என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கதிர், அவர்களின் வேலை நமக்கு ஒர்க் அவுட் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் கதிர். இவர் நடித்த கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்புக்காக விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் மண்வெட்டியை வைத்து மண் அள்ளிப்போடும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், விவசாயிகளின் அன்றாட வேலைதான், சிட்டி வாழ்க்கையில் ஒர்க் அவுட்டாம். என்ன சொல்றது போங்க...' எனவும் அவர் பதிவிட்டுள்ளார். கதிரின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது.
எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது.
கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது”.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் விநியோகஸ்தருக்கு கைகொடுக்க புதிய ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இணையதளத்தில் வெளியிட பிரபல ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதால் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மாஸ்டர் படத்திற்கான திரையரங்கு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக லலித் கைப்பற்றியிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு நடிகர் விஜய், அவரது தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். படம் 2020 தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், நான் இப்படிதான் ஆடுவேன் என்று ரஜினி பட நடிகை கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ''இந்த ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், நான் இப்படிதான் ஆடுவேன். எப்போது அந்த காலம் வருமோ..?!" என பதிவிட்டுள்ள அவர், அதற்கு ரொம்பவே ஜாலியாக ஆடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஹூமா குரேஷியின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.

விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக, வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து, தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.

தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள் மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ‘இந்தியன் 2’ படத்தை கைவிட்டு விட்டார்கள் என்று தகவல் பரவியது. கொரோனா நெருக்கடியால் லைகா நிறுவனத்தின் வியாபாரங்களில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களால் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனால் இறுதி கட்ட பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தவுடனே, ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளை படக்குழு தொடங்கிவிட்டது. இரண்டு இடங்களில் இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளே அதிக அளவில் இருப்பதால் அவற்றைச் சுருக்கி வருகிறது படக்குழு. கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் அந்தப் பணிகளை முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்கும் தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்கிறார்கள் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள். ஈவிபி அரங்கில்தான் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. எனவே அங்கிருந்து அரங்குகள் அனைத்தையும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிட்டது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு அங்குதான் தொடங்கவுள்ளது.

ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா போன்ற ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. படம் இயக்குவதைப்போல் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'நான் தான் சிவா' என்ற படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். இப்படத்தை ஆர் பன்னீர்செல்வம் இயக்கி உள்ளார்.

லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோசின் மகன் வினோத் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மேலும் டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.
கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார்.
ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.

எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.
நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.
37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார்.
பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு கொரோனா ஊரடங்குக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் தமன்னா, வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தினந்தோறும் போட்டோ, வீடியோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொபைல் ஆப் மூலம் வைத்த மீசை என்றாலும், பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, தனது தந்தை முரளி குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இன்றைய இளம் கதாநாயகர்களில் முன்வரிசையில் உள்ளவர், அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்தாலும், தனது கடின உழைப்பால் திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வருகிறார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது தந்தை முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நான் பார்த்ததில் மிக பணிவான மற்றும் வலிமையான நபர் நீங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நாங்கள் உங்களை விரும்புகிறோம், தினமும் உங்களை மிஸ் பண்றோம் என கூறி குழந்தையாக அப்பாவின் கழுத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
To the coolest and the strongest person I’ve ever know . Happy birthday dad ! We love you and miss you everyday ! 🤗✨ pic.twitter.com/jOWhjL9Mwl
— Atharvaa (@Atharvaamurali) May 19, 2020