என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பெண் ஒருவர் செல்போனில் குறுஞ்செய்தி மூலம் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல சின்னத்திரை நடிகை டொவோலீனா பட்டாசார்ஜி. இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். பரத நாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். கடந்த வருடம் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஹான் கான், ரஸாமி தேசாய் ஆகியோரும் பங்கேற்று டொவோலீனாவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். 

    அப்போது அர்ஹானுக்கும் ரஸாமிக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த காதல் முறிவு விவகாரத்தை சொல்லி அர்ஹான் கானை டொவோலீனா அடிக்கடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சபீகா என்ற பெண்ணிடம் இருந்து செல்போனில் கொலை மிரட்டல் குறுந்தகவல் வந்துள்ளது.

    டொவோலீனா

    அதில் “அர்ஹான் கானை தொடர்ந்து கேவலப்படுத்தி வருகிறாய். ரஸாமி தேசாய், சித்தார்த் சுக்லா ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலை செய்வது தெரியும், அர்ஹானை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள். இனிமேல் பேசினால் அது உனது கடைசி நாளாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி டொவோலீனா, மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.
    கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் 3 படங்களுக்கு கதை தயார் செய்துவிட்டதாக சின்னி ஜெயந்த் கூறியுள்ளார்.
    ‘கொரோனா’ வைரஸ் பரவுவதன் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து நடிகர்-நடிகைகள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்த ஓய்வு நாட்களை ஒவ்வொரு நடிகர்-நடிகையும் பயனுள்ள வழிகளில் கழிக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் ஓய்வு நேரத்தில் என்ன செய்தார்? என்பதை இங்கே கூறுகிறார்.

    “இந்த நாட்களில், 3 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதினேன். ‘வெற்றிப்பாதை’ என்ற புத்தகத்தை எழுதினேன். வீட்டின் அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கினேன். சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள். அவர்களுக்கு நகைச்சுவையாக பேசி, நடித்துக் காட்டினேன். தியானம் செய்யும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

    எம்.ஜி.ஆரின் பொன்னான மந்திர வார்த்தைகளான “ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள், ஒரு ‘பவர்’ கிடைக்கும் என்று கூறினேன். தற்போது நான் 4 புதிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். அந்த படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வரும்”. இவ்வாறு சின்னி ஜெயந்த் கூறினார்.
    பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.
    ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும் வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார். 

    இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின் சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல் கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த நடிகை சோபனாவின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்துள்ளனர்.
    80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர் நடிகை சோபனா. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும்  நடித்துள்ளார்.

    இந்நிலையில் ஷோபனாவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கை மர்ம நபர்கள் சில ஹேக் செய்துவிட்டனர். சமீப நாட்களாக அதில் வெளிநாட்டினர் சிலரது வீடியோக்கள் தனது பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போல ஐந்து வீடியோக்கள் மர்ம நபர்களால் இவரது அதிகாரபூர்வ பக்கத்தில் போடப்பட்டுள்ளது. இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார் சோபனா.
    சோபனா
    ஹேக் செய்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
    கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ஊரடங்கை நேசிப்பதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.
    தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

    பிகினி உடையில் ராதிகா ஆப்தே


    தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஊரடங்கை நேசிப்பதாகவும் கடலில் கொரானா இல்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
    இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
    சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.

    மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.

    தற்போது சமூக வலைத்தளங்களில்  தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் "இது என் உடல்.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்" என கேட்டுள்ளார்.

    "எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்."

    "இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள் என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும், வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்," என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

    நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை அனுஷ்கா, தந்தைக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
     ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வரும் நடிகை அனுஷ்கா, தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் அப்பா ஏ. என்.விட்டல், அம்மா பிரபுல்லா ஆகியோருடன் இருக்கும் படத்தை பதிவு செய்துள்ளார்.

    இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அனுஷ்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது மிகவும் அழகான, அன்பான, உற்சாகமான தந்தை நீங்கள். எங்களுக்காக சிறந்த விஷயங்களை செய்திருக்கிறீர்கள். இன்று உங்கள் நாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள், ஏனென்றால், அது எங்களை மகிழ்விக்கும். இனிய பிறந்த நாள் அப்பா என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
    பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் அருண் விஜய், ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்.
    வாரிசு நடிகராக அறிமுகமானாலும் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னேறியவர் அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த அருண் விஜய், சமீபத்தில் மாபியா என்ற திரைப் படத்தில் மிகவும் ஸ்டைலான நடிகராக மாறியுள்ளார்.

    அருண்விஜய்

    தற்போது அருண்விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி... தன்னம்பிக்கையோடு உழைத்திடு! உயர்ந்திடு!" என்று கூறியுள்ளார்.

    ஊரடங்கு நேரத்தில் தினந்தோறும், தன்னால் முடிந்த ஊக்கத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரின் ட்வீட்கள் ஊக்கத்துடனும் துடிப்புடனும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    அருண்விஜய் இந்த ஆண்டு நிறைய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
    தற்போது தமிழில் பிரபல நடிகராக இருப்பவர், சிம்புதான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியுள்ளார்.
    வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர், ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    சிம்பு, விஷ்ணு விஷால்

    தற்போது இவரது நடிப்பில், காடன், எப்.ஐ.ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் விஷ்ணு விஷால், தனது முதல் படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகில் எனது முதல் நண்பர் சிம்பு என்று கூறியுள்ளார். மேலும், சிம்பு, தொழில்துறையில் மிகவும் வெளிப்படையாக பேசும் நபர் எனக் கூறும் விஷ்ணு, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை பகிர்ந்து கொள்வதாகக் கூறுகிறார். தான் ‘ராட்சசன்' திரைப்படப் படப்பிடிப்பில் இருக்கும்போதே, சிம்பு சினிமா மற்றும் நடிப்பு குறித்த பெரும் அறிவைப் பெற்றார் எனக் கூறியுள்ளார்.

    சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலம் சொல்லியிருக்கிறார் மன்சூரலிகான்.
    தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக மட்டும் இன்றி, ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் மன்சூரலிகான், அரசியலில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு சமூக பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

    இன்று சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்றதோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப் தளத்தில் நடிகர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ளார்.

    தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருக்கும் ‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரிப்பதோடு, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான மகிமா நம்பியார், ஒரு அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறாராம்.
    குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மகிமா நம்பியார். புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். ஓவியங்கள் வரைந்து பொழுதை கழித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    யோகா பயிற்சியில் நடிகை மகிமா

    இந்நிலையில், அவர் இன்சோம்னியா நோயால் அவதிப்பட்டு வருகிறாராம். இன்சோம்னியா என்பது ஒருவகை தூக்கமின்மை வியாதி. இந்த நோயில் இருந்து மீள 6 முக்கிய யோகாசனங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இது தனக்கு மிகவும் தேவையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.
    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வேலையிழந்து தவிக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்காக பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

    திரைப்பிரபலங்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் பெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
    ×