான். 

    இந்துஜா

    ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக ஒரு பேட்டியில் இந்துஜா கூறியுள்ளார்.
    குரோர்பதி நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அவமரியாதை ஏற்பட்டதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

    கேள்விக்கு வழங்கப்பட்ட விடைகளில் மராட்டிய மன்ன ரான சத்ரபதி சிவாஜியின் பெயர், அடைமொழி ஏதும் வழங்கப்படாமல் “சிவாஜி” என வெறுமனே குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவந்தனர்.

    அமிதாப்பச்சன்

    இந்தநிலையில் அமிதாப் பச்சன் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சித்தார்த்தா பாசு ஆகியோர் தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளனர். கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    அமிதாப் பச்சன் தற்போது உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ மனையில் இருந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். தற்போது மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்கும்படி கூறி உள்ளனர். அதனால் அவர் படுத்த படுக்கையாக உள்ளார்.

    தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை விமர்சித்தவரை நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
    விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். இதில் ஆனந்த்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிகில் படம் வெளியான சமயத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக ஒரு விமர்சகர் விஜய்யின் ஒரு தோற்றத்தை தாத்தா என்று கூறி மோசமாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் கூறியதாவது:-

    விஜய் - ஆனந்த்ராஜ்

    ‘விஜய் என்ற ஒருவருக்காக தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை ஒருமுறை பார்ப்போம் என்று வருகிறார்கள். அந்த மேஜிக் விஜய்க்கு மட்டும் தான். படத்தை விமர்சியுங்கள். தாத்தா ஆகிட்டார் என கூறுகிறார் ஒருவர். தனி மனித விமர்சனம் வேண்டாம். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் தம்பி விஜய் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    காதலருடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால் பிரிந்த நடிகை இலியானா அவரை விமர்சிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
    விஜய் நடித்த `நண்பன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இலியானா. இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நீபோனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உறவில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பிரிந்தனர். அதை தொடர்ந்து, இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்பாலோ செய்தனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் இலியானா நீக்கிவிட்டார். 

    எனினும் இதுபற்றி வெளிப்படையாக இருவருமே கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ஊடகங்களில் அதிகம் பேசாத இலியானா அண்மையில் ஓர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது காதல் முறிவு பற்றி மனம் திறந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ’என்னை அக்கறையோடு கவனித்துக்கொள்ள எனக்கு நானே கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த அந்த நிமிடம் முதல் எனக்குள் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 

    மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். வாழ்க்கையில் மோசமான நேரங்களை கடக்க நேரும்போது, என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். எப்போதும் ஒருவரை சார்ந்தே இருக்க முடியாது என்றும் கண்டறிந்தேன். அதன் பிறகு ஒரு நிபுணரை சந்தித்தேன். அவருடைய ஆலோசனைகளை பின்பற்றிய பிறகு என்னை நானே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டேன். 

    இலியானா

    அந்த நிகழ்விலிருந்து கசப்பான அனுபவத்தை எடுத்துக்கொண்டோ, விரோதத்தை வளர்த்துக்கொண்டோ வெளியே வர வேண்டும் என்று நினைக்கவில்லை. வாழ்க்கையில் கடினமான தருணங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அவை என்னை உறுதியானவளாக மாற்றியிருக்கிறது. அவரை பற்றி தவறாகப் பேசவோ விமர்சிக்கவோ மாட்டேன். நான் இப்போது நல்ல இடத்தில் இருக்கிறேன். அவருக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். 

    வேறு ஒரு காதலுக்கு தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்த இலியானா, ``ஒருவரைக் காதலித்துக் கொண்டிருப்பது என்பது வேறு. காதலர் ஒருவர் இருக்கும்போது அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர முடியும். ஆனால், அதைவிட மன அமைதி முக்கியம். தற்போது மற்றோர் உறவுக்கு நான் தயாராக இல்லை. இப்போது நான் இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நானே காதலிக்கவும் தொடங்கிவிட்டேன்” என்று பதில் அளித்தார்.
    பிரிந்து வாழும் அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்? என்று அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
    • கமல்ஹாசனும் அவரது மனைவி சரிகாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
    • அப்பா, அம்மா பிரிந்தது மகிழ்ச்சியான வி‌ஷயம் என்கிறார் சுருதிஹாசன்.
    • இருவரும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகின.

    சென்னை:

    கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

    அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.

    ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான வி‌ஷயம் ஆகும்.

    தாயாருடன் சுருதிஹாசன்.

    ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த வி‌ஷயமாகும்.

    அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகியது.

    என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

    இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.
    வைரமுத்துவின் சூப்பர் ஹிட் பாடலின் வரிகளில் உள்ள கருத்தை கொண்டு மிஸ்டர் டபிள்யூ எனும் படத்தின் கதை உருவாகியுள்ளது.
    சத்தி என்பவர் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் “ மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

    மிஸ்டர் டபிள்யூ படக்குழு

    இந்த படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, “ ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி.... ஊர்வசி... பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி “ என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை காமெடியுடன் சொல்லும் படம் தான் “ மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.  சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 
    ×