என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடிகை நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.

    ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

    நயன்தாரா, ரஜினி

    நயன்தாராவும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு அந்த படத்தில் நடித்ததுதான் என்றும் கூறியிருந்தார்.

    கஜினி படத்தில் அசினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த படத்துக்கு பிறகு இந்தியில் அசின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இப்போது மீண்டும் தர்பார் படத்தில் தனது கதாபாத்திரத்தை சிதைத்துவிட்டதாக அதிருப்தியில் இருக்கிறார். 
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    தர்பார் பட போஸ்டர்

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் உலகளவில், 4 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், மீண்டும் அஜித் பட நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.
    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. 

    மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    இந்நிலையில், இந்த படம் தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். மாதவனும், ஷ்ரத்தாவும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.

    நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- சிறுவயதிலேயே எனக்கு பாட பிடிக்கும். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. எனது முதல் இசை பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு 4 மொழிகள் தெரியும். கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. இயக்குனர் ஆக வேண்டும் என்பது கனவு. எப்படியும் இயக்குனர் ஆகிவிடுவேன்.

    சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகனை மையமாக வைத்தே படங்கள் எடுக்கிறார்கள். அந்த மாதிரி படங்களில் நடிப்பதை விட புதுமாதிரியான நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் 2 ஆடல் பாடல் காட்சிகளில் வருவது மலையேறிவிட்டது. ரசிகர்களே அதை ஒதுக்கி விட்டார்கள். அதுமாதிரி படங்களை ஒப்புக்கொண்டு இருந்தால் எனது கணக்கில் நிறைய படங்கள் சேர்ந்து இருக்கும்.

    நித்யா மேனன்

    கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பேசுகின்றனர். எனது சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் எல்லோருக்கும் நடக்காது என்று நான் சொல்ல வரவில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ? அதுபோல் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.”

    இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
    திரெளபதி படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
    மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரெளபதி’. கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தரப்பில் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் பரபரப்பு அடங்குவதற்குள், ’திரெளபதி’ படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் பரவின. அதேபோல், இப்படத்தின் இயக்குனர் மோகன், அஜித்துடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    திரெளபதி படக்குழு

    இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன், விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து அஜித் எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார். 
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஒருவரின் பயோபிக்கில் நடிக்க உள்ளார்.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. தடகள வீரர் மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்) குறித்து படங்கள் தயாராகி வருகின்றன. 

    இந்த வரிசையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி (37) பயோபிக் உருவாகிறது. ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பின் வரிசையில் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். 

    அனுஷ்கா ஷர்மா, ஜூலன் கோஸ்வாமி

    ‘சதாக் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இவரது வாழ்க்கை குறித்து சினிமா தயாராக உள்ளது. இதில் ஜூலன் வேடத்தில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு செல்லவுள்ளார். இதேபோல் மித்தாலி ராஜ் பயோபிக்கில் டாப்சி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    நீண்ட நாட்களுக்கு பின் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை, தான் போடும் கண்டிஷனுக்கு ஓகே சொன்னால் தான் நடிப்பேன் என கறார் காட்டுகிறாராம்.
    தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நடிகை ஒருவர் அரசியலில் களம் கண்டதால், படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள அந்த நடிகை இயக்குனர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.

    அது என்ன வென்றால், தனக்கு சம்பளமாக ஒரு பெரிய தொகை வேண்டும் என்பது ஒரு கண்டிஷன். அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பது, இன்னொரு கண்டிஷனாம். இந்த இரண்டுக்கும் ஓகே சொன்னால் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

    ரஜினிகாந்த்

    இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், மற்றொரு உச்ச நடிகரான அஜித்தை வாழ்த்தியுள்ளார்.
    தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய்யும், அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது. ஒருவர் படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு சினிமா விழாவில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

    அஜித், விஜய்
     
    இந்த விருதினை விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கைகளால் விஸ்வாசம் படக்குழுவுக்கு வழங்கினார். அதையடுத்து அவர் பேசுகையில், அஜித் படங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு விஜய் வாழ்த்து சொல்வார். அதேபோல் இந்த விஸ்வாசம் படம் வெற்றி பெற்றபோதும் அஜித், டைரக்டர் சிவா ஆகிய இருவருக்கும் விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக ஒரு தகவலையும் வெளியிட்டார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன், யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார் என கூறியுள்ளார்.
    பெங்களூருவை சேர்ந்த விளம்பர மாடல் ரைசா வில்சன், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

    ரைசா வில்சன்

    இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், "உங்களுடன் 7 வயது குறைவான நபரை டேட்டிங் செய்வீர்களா", என கேட்டார். அதற்கு, "ஏன் நீங்க என்னைவிட 7 வயது குறைந்தவரா? டேட்டிங் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார்", என ரைசா பதில் அளித்தார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் கதை, ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து, காளைகளை அடக்கும் காட்சிகளும், அதற்கு பின்னால் உள்ள அரசியலும், படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாடிவாசல் என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

    சூர்யா, வெற்றிமாறன்

    இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது, “வாடிவாசல் என்ற கதை உரிமையை வாங்கி வந்துள்ளேன். அதை வைத்து படம் எடுப்பேன்” என்றார். இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
    பாலிவுட்டில் ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்களில் நடித்த தனுஷ், தற்போது மீண்டும் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

    அக்‌ஷய் குமார்

    இந்நிலையில், தனுஷ் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமாரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×