சசிகுமாருடன் இணையும் பிரபல கன்னட நடிகை

`சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி’ என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார்.தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சசிகுமாருடன் இணையும் பிரபல கன்னட நடிகை
Published on

`சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதில் ஒரு படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். கிராமிய குடும்பக் கதையான இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில் பட்டியில் நடைபெற்று வருகிறது.

படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே.ஆச்சார் இணைந்து நடித்து வருகிறார். படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மதர் இந்தியா என வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைத்ரா இரண்டாவதாக தமிழில் நடிக்க இருக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com