என் மலர்tooltip icon

    சினிமா

    அனிருத்
    X
    அனிருத்

    அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்

    தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் பியானோ வாசிப்புக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.

    அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடுவார். தற்போது பியானோவால் 'நீயும் நானும்... ' என்ற பாடலையும், ஜெர்சி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து பதிவு செய்திருக்கிறார்.

    இந்தப் பதிவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது. இசை பிரியர்கள் அனைவரும் இதை ரசித்து சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
    Next Story
    ×