என் மலர்tooltip icon

    சினிமா

    ராம் கோபால் வர்மா - மியா மல்கோவா
    X
    ராம் கோபால் வர்மா - மியா மல்கோவா

    கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது... படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ராம் கோபால் வர்மா

    கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை ராம் கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.
    பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் ’கிளைமாக்ஸ்’. சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

     இந்த நிலையில்  ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது. 

     ஊரடங்கு முடிந்தவுடன் இப் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா, தற்போது தன் முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். 
    Next Story
    ×