என் மலர்tooltip icon

    சினிமா

    அசோக்
    X
    அசோக்

    மனிதம் பற்றி அசோக் இயக்கிய குறும்படம்

    முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அசோக், மனிதம் என்ற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்
    முருகா, பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து,  ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 (மூன்று) படங்களிலும் நடித்து வருகிறார்.

    நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.

    மனிதம் குறும்படம்


    இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சினிமாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த இயக்கமும் தடைபட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பசியோடு இருப்பவர்களின் பசியினை பல்வேறு தன்னார்வலர்கள் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வருவதற்கு மனிதம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற அடிப்படையிலும் 'மனிதம்' என்கிற குறும்படத்தை நடித்து இயக்கியிருக்கிறார் அசோக்.

    மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார். இந்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    Next Story
    ×