என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.
    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வேலையிழந்து தவிக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்காக பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

    திரைப்பிரபலங்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் பெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார்.
    எழுதி, இயக்கி திரைப்பிரபலங்களுடன் கமலும் பாடியுள்ள "அறிவும், அன்பும்" என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக உள்ளது.
    கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர். 

     "அறிவும், அன்பும்"  என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.
    கொரோனா ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்காக பிரபல இயக்குனர் தனது 8 ஓட்டல்களை வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதேபோல் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்கினார்.

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் பாதுகாக்கும் காவல்துறையினருக்கு பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் தனது 8 ஓட்டல்களை போலீசாருக்காக வழங்கியிருக்கிறார். இது குறித்த தகவலை மும்பை காவல்துறை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறது.

     அந்த பதிவில் கூறியிருப்பதாவது: "பாதுகாப்பு பணியில் இருக்கும் எங்களது காவலர்களுக்காக மும்பையில் உள்ள 8 ஓட்டல்களை வழங்கியிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. போலீசார் ஓய்வெடுக்க, குளிக்க மற்றும் அவர்களுக்கான ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். நல்லெண்ணத்துடன் எங்களுக்கு உதவிய அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரபல நடிகர் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார்.
    பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இவர், ‘பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடிகொப்பா-3’ உள்பட 30 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

    இவர்களது திருமணம் மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி தனது திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளித்த விஜயகாந்த்தின் மனிதநேயமிக்க செயலை இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார்.
    சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மருத்துவரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையறிந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தனக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார்.  

    அவரின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான சேரன் இதுகுறித்து கூறியதாவது: வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட.. வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்.. என கூறியுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    இந்நிலையில், மாஸ்டர் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசாக உள்ளதாக பிரபல திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

    விஜய் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது எந்த படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை. அந்தக்குறையை மாஸ்டர் படம் தீர்த்துள்ளது என்றே சொல்லலாம். விஜய் படம் ஒன்று பான் இந்தியா படமாக வெளியாவது இதுவே முதன்முறை.
    கொரோனா அச்சத்தால் அவரை கட்டி அணைக்கக்கூட முடியாமல் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசியதாக நடிகை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
    தமிழில் உதயா ஜோடியாக ரா ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தி இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது கொரோனாவால் ஸ்வேதா பாசு குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் 25 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே தனிமையில் முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ஸ்வேதா பாசு கூறியதாவது:- “வாழ்க்கையில் தனிமையில் நான் வசித்தது இல்லை. ஆரம்பத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடனும் பிறகு கணவருடனும் இருந்தேன். விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கும் வந்து விட்டது. இதனால் மனநல மருத்துவரிடம் வீடியோ மூலம் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் என்னைப்போல் பலர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அந்த மருத்துவர் சொன்னார். 

    ஸ்வேதா பாசு

    மன ஆரோக்கியம் முக்கியம். கொரோனா ஊரடங்கில் அனைவரும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு அம்மா என்னை பார்க்க வந்தார். அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை. கொரோனாவால் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசினோம். கடினமான கொரோனா பிரச்சினை விரைவில் கடந்து செல்ல பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.
    மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. மருத்துவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

    நடிகர் கார்த்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.
    ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் நிருபர் சேத்னா கபூரின் படத்தை உருவ கேலி செய்ய பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.

    அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

    இந்தநிலையில் படத்தை பார்த்த நிருபர் சேத்னா கபூர் என்பவர் தனது புகைப்படத்தை அனுமதி பெறாமல் ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் உருவ கேலி செய்ய பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றும் டுவிட்டரில் பதிவிட்டார்.

    இதையடுத்து அவருக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள துல்கர் சல்மான், “இந்த புகைப்படம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரிக்கிறோம். புகைப்படத்தை உள்நோக்கத்தோடு பயன்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடமான நிலைமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    நெடுஞ்சாலை படம் மூலம் பிரபலமான நடிகர் ஆரி மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.







    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறை அறிவிப்பை வரவேற்பதாக கூறிய நடிகர் ஆரி, மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     காரணம் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை தான் தற்போது இங்கு உள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து துறையினரும்  செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி உயிரை துச்சமென நினைத்து நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     எனவே இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

    மேலும் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலில் இருந்து இந்நோய் மற்றவர்க்கு பரவாது என்று உலக சுகாதார மையம் தெள்ளத் தெளிவாகக் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

     கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும். துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
    வித்யா பாலன்
     இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில், கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×