என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பல வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் 25 நாளில் 18 முறை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.

    தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் தான்.

    அப்படி இந்த சமயத்தில் தான் இயக்கிய படங்கள் 18 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது என்று மோகன் ராஜா கூறியுள்ளார்.

    மேலும், என் மகள் என்னிடம் 'அப்பா நீங்க இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி என்கிற படங்கள் கடந்த 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்' என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள் என்றார்.
    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அம்மாவிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அதை செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
    நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.  

    பைக் மீதான ஆர்வம் எப்படி வந்தது என அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. 18 வயது ஆன பிறகு தான் என்னையும் எனது சகோதரையும் டிரைவிங் கற்றுக்கொள்ள அனுமதித்தார்கள்.  

    பைக் ஓட்டிய மாளவிகா மோகனன்

    நாங்கள் வசித்த பில்டிங்கில் நண்பர் ஒருவர் புல்லட் பைக் வைத்திருந்தார். என் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த பைக் ஓட்ட பழகினேன் என்றார்.

    மேலும் ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டியது பற்றி பேசிய அவர் "சென்ற வருடம் ஜூனில் டெல்லி சென்றிருந்தபோது, அங்கு நண்பர்களை ரேஸ் சர்கியூட்டில் சந்தித்தேன்.  அப்போது நானும் ரேஸ் பைக் ஓட்டலாம் என நினைத்தேன். ஓட்டவும் செய்தேன். ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை. ஆனால் என்ஜாய் செய்தேன் என கூறியுள்ளார் மாளவிகா.
    கிட்டத்தட்ட ஒரு மாதமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்த சமந்தா, தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். 

    இருப்பினும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என இயங்கி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா. கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் எந்த பதிவும் இடாமல் இருந்து வந்தார். 

    இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சமந்தா, நீண்ட தூக்கத்திலிருந்து திரும்பியிருக்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி விடுத்த சவாலை ரஜினி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த  நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார். அவரின் சவாலை ஏற்று ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.

    பின்னர் ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்த ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவிக்கு சவால்விட்டார். இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்தது மட்டுமில்லாமல், தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து அசத்தினார் சிரஞ்சீவி. இதுபோன்று செய்து வீடியோ பதிவிடுமாறு அவர் ரஜினிகாந்திற்கு சவால் விட்டுள்ளார். சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய் சேதுபதி உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும்  வருகிறார். 

    மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது உப்பென்னா கதை குறித்து விஜய்யிடம், விஜய் சேதுபதி பேசியதாகவும், அப்போது இந்த கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து உப்பென்னா படத்தின்  தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றி உள்ளார்.  

    இந்நிலையில், உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக் மூலம் விஜய் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

    தற்போது கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவரும் சஞ்சய், சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
    எழுதி, இயக்கி திரைப்பிரபலங்களுடன் கமலும் பாடியுள்ள "அறிவும், அன்பும்" என்ற விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர். 

     "அறிவும், அன்பும்"  என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர். இன்று வெளியான அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    அப்பாடல் வரிகள் இதோ: “பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே. தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே. அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை, அடாத துயர்வரினும் விடாது வென்றிடுவோம். அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு. அதில் நீரே பெருமளவு நாம் அதிலும் சிறிதளவே.

    சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. உலகிலும் பெரியது உம், அகம் வாழ் அன்புதான்.. உலகிலும் பெரியது நம், அகம் வாழ் அன்புதான்.. புதுக்கண்டம், புது நாடு என வென்றார் பல மன்னர். அவர், எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால், உள்ளன்பால் உடன்வாழ்ந்து, உயிர் நீத்து, அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார்.

    அழிவின்றி வாழ்வது நம் அறிவும், அன்புமே! சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே!“
    கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதி வழங்கி விஜய் தானத்தளபதி என்று நிரூபித்து விட்டார் என பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளித்தும் விஜய் ஏன் எதுவும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறார் என்ற கேள்வி எழுந்தது. 

    இந்நிலையில், நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி நிதி வழங்குவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து விஜய்யின் சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை! தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி! என கூறியுள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, படம் ரிலீசாகும் முன்பே அதன் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார்.
    விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. 

    தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். இப்படம் கொரோனா ஊரடங்குக்கு பின் ரிலீசாக உள்ளது.

    விஜய்சேதுபதி

    இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திலும் அவர் வில்லனாக நடிப்பாரா அல்லது தயாரிக்க மட்டும் உள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    22 பேர் ஆட வேண்டிய கிரிக்கெட் விளையாட்டை தனியா ஆடிய சாந்தனுவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது.

    ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டிங், பவுலிங், பீல்டிங், அம்பையரிங் என அனைத்தையும் அவர் ஒருவரே செய்வது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் மகேந்திரன்  "என்ன கொடுமை மச்சான் இது... 22 பேர் ஆட வேண்டிய கேம நீ மட்டும் ஆடுற... கோ கொரோனா கோ"  என கமெண்ட் செய்துள்ளார்.

    View this post on Instagram

    #QuarantineLife w/out wife 😂🤣

    A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu) on

    10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.
    இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தினக்கூலி தொழிலாளர்களும், வெளிமாநில தொழிலாளர்களும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் உணவு கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். 

    அதில் சிலருக்கு நடிகை தமன்னா உதவி உள்ளார். மும்பை குடிசை பகுதிகளில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.

    தமன்னா

    இதுகுறித்து தமன்னா கூறும்போது, “ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நல்ல நடவடிக்கை. இயல்புநிலை திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இதனால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தினமும் வேலை செய்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

    யாரும் பசியோடு தூங்க கூடாது என்று முடிவு எடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் தாராளமாக நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ தமன்னா ரூ.3 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    பெண் ஒருவர் செல்போனில் குறுஞ்செய்தி மூலம் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல சின்னத்திரை நடிகை டொவோலீனா பட்டாசார்ஜி. இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். பரத நாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். கடந்த வருடம் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஹான் கான், ரஸாமி தேசாய் ஆகியோரும் பங்கேற்று டொவோலீனாவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். 

    அப்போது அர்ஹானுக்கும் ரஸாமிக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த காதல் முறிவு விவகாரத்தை சொல்லி அர்ஹான் கானை டொவோலீனா அடிக்கடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சபீகா என்ற பெண்ணிடம் இருந்து செல்போனில் கொலை மிரட்டல் குறுந்தகவல் வந்துள்ளது.

    டொவோலீனா

    அதில் “அர்ஹான் கானை தொடர்ந்து கேவலப்படுத்தி வருகிறாய். ரஸாமி தேசாய், சித்தார்த் சுக்லா ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலை செய்வது தெரியும், அர்ஹானை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள். இனிமேல் பேசினால் அது உனது கடைசி நாளாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி டொவோலீனா, மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.
    கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் 3 படங்களுக்கு கதை தயார் செய்துவிட்டதாக சின்னி ஜெயந்த் கூறியுள்ளார்.
    ‘கொரோனா’ வைரஸ் பரவுவதன் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து நடிகர்-நடிகைகள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்த ஓய்வு நாட்களை ஒவ்வொரு நடிகர்-நடிகையும் பயனுள்ள வழிகளில் கழிக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் ஓய்வு நேரத்தில் என்ன செய்தார்? என்பதை இங்கே கூறுகிறார்.

    “இந்த நாட்களில், 3 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதினேன். ‘வெற்றிப்பாதை’ என்ற புத்தகத்தை எழுதினேன். வீட்டின் அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கினேன். சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள். அவர்களுக்கு நகைச்சுவையாக பேசி, நடித்துக் காட்டினேன். தியானம் செய்யும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

    எம்.ஜி.ஆரின் பொன்னான மந்திர வார்த்தைகளான “ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள், ஒரு ‘பவர்’ கிடைக்கும் என்று கூறினேன். தற்போது நான் 4 புதிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். அந்த படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வரும்”. இவ்வாறு சின்னி ஜெயந்த் கூறினார்.
    ×