என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவரும் பிரியாமணி, அடுத்ததாக சரித்திர படம் ஒன்றில் நக்சலைட்டாக நடிக்கிறார்.
    2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    நடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக  நடிக்கிறார். 

    பிரியாமணி

    வேணு உடுக்குலா இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
    திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் இந்தி நடிகர் அர்ஹான் கானும் தொலைக்காட்சி தொடர்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரஸாமி தேசாயும் பங்கேற்றனர். பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினார். 

    அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த ரஸாமி தேசாய் அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டார். ரஸாமியின் வங்கி கணக்கில் இருந்து அர்ஹான் கான் பணம் எடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஸாமியிடம் அர்ஹான் கான் பணமோசடி செய்ததாக ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்கினர்.

    அர்ஹான் கான், ரஸாமி

    இந்த நிலையில் பணமோசடி குறித்து ரஸாமி அளித்துள்ள பேட்டியில் “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். அர்ஹான் கான் எனது பணத்தை எதற்காக என்னுடைய வங்கி கணக்கில் இருந்து எடுத்தார் என்பது தெரியாது. இதன் மூலம் அர்ஹான்கான் எனக்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை அவர் தர மறுக்கிறார். இந்த சம்பவம் என்னை மன ரீதியாக பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

    அர்ஹான் கான் கூறும்போது, “ரஸாமியின் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இருக்கிறேன். எனது லாபம் மற்றும் கடனை திருப்பி தந்ததன் மூலம் இந்த தொகை எனக்கு வந்து இருக்கலாம்” என்றார்.
    பெப்சிக்கு ஏற்கனவே ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் உதவிகள் வழங்கி உள்ளார்.
    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள், உதவி இயக்குனர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் நிதி மற்றும் உதவி பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான ‘பெப்சி’க்கு ஏற்கனவே ரூ.50 லட்சம் நிதி வழங்கினார். தற்போது பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் உதவிகள் வழங்கி உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 1,500 பேருக்கு உதவும் வகையில் 2 லாரிகளில் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி உள்ளார்.

    நலிந்த இயக்குனர்கள் மற்றும் துணை, இணை இயக்குனர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேட்காமலேயே இயக்குனர் சங்கத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ரஜினிகாந்த்

    சின்னத்திரை நடிகர்கள் மற்றும் சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்துக்கும் தலா 550 மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உள்ளார். இதற்காக ரஜினிகாந்துக்கு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் தளபதி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோல் சினிமா பி.ஆர்.ஓ. சங்க உறுப்பினர்கள் 71 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உள்ளார்.
    கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வேதனை தெரிவித்துள்ளார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும்.

    வீட்டுக்குள்ளேயே இருப்போம். வீட்டில் இருக்கும்போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பலர் சொல்லி விட்டனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே நிச்சயம் இந்த கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உலகின் தலைசிறந்த சொல், செயல். அதனை செய்து காட்டுவோம்.

    இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

    மேலும் டிக் டாக்கில் 1500 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.  இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தெரு நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வருகிறார்.
    தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள நான்கைந்து தெருக்களுக்கு தினமும் செல்கிறார். உடன் உணவுகளுடன் அவரது உதவியாளர்களும் செல்கிறார்கள். தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு ராஷ்மிகா உணவு கொடுக்கிறார்.
    ராஷ்மிகா
     இது பற்றி அவர் சொல்லும்போது, 'இந்த ஊரடங்கு சமயத்தில் வாயில்லாத ஜீவன்கள் அதிக சிரமம் படுகிறார்கள். அதை அவர்களால் சொல்ல முடியாது. நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாய்களுக்கு உணவும் நீரும் கொடுங்கள். பூனைகளுக்கும் சோறு போடுங்கள்' என்கிறார்.


    தமிழ் மலையாள மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பார்வதி, அழுதேன், ஏமாற்றப்பட்டேன் என்று சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
    இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இதை தொடர்ந்து தனுஷ் உடன் 'மரியான்', 'பெங்களூர் டேஸ்' தமிழ் ரீமேக்கான 'பெங்களூர் நாட்கள்', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ போட்டோவை பகிர்ந்து, ''எனக்கு கேமரா என்றாலே பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன். 
    குழந்தைப்பருவத்தில் பார்வதி
    அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன் மக்களே.  நான் சிரித்தால் ஜெம்ஸ் (சாக்லெட்) வெளியில் வரும் என்றார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
    நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா என்று பதிவு செய்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் விவேக். விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் காமெடியில் அசத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் பாடகி ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ஜானகி பாடிய 'சிங்காரவேலனே நீ வா' எனும் பாடலை குறிப்பிட்டு, இந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா, கந்தர்வ கான குரலிசை' என பெருமையாக பதிவிட்டுள்ளார். 


    தலையணை மட்டும் அணிந்து மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நடிகை தற்போது பேப்பருக்கு மாறி இருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு  தலையணை சவால் வந்தது.

    அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டார்.  அந்த புகைப்படம் வைரலானது.

    நடிகை பாயல் ராஜ்புட் பேப்பரை ஆடையாக வடிவமைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

    தற்போது பேப்பரை ஆடையாக வடிவமைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட், உதயநிதி ஸ்டாலின் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். 
    சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

    சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:-

    நடிகை ஜோதிகா


    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான் பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர். ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.

    இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை’ என பேசி உள்ளார்.ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    படப்பிடிப்பின் போது இருமல், காய்ச்சல் இருந்ததை அஜித்திடம் சொல்லவில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் லைலா. ஷங்கரின் 'முதல்வன்', அஜித்துடன் 'தீனா', 'பரமசிவன்', விக்ரமுடன் 'தில்', சூர்யாவுடன் இணைந்து 'நந்தா', 'உன்னை நினைத்து', 'மௌனம் பேசியதே', 'பிதாமகன்', என இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

    தீனா படத்தில் லைலா, அஜித்


    இந்நிலையில் நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் 'தீனா' பட நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் ''எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று தீனா.

    இந்த படத்தில் காதல் வெப்சைட் பாடல் பதிவின் போது எனக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு கடுமையான இருமல், காய்ச்சல் இருந்தது. ஆனால் நான் அஜித் உட்பட யாரிடமும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இந்த பாடலில் உள்ள எனர்ஜி எனக்கு எனர்ஜி அளித்து நடனமாட வைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
    பல வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் 25 நாளில் 18 முறை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.

    தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் தான்.

    அப்படி இந்த சமயத்தில் தான் இயக்கிய படங்கள் 18 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது என்று மோகன் ராஜா கூறியுள்ளார்.

    மேலும், என் மகள் என்னிடம் 'அப்பா நீங்க இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி என்கிற படங்கள் கடந்த 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்' என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள் என்றார்.
    ×