என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெடுஞ்சாலை படம் மூலம் பிரபலமான நடிகர் ஆரி மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.







    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறை அறிவிப்பை வரவேற்பதாக கூறிய நடிகர் ஆரி, மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     காரணம் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை தான் தற்போது இங்கு உள்ள மேலே குறிப்பிட்ட அனைத்து துறையினரும்  செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து விலகி உயிரை துச்சமென நினைத்து நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     எனவே இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடக்கம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

    மேலும் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலில் இருந்து இந்நோய் மற்றவர்க்கு பரவாது என்று உலக சுகாதார மையம் தெள்ளத் தெளிவாகக் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

     கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும். துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
    வித்யா பாலன்
     இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில், கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரேணிகுண்டா படம் மூலம் மிகவும் பிரபலமான தீப்பெட்டி கணேசன், அஜித்தின் உதவியை எதிர்பார்த்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
    ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் இருந்தார்.

    தொடர்ந்து வறுமையில் வாடி வரும் அவருக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் அவரது குடும்பம் வாடி வந்தது. அவருக்கு நடிகர் விஷால் தரப்பில் சமீபத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைக்கப்பட்டது.  
    தற்போது அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விட்டுள்ளார். அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை என கூறியுள்ளார்.
    அஜித்
    "என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள்.  ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என பல முறை முயற்சித்தேன். அஜித் சார் பார்த்தால் என் குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
    எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நடிகர் ராஜ் கிரண் காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.
    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களுக்காக சேவை செய்து வருகின்றனர் மருத்துவர்கள், செவிலியர்கள். இந்நிலையில் கொரோனா நோய் தாக்கி டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக் பதிவு

    நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் இதுகுறித்து, “எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்றால், இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும். இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்...”

    இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார்.
    கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார்.
    கொரொனா ஊரடங்கு காரணமாக  மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    முக்கியமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் பெப்சி மற்றும் தலைவி படக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கி உள்ளார்.
    பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

    கங்கனா ரணாவத்

    கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை கங்கனா நிதி உதவி அளித்துள்ளார். பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும், தலைவி படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்.

    நயன்தாரா, காஜல் தவிர தமிழில் பல படங்களில் நடித்த நடிகைகள் பலரும் உதவாத நிலையில் நடிகை கங்கனாவின் இந்த உதவி தொழிலாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
    மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மம்முட்டியுடன் பிரபல நடிகை முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
    1995-ல் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர், இதுவரை கிட்டத்தட்ட 50 படங்கள் வரை நடித்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகட்டும், அல்லது தற்போதைய செகன்ட் இன்னிங்ஸ் ஆகட்டும், இத்தனை வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட இவர், மம்முட்டி படத்தில் மட்டும் நடித்ததே இல்லை.

    மஞ்சு வாரியர், மம்மூட்டி

    மஞ்சு வாரியர் தனது படத்தில் நடிப்பதை மம்முட்டி விரும்பவில்லை என்றே மலையாள திரையுலகில் சொல்லப்பட்டு வந்தது..காரணம் நடிகர் திலீப்பை செல்லப்பிள்ளையாக பாவித்து வந்த மம்முட்டி, ஏனோ அவரது மனைவியான மஞ்சு வாரியருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இந்தநிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ இயக்கும் ‘தி பிரைஸ்ட்’என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. இந்தப்படத்தில் மம்முட்டிமஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்நாள் காட்சியை படமாக்கும்போது தான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என கூறுகிறார் இயக்குனர் ஜோபின் டி சாக்கோ.
    விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் அஜித்.
    எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். படத்தில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஊரடங்குக்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்டுகள் தயாராக இருந்துள்ளது.

    ஆனால், தனது உதவியாளரிடம் கூறி விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் அஜித். இவர் ஒரு பைக் ரேசர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். நீண்ட தூரம் பைக் ஓட்டி செல்வது அஜித்துக்கும் மிகவும் பிடித்தமான ஓன்று. இந்நிலையில்தான் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு சுமார் 600 கிலோமிட்டர் பைக்கில் பயணம் வந்துள்ளார்.
    மனித நேயத்தை காப்போம் என்று நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மருத்துவர் ஒருவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்போட அடக்கம் செய்ய வேண்டிய நிலை இன்னைக்கு இருக்கு. கோவிட் 19 நோய் தொற்று உள்ளவங்களுக்கு சிகிச்சை அளித்து, அதனால அவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கார். அவர் உடலை அடக்கம் பண்ண மக்கள் தகராறு பண்றாங்க. ஏன்னா, தொற்று பரவிரும்னு பயப்படறாங்க. சில மருத்துவ உண்மைகள் புரியலைன்னு நினைக்கிறேன்.

    கொரோனா வைரஸ் இறந்த உடல்ல இருக்காது. அதனால் எரித்தாலும் புதைத்தாலும் எந்த ஆபத்துமில்லை. பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் இப்ப நடமாடும் தெய்வங்கள். அவர் இருக்கும்போது கொண்டாட முடியலைன்னாலும் இறந்த பிறகாவது அவரை அவமானப்படுத்தாம இருக்கணும். மனித நேயத்தை காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிரஞ்சீவி, நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை வீட்டு வேலை செய்யுமாறு பிரபல நடிகர் சவால் விட்டுள்ளார்.
    கொரானோ ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள வேலைகளை பெண்கள் மட்டும் செய்யாமல் ஆண்களும் செய்து வருகிறார்கள். பலரும் அவர்களது அம்மா, மனைவி, சகோதரிகளுக்கு உதவி செய்கிறார்கள். அது குறித்து பல மீம்கள் கூட சுற்றிக் கொண்டிருக்கின்றன. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, வீட்டு வேலைகளை செய்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, அது போல இயக்குனர் ராஜமவுலியும் செய்ய வேண்டும் என்று சவால் வைத்தார்.

    அதை உடனடியாக ஏற்ற ராஜமவுலி அது போல வீட்டு வேலைகளைச் செய்து அந்த வீடியோவைப் பதிவிட்டுடார். மேலும், அது போல செய்ய, ஜுனியர் என்டிஆர், ராம்சரண், இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் மரகதமணி, பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு ஆகியோருக்கும் சவால் விடுத்தார்.

    இதனை ஏற்று வீட்டு வேலை செய்யும் வீடியோவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், இயக்குனர் கொரட்டல சிவா ஆகியோர் இதை செய்யுமாறு சவால் விட்டுள்ளார்.
    அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் முன்னோட்டம்.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    இதில் ஜோதிகா உடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மி சரவணகுமார், பொன் பார்த்திபன், பெட்ரிக் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனிக்கிறார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, தனது அடுத்த படத்திற்காக பயிற்சி எடுத்து வருகிறாராம்.
    நடிகர் அல்லுஅர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. 

    இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். அவருக்கு கிராமத்து பெண் வேடம். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ராஷ்மிகா, கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை பார்த்து பயிற்சி எடுத்து வருகிறாராம். 
    ×