search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் டிவி"

    • கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என கூறியுள்ளது.

    கமுதி

    கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கமுதி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கமுதி நகர், கமுதி தெற்கு, கமுதி வடக்கு மற்றும் பெருநாழி அபிராமம் பிரிவு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அனுமதி இன்றி மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்கள் மற்றும் சாதனங்களை மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் நலன் கருதி மின் கட்டமைப்புகளில் அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கேபிள் டிவி நிலுவை தொகை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை பயன்படுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னலும், உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும். முதல்- அமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×