என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். ஓ மை கடவுளே, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்றார். தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். 

    அடுத்ததாக விஜய் சேதுபதி, தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

    விஜய் சேதுபதி, கமல்ஹாசன்

    இந்நிலையில் அது என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் பட கதைப்படி நாசர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில், அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டில் தங்கள் உறவினர்களோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களோடு அவ்வப்போது உரையாடி வருகின்றனர்.

    அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் இணைந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் மனைவியுடன் சமைக்கும் புகைப்படத்தையும், தற்போது லாக்டவுன் சமயத்தில் வீட்டில் மனைவியுடன் சமைப்பதையும் ஒப்பிட்டு "காலம் மாறினாலும்.... செய்யும் விஷயங்கள் மாறவில்லை" என பதிவிட்டுள்ளார்.
    சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றிகண்ட நிலையில், அதன் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    வெற்றி பெறும் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன. அதேபோல் லாரன்ஸின் காஞ்சனா படமும் 3 பாகங்களாக வந்து வெற்றி கண்டது. தற்போது சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.

    சென்னை 28 படக்குழு

    இந்நிலையில், சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகியது. இப்படமும் நல்ல வசூல் பார்த்தது. தற்போது சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வெங்கட்பிரபு ஆலோசித்து வருகிறார். சூழ்நிலை சரியாக அமைந்தால் சென்னை-28 மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.  
    ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தைப்பற்றி விரைவில் ஒரு நல்ல செய்தி காத்தோடு வரும் என அப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
    வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் ஜெயில். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், ஒருசில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போனது. கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா அதற்கு தடையாக அமைந்தது.

    இந்நிலையில், விரைவில் ஜெயிலைப்பற்றி காத்தோடு ஒரு நல்ல செய்தி வரும் என வசந்தபாலன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஜெயில் என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுதிசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. 

    ஜெயில் படக்குழு

    ஆழ்துளைகிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம். இதற்கிடையில் கொரோனோ வேறு உலகை தன் பிடிக்குள் வைத்து கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனோ வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப்பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளை திறக்கிறேன்.
    மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடித்து வந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவிவந்த நிலையில், இயக்குனர் ஜீத்து ஜோசப் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்துக்கு, ‘ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், மோகன்லால் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 50 சதவீத படம் வளர்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    மீதமுள்ள காட்சிகளை லண்டனில் படமாக்கப்பட வேண்டியிருப்பதால், இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஜீத்து ஜோசப் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் பரவின.

    திரிஷா

    இந்நிலையில் அதுகுறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:  ராம் படத்தை நான் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான செய்தி. இதன் மீதி படப்பிடிப்பு லண்டனிலும், உஸ்பெகிஸ்தானிலும் நடத்த வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த செல்லும் அளவுக்கு நிலைமை சீரானதும் ராம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்” என கூறியுள்ளார்.
    அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி இருக்கு என்று நடிகர் சாந்தனு பயத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார். 

    இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் பிரபலங்கள் பலரும் ரசித்து பாராட்டு தெரிவித்தார்கள். 

    இந்நிலையில் இந்த குறும்படத்தை சாந்தனுவின் தந்தை இயக்குநர் கே பாக்யராஜ் பார்த்திருக்கிறார். இவர் பார்க்கும் போது சாந்தனுவிற்கு பயம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், Biggest task of #KonjamCoronaNaraiyyaKadhal was showing the movie to d ‘HeadMaster’, my dad #KBhagyaraj 😂🤪 It was like passing the +2 examination ! “ அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி ” 😂🤣 Watch #KoCoNaKa here on #WithLoveShanthnuKiki என்றும், That “நீ படிச்ச ஸ்கூல் ல நா ஹெட்மாஸ்டர் டா" moment 🤓🙆🏻‍♂️ என்று பதிவு செய்துள்ளார்.
    கொரோனா நிவாரணத்துக்காக தான் உடுத்திய உடைகளை ஏலம் விட்டு வருகிறார் நடிகை நித்யாமேனன்.
    மெர்சல், 24 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். சில மாதங்களுக்கு முன் நடந்த பே‌ஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் பங்கேற்றார். அதில் தான் அணிந்த உடையை அவர் முதல் கட்டமாக ஏலம் விடுகிறார். அதை தொடர்ந்து படங்களில் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட உள்ளார். 

    இது பற்றி நித்யா மேனன் கூறியது:- ‘நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100 சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெ‌ஷலாக செய்யப்பட்டது. பே‌ஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது. 

    இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளை தயாரிப்பவர் என்றார்.
    சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி இப்படம் வருகிற மே 29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை மே 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    அஜீத்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வீட்டில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணியாளராக இருந்துவரும் 23 வயதான சரண் சாஹு என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போனி கபூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "என் வீட்டில் பணியாளராக இருக்கும் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நான், என் மகள்கள் வீட்டிலிருக்கும் மற்ற பணியாளர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு நகரவில்லை.

    மருத்துவக் குழு தந்துள்ள அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம். சரண் விரைவில் குணமடைந்து எங்கள் வீட்டுக்குத் திரும்புவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்"

    இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

    'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்
    வீட்டில் இருக்க போர் அடிக்கிறதா, என் கூட விளையாட வாங்க என்று நடிகை தமன்னா ரசிகர்களை அழைத்திருக்கிறார்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில், தற்போது தமன்னா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எப்படி தான் இந்த லாக்டவுனை சமாளிக்கிறீங்களோ தெரியலை.. எனக்கு ரொம்ப போர் அடிக்குது.. வீட்டுலயே சும்மா இருக்க முடியல.. அந்த போரிங்க சமாளிக்க ஆன்லைன் கேம் விளையாடுறேன்.. நீங்களும் என்னோட விளையாட வாங்க, நாம விளையாடலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    எனக்கு மூன்று கேம்கள் பிடிக்கும். கிரிக்கெட், பிரி பயர், செஸ் ஆகிய விளையாட்டுகள் பிடிக்கும். முடிந்தால் என்னுடைய ஸ்கோரை முந்துங்கள் பார்க்கலாம். இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா நடித்துள்ள படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் தற்போது கா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நாஞ்சில் இயக்கி வரும் இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

    காட்டுக்குள் நடக்கும் அதிரடி சம்பவத்தை மையமாக வைத்து திரில்லர் படமாக கா உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை வரும் 20ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார்.

    கா திரைப்படத்தின் போஸ்டர்


    முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் ஆண்ட்ரியாவை படத்தில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அசோக், மனிதம் என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்
    முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து,  ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 (மூன்று) படங்களிலும் நடித்து வருகிறார்.

    நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.

    மனிதம் குறும்படம்


    இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சினிமாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த இயக்கமும் தடைபட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பசியோடு இருப்பவர்களின் பசியினை பல்வேறு தன்னார்வலர்கள் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வருவதற்கு மனிதம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற அடிப்படையிலும் 'மனிதம்' என்கிற குறும்படத்தை நடித்து இயக்கியிருக்கிறார் அசோக்.

    மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார். இந்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    ×