என் மலர்
சினிமா

விஜய்
புதிய உச்சத்தைத் தொட்ட வாத்தி கம்மிங் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
மேலும் டிக் டாக்கில் 1500 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Next Story






