என் மலர்
சினிமா செய்திகள்
முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அசோக், மனிதம் என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்
முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 (மூன்று) படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சினிமாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த இயக்கமும் தடைபட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பசியோடு இருப்பவர்களின் பசியினை பல்வேறு தன்னார்வலர்கள் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வருவதற்கு மனிதம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற அடிப்படையிலும் 'மனிதம்' என்கிற குறும்படத்தை நடித்து இயக்கியிருக்கிறார் அசோக்.
மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார். இந்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.

மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார். இந்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.
அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார். தற்போது பியானோவால் 'நீயும் நானும்... ' என்ற பாடலையும், ஜெர்சி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது. இசை பிரியர்கள் அனைவரும் இதை ரசித்து சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார். தற்போது பியானோவால் 'நீயும் நானும்... ' என்ற பாடலையும், ஜெர்சி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது. இசை பிரியர்கள் அனைவரும் இதை ரசித்து சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
துப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றிய அமிதாப் பச்சன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தி திரையுலக மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது ‘ஜல்சா’ பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாராந்திர ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். இந்தநிலையில், ஜல்சா பங்களா வீட்டு முன் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
அப்போது துப்புரவு பணியாளர்கள் முன் அமிதாப் பச்சன் தோன்றி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சந்திப்பின் போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அடுத்ததாக அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.
இதையடுத்து சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. சிம்பு பிற படங்களில் பிசியாக உள்ளதால் அதனை முடித்துவிட்டு நடிப்பதாக சொல்லிவிட்டாராம். அந்த இடைவெளியில் அருண்விஜயை வைத்து படம் இயக்க முடிவெடுத்த மிஷ்கின், தற்போது அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மிஷ்கின்-அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சாதே படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் அடுத்த பாகத்தை மிஷ்கின் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
72 லட்சம் பாலோவர்கள் இருந்தும் நடிகை பிரியா வாரியர் திடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. லட்சக்கணக்கானோர் ரசிகர்களானார்கள். குறுகிய நாட்களிலேயே பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 72 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.
இது இந்தி பட நடிகைகளை மிஞ்சிய சாதனையாக பேசப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் பிரியா வாரியர் திடீரென்று இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி உள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியர் பற்றி சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கேலியும் செய்தனர். அவரை மோசமாக திட்டவும் செய்தார்கள். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனாலேயே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இது இந்தி பட நடிகைகளை மிஞ்சிய சாதனையாக பேசப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் பிரியா வாரியர் திடீரென்று இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி உள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியர் பற்றி சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கேலியும் செய்தனர். அவரை மோசமாக திட்டவும் செய்தார்கள். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனாலேயே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக செய்தி பரவி வந்த நிலையில், நடிகர் சாந்தனு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சாந்தனு நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாந்தனு, வானம் கொட்டட்டும் படத்தில் எனது நடிப்பை பார்த்த மணிரத்னம், அதன் இயக்குனர் தனாவிடம் பாரட்டியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் என்னை நடிக்க வைக்கலாம் என மணிரத்னம் முதலில் யோசித்தாராம். ஆனால் வயது வித்தியாசம் காரணமாக அவர் அந்த யோசனையை கைவிட்டுவிட்டார். எனவே நான் அந்த படத்தில் நடிக்கவில்லை, என சாந்தனு கூறியுள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கிற்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் தாக்கரே படத்தில் பால்தாக்கரே வேடத்திலும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லானாகவும் நடித்து உள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் முதல் மனைவி ஷீபா.
இவருடனான நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் இரண்டாவதாக ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நவாசுதீன் சித்திக்- ஆலியா தம்பதியின் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொகை கேட்டு ஆலியா வக்கீல் அபய் சஹாய் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் விரைவு தபால் வசதி கிடைக்காததால் அவருக்கு இந்த விவாகரத்து நோட்டீஸ் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நோட்டீஸ் தொடர்பாக நடிகர் நவாசுதீன் சித்திக் இன்னும் பதிலளிக்கவில்லை என்று வக்கீல் அபய் சஹாய் கூறினார். இதுபற்றி ஆலியா கூறும்போது, 'விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே கடுமையானவை' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தான் இளம் வயதில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 14 வயது சிறுவனாக இருந்தபோது எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதை மனமுறுகி பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள செல்வா(வயது14), இந்த உலகம் உன்னுடைய கண்ணில் உள்ள குறைபாட்டை கண்டு சிரித்தது. ஒவ்வொரு இரவும் நீ அதை நினைத்து அழுதிருக்கிறாய். சில நேரங்களில் கடவுளிடம், ஏன்? எதற்காக என்னுடைய கண்ணை எடுத்தீர்கள் என்று கேட்டிருக்கிறேன்.

ஆனால், அதற்கு அவர் கவலைப்படாதே செல்வா, சரியாக இன்னும் 10 ஆண்டுகளில் நீ எழுதி இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பாய். அது உன் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும். அப்போது இதே உலகம் உன்னை கேலி செய்யாமல், மரியாதையுடன் பார்க்கும். அடுத்த பத்து ஆண்டுகளில் நீ எடுக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங்காக அமையும். மக்கள் உன்னை "மேதை" என்று அழைப்பார்கள்.
மக்கள் இப்போது உன்னைப் பழையபடி பார்க்க மாட்டார்கள். திரைப்படங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய மனிதராக பார்ப்பார்கள். கடவுள் உன்னிடம் இருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துவிட்டார் என்றால், அதைவிட மிகுதியான ஒன்றைத் திருப்பி கொடுத்துவிடுவார். அதனால், கவலைப்பாடாதே. புகைப்படங்களுக்குச் சிரி, எதிர்காலத்தில் பல புகைப்படங்களுக்குச் சிரிக்க வேண்டிய நிலை வரும். உன்னை நேசி. இயக்குனர் செல்வராகவன்(வயது 45)" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக திகழ்கிறது. இப்பூங்காவில் பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்து உள்ளார். இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு முதல் இந்த புலியை தத்தெடுத்துள்ளார். இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் வெளியிடும் சூர்யாவின் துணிச்சலை, இயக்குனர் பார்த்திபன் பாராட்டி உள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி படம் இணையதளத்தில் வெளியாகிறது.
இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா, வேண்டாமா? என்று யோசிக்கிற ஒரு நிலைமை வந்து விட்டது. திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சட்ட திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள் இப்படி நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது.

தைரியம்தான் புருஷ லட்சணம் என்பார்கள். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கவுரவ காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார். சூர்யாவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து ரஜினியின் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடித்தும் பிரபலமானார். தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.
நவாசுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான புதானாவுக்கு சென்றார். இதற்காக மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதி சிட்டும் பெற்று இருந்தார். நவாசுதீன் சித்திக்குடன் அவரது குடும்பத்தினரும் சென்று இருந்தனர்.

கிராமத்தை அடைந்ததும் முஜாபர் நகர சுகாதார அதிகாரிகள் நவாசுதீன் சித்திக்குக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுபோல் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடந்தது. அவர்களுக்கும் தொற்று இல்லை. ஆனாலும் நவாசுதீன் சித்திக்கை வீட்டிலேயே 14 நாட்கள் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.






