search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னட நடிகை"

    • உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார்.
    • அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும் நடித்துள்ளார்.

    பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி பெங்களூரு அருகே சோழதேவனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக நோய்வாய்பட்டு அவர் கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

    தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த லீலாவதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'பட்டினத்தார்', 'சுமைதாங்கி', 'வளர்பிறை', 'அவள் ஒரு தொடா் கதை', 'நான் அவனில்லை', 'அவர்கள்', 'புதிர்', 'கர்ஜனை' ஆகிய 8 படங்களில் நடித்துள்ளார். அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும், வளர்பிறையில் நடிகர் சிவாஜிகணேசனுடனும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பழம்பெரும் கன்னட திரையுலக பிரபலம் லீலாவதியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார். அவரது மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவில் பாராட்டப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகை சுவாதி கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
    • தவறான சிகிச்சை காரணமாக கன்னட நடிகையின் முகம் பரிதாப நிலையில் உள்ளது.

    பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து சுவாதியை அதை செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நடிகை சுவாதி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். இதன்பின்னர், சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.




    இதையடுத்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று நடிகை சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×