என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட்டில் ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்களில் நடித்த தனுஷ், தற்போது மீண்டும் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

    அக்‌ஷய் குமார்

    இந்நிலையில், தனுஷ் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமாரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜீவா, 83 என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
    கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதனிடையே இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    ஜீவா

    இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜீவாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சமீபகாலமாக பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகின்றன. நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் கூட இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக தெரிவித்த அவர், படத்துக்கு ‘ராஜா தி ஜெர்னி’ என்ற டைட்டில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தனுஷ், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா


    இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குவது உறுதி செய்யப்பட்டால் அந்தப் படத்தில் இசைஞானி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் மிக பொருத்தமாக இருப்பார் என்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். இதனால் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
    தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதாவுக்கு ரசிகர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
    அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    நந்திதா நடிப்பில் கடந்த ஆண்டு தேவி 2 படம் வெளியானது. சமூக வலை தளங்களில் தீவிரமாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் தனது கவர்ச்சியான படங்களையும் பதிவிடுவார்.

    நந்திதா

    இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்ற ரசிகர் நந்திதாவுக்கு ஆபாச செய்திகளை இன்பாக்ஸ்க்கு அனுப்பி வந்துள்ளார்.

    அந்த நபரை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார் நந்திதா. அதில் வாஞ்சி செழியன் அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த பதிவில், ‘இது போன்ற நபர்களை என்ன செய்வது, இவர்களுக்கு குடும்பம் இல்லையா?’ என்றும் நடிகை நந்திதா கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
    பாகுபலி, ஆரம்பம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ராணா, கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் என்று கூறியிருக்கிறார்.
    தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். 

    அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும். காதலிக்க நேரம் இல்லை. காதல்ங்கறது அதுவாக தேடி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன். 

    ராணா

    நானா எதுவும் பிக்ஸ் பண்ணிக்கலை. அதை அதன் போக்குல விட்டுடறேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வியிலதான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்துல கத்துக்கிட்டது’ என்றார்.
    டேக் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராஜன் தயாரிப்பில் எம்.வி.கிருஷ்ணா இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிரட்சி படத்தின் முன்னோட்டம்.
    டேக் ஓகே கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ‘மிரட்சி’. நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படம் பற்றி இயக்குனர் எம்.வி.கிருஷ்ணா கூறியதாவது..

    முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

    படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும்.

    படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
    தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். 

    நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

    வெறித்தனம் படைத்த சாதனை

    இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று பேசியுள்ளார்.
    நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை. மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்.

    நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும். டிராபிக் ராமசாமி, ஐஏஎஸ் சகாயம் போன்ற சமூக ஆர்வலர்கள் உடன் விஜய் இணைய சாத்தியமில்லை. குடி உரிமை சட்ட திருத்த மசோதா மிகவும் குழப்பமாக உள்ளது. அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பற்றி கருத்து கூற இயலவில்லை.

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல் கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள்’ என்றார்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், பிரியா மணி நடிப்பில் வெளியாகி இருக்கும் விஜயன் படத்தின் விமர்சனம்.
    ஆதரவற்றவராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். சிறுவயதில் இருந்தே திருடனாக இருந்து வருகிறார். அப்பா, அம்மா இல்லாமல் கோடிஸ்வரனாக இருக்கும் தாத்தாவுடன் வளர்ந்து வருகிறார் பிரியா மணி. இவர் அணிந்திருக்கும் ஜெயின் ஒன்று ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைக்கிறது.

    திருடன் என்பதால் அதை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அது போலியான தங்கம் என்பதால் விற்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த ஜெயினை தூக்கி எறிகிறார். ஆனால், ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த ஜெயின் அவரிடம் வருகிறது. வளர்ந்து பெரியவனாக இருக்கும் ஜூனியர்.என்.டி.ஆர். மீண்டும் பிரியாமணியை சந்திக்கிறார். இவரை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

    விஜயன் விமர்சனம்

    இந்நிலையில், ஒரு திருட்டின் போது எமதர்மரை ஜூனியர் என்.டி.ஆர். திட்டுகிறார். இதனால் கோபமடையும் எமதர்மராஜா ஆயுள் நாட்கள் அதிகமாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை போலி கணக்கு எழுதி எமலோகத்திற்கு வரவழைத்து விடுகிறார். இந்த விஷயம் ஜூனியர் என்.டி.ஆருக்கு தெரிய வர எமதர்மராஜாவை எப்படி சமாளித்தார்? மீண்டும் பூலோகம் திரும்பினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    2007ம் ஆண்டு வெளியான எமடோங்கா என்ற தெலுங்கு படத்தினை டப்பிங் செய்து விஜயன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் காமெடியில் கலக்கி இருக்கிறார். துறுதுறு இளைஞனாக மனதில் பதிகிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா மணி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். எமனாக வரும் மோகன்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    விஜயன் விமர்சனம்

    காமெடி கலந்து பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அந்த காலத்திற்கு ஏற்ப கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘விஜயன்’ காமெடி கலாட்டா.
    காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் ‘டகால்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

    விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    டகால்டி - சர்வர் சுந்தரம்

    அதே தினத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    பட இயக்குனரை திருமணம் செய்துக் கொண்ட கன்னட நடிகை விஜயலட்சுமி வளர்ப்பு தந்தையால் ஆபத்து இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது துங்கபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆஞ்சநேயா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் விஜயலட்சுமிக்கும் ஆஞ்சநேயாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதற்கு விஜயலட்சுமியின் தாயும், வளர்ப்பு தந்தையும் சம்மதிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி இயக்குனர் ஆஞ்சநேயாவை திருமணம் செய்து கொண்டார். விஜயலட்சுமி புதிய படங்களில் நடிக்க சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றில் நடிக்க மறுக்கிறார் என்று அவரது தாயும், வளர்ப்பு தந்தையும் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விஜயலட்சுமி போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    விஜயலட்சுமி

    “நான் வளர்ப்பு தந்தையால் கொடுமைகளுக்கு ஆளானேன். மனதளவிலும் சித்ரவதை செய்தார். இயக்குனர் ஆஞ்சநேயாவை நான் காதலித்தது வளர்ப்பு தந்தைக்கு பிடிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டேன். இதனால் என்மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். என்னை யாரும் கடத்தவில்லை.

    எனது கணவரை வளர்ப்பு தந்தை கொலை செய்ய சதி செய்தார். அதில் இருந்து கணவர் தப்பினார். எங்கள் இருவரது உயிருக்கும் அவரால் ஆபத்து உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்குங்கள்.”  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கேரளாவில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மனைவி அன்னம்மா. இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் உள்ளிட்ட அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

    இவர்கள் 6 பேரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். சாவில் மர்மம் இருப்பதாக கோழிக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்தார்கள். அப்போது 6 பேரின் உடல்களிலும் விஷம் கலந்து இருந்ததும் சொத்துக்காக மருமகள் ஜோலி சயனைடு கொடுத்து இந்த கொலைகளை செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    மோகன்லால்

    அவரை போலீசார் கைது செய்தனர். இந்த உண்மை சம்பவத்தை படமாக எடுக்கப்போவதாகவும் மோகன்லால் கதாநாயகனாக நடிப்பார் என்றும் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் அறிவித்தார். படத்துக்கு கூடத்தாயி என்று பெயர் வைத்தனர். இன்னொரு பட நிறுவனமும் ஜோலி என்ற பெயரில் இதே சம்பவத்தை படமாக்கி வந்தது.

    இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரி கொலை செய்யப்பட்ட ரோய் தாமசின் சகோதரி ரெஞ்சி மற்றும் கொலையாளி ஜோலியின் மகன்கள் ரெமோ, ரோனால்ட் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    ×