என் மலர்
சினிமா செய்திகள்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் வெளியிடும் சூர்யாவின் துணிச்சலை, இயக்குனர் பார்த்திபன் பாராட்டி உள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணையதளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி படம் இணையதளத்தில் வெளியாகிறது.
இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா, வேண்டாமா? என்று யோசிக்கிற ஒரு நிலைமை வந்து விட்டது. திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சட்ட திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள் இப்படி நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது.

தைரியம்தான் புருஷ லட்சணம் என்பார்கள். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கவுரவ காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார். சூர்யாவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து ரஜினியின் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடித்தும் பிரபலமானார். தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.
நவாசுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான புதானாவுக்கு சென்றார். இதற்காக மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதி சிட்டும் பெற்று இருந்தார். நவாசுதீன் சித்திக்குடன் அவரது குடும்பத்தினரும் சென்று இருந்தனர்.

கிராமத்தை அடைந்ததும் முஜாபர் நகர சுகாதார அதிகாரிகள் நவாசுதீன் சித்திக்குக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுபோல் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடந்தது. அவர்களுக்கும் தொற்று இல்லை. ஆனாலும் நவாசுதீன் சித்திக்கை வீட்டிலேயே 14 நாட்கள் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
அஜித்-விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித்குமாரின் ‘அமராவதி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோர் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் வந்தார். சங்கவி நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016-ல் தனது 38-வது வயதில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது 42-வது வயதில் சங்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘எனது அழகான தேவதை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. சங்கவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல வில்லன் நடிகர் ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னாள் காதலியுடன் எடுத்த நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தமிழில் அலெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து விவாகரத்து செய்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மகள் வயது பெண்ணை மணப்பதா? என்று விமர்சனங்கள் கிளம்பின. மிலிந்த் சோமன் 25 வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மதுசாப்ரேவுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருந்தார். அதில் இருவரும் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தனர். மிலிந்த் சோமன் கழுத்தில் ஒரு மலைப்பாம்பையும் போட்டு இருந்தார். இந்த விளம்பர படத்துக்கு எதிராக அப்போதே மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் மிலிந்த் சோமன் வெளியிட்டு, “இது 25 வருடம் பழமையான படம். அப்போது சமூக வலைத்தளங்கள், இணையதளம் கிடையாது. இப்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டால் என்ன எதிர்வினைகள் வரும் என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மிலிந்த் சோமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சிலர் தயாராகி வருகிறார்கள்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா விஜய்யை விடாமல் துரத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை. பேட்டி கொடுக்கும் போது எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ தளபதி விஜய் என்கிறார். மேலும் ட்விட்டரில் யாராவது உங்களுக்கு பிடித்த கோலிவுட் நடிகர் யார் என்று கேட்டால், விஜய் பெயரை சொல்லிவிடுகிறார்.
இந்நிலையில் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ராஷ்மிகா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேட்டார். உடனே ராஷ்மிகா விஜய்யின் கில்லி படம் என்றார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் இது பொய். ராஷ்மிகாவுக்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும். அதற்காக இப்படி பொய் சொல்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாபியா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய மகன் அர்னவ், சமீபத்தில் குட்டிகளுடன் இருந்த தெருநாய்க்கு தனது மகன் சாப்பாடு போட்டதாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு குட்டிகளுக்கு அந்த நாய் பால் கொடுத்ததையும் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
எனது மகன் இரக்கமுள்ள குணமுடன் வளர்ந்து வருவதை பார்த்து ஒரு அப்பாவாக நான் பெருமை அடைகிறேன் என்றும் அருண்விஜய் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை ராம் கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் ’கிளைமாக்ஸ்’. சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது.
ஊரடங்கு முடிந்தவுடன் இப் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா, தற்போது தன் முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
தன்னைப்பற்றி வந்த செய்தியை நடிகை பிரியா பவானி சங்கர் படித்து ரசித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவருடன் காதல் என்பது குறித்த பதிவை நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்தார். அந்த பதிவை வைத்து அவருடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இதனையடுத்து அவரது தரப்பினர் விளக்கம் அளித்தபோது பிரியா பவானி சங்கரின் காதலுக்கும் அந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பிரேக் அப் குறித்த வதந்திகளை அவர் படித்து சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகளை படித்து தான் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் வீடியோ ஒன்று சமூக வலை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.
பழைய வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில் தன் மனைவி கீர்த்தியுடன் இணைந்து சாந்தனு எடுத்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலை எட்டு மணிக்கு அலாரம் அடிக்கும் போது சாந்தனு தூக்கத்திலிருந்து கண் விழிப்பதாக அந்த குறும்படம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து காலையில் காபி போடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என்று அனைத்து வேலைகளையும் சாந்தனு செய்து கொண்டிருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு தயிர்சாதம், ஊறுகாய் என சாந்தனு கூறியதும் ‘எனக்கு உருளைக்கிழங்கு பொரியல் வேண்டும். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. எளிமையாக செய்து விட முடியும்’ என்று கீர்த்தி கேட்கிறார். அவரும் சரி என கூறிக்கொண்டே சமைக்க சென்று விடுகிறார்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என உட்காரும் போது தனக்கு கிரீன் டீ வேண்டும் என்று கீர்த்தி கேட்கிறார். அதை சமைத்துக் கொண்டு இருக்கும் சாந்தனு திடீரென அதிர்ச்சியடைகிறார். அப்போது தான் அனைத்தும் கனவு என்பது அவருக்குப் புரிகிறது. தொடர்ந்து, “கனவில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் பெண்களைப் போல வேலை செய்வதற்கே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே, இந்த குவாரன்டைன் முழுவதும் அவர்கள் வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.
இது நன்றிக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர்கள் செய்யும் வேலைகளில் கொஞ்சம் நாமும் கூட, மாட வேலை செய்தால் அவங்க பாரம் கண்டிப்பா கொஞ்சம் குறையும்.” என்று அவர் கூறுகிறார். ‘இந்த குவாரன்டைன்ல இருந்து நான் புதிய மாற்றத்தைக் கொண்டு வரப் போறேன்’ என்று கூறியவாறு கீர்த்திக்கு காபி போட்டுக் கொடுக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலை எட்டு மணிக்கு அலாரம் அடிக்கும் போது சாந்தனு தூக்கத்திலிருந்து கண் விழிப்பதாக அந்த குறும்படம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து காலையில் காபி போடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என்று அனைத்து வேலைகளையும் சாந்தனு செய்து கொண்டிருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு தயிர்சாதம், ஊறுகாய் என சாந்தனு கூறியதும் ‘எனக்கு உருளைக்கிழங்கு பொரியல் வேண்டும். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. எளிமையாக செய்து விட முடியும்’ என்று கீர்த்தி கேட்கிறார். அவரும் சரி என கூறிக்கொண்டே சமைக்க சென்று விடுகிறார்.

இது நன்றிக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர்கள் செய்யும் வேலைகளில் கொஞ்சம் நாமும் கூட, மாட வேலை செய்தால் அவங்க பாரம் கண்டிப்பா கொஞ்சம் குறையும்.” என்று அவர் கூறுகிறார். ‘இந்த குவாரன்டைன்ல இருந்து நான் புதிய மாற்றத்தைக் கொண்டு வரப் போறேன்’ என்று கூறியவாறு கீர்த்திக்கு காபி போட்டுக் கொடுக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் எம்.எம்.கீரவாணி. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
சர்வதேச அளவில் வெற்றி பெற்ற பாகுபலி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடமாக இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடம் மரகதமணி என்கிற பெயரிலும் நன்கு அறிமுகமானவர்.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு இசையமைத்து வரும் கீரவாணி, சமீபத்தில் ஒரு பேட்டியின்போது விரைவில் தான் இசைத்துறையை விட்டு ஓய்வுபெற போவதாக சொல்லியிருக்கிறார்.

முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.
தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.
11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஷூட்டிங் பணிகளை தொடங்க அனுமதி கோரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் சார்பில்: T. சிவா, இயக்குனர் மனோபாலா, PL. தேனப்பன், JSK. சதிஷ் குமார், G. தனஞ்செயன், R.K. சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் அமைச்சரை சந்தித்தனர்.