search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆரி
    X
    ஆரி

    மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஆரி

    நெடுஞ்சாலை படம் மூலம் பிரபலமான நடிகர் ஆரி மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.







    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறை அறிவிப்பை வரவேற்பதாக கூறிய நடிகர் ஆரி, மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     காரணம் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை தான் தற்போது இங்கு உள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து துறையினரும்  செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி உயிரை துச்சமென நினைத்து நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     எனவே இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

    மேலும் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலில் இருந்து இந்நோய் மற்றவர்க்கு பரவாது என்று உலக சுகாதார மையம் தெள்ளத் தெளிவாகக் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
    Next Story
    ×