என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் கடலுக்கடியில் நடத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா நடிகைகளுக்கு போட்டியாக தற்போது சீரியல் நடிகைகளும் வித விதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் நடிகை சரண்யா சமீபத்தில் தனது காதலனுடன் நடத்திய போடோஷூட் மிகவும் வைரலானது. அதில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த போட்டோஷூட்டை அவர்கள் கடலுக்கடியில் நடத்தி உள்ளனர்.
இந்தியாவிலேயே கடலுக்கடியில் ஜோடியாக எடுத்த முதல் போட்டோ ஷூட் இது தானாம். இதுகுறித்து சரண்யா கூறியதாவது: சுறாக்கள் நிறைந்த கடலில் போட்டோஷூட் நடத்தியது பயமாக இருந்தாலும் புது அனுபவமாக இருந்தது. நீச்சல் உடைகள் இல்லாமல் சாதாரண உடையில் கடலுக்கடியில் இருப்பது சவாலாக இருந்தது. காதல் இவை அனைத்தையும் மறக்கடித்து விட்டது என கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா. இவர் ராகுல் என்பவரைக் காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டில் தனிமையில் இருக்கும் பிரபல நடிகை ஒருவர், பெத்த மகனை கட்டிப்பிடிக்க முடிய வில்லையே என வேதனையுடன் கூறி உள்ளார்.
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அந்த வகையில், தயாரிப்பாளர் போனிகபூர் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும், திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழும் பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோராவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக தனிமையில் உள்ளதால், தனது மகனை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லையே என்று வருத்தமாகக் கூறியுள்ளார். தன் மகன் அர்கான் மற்றும் செல்ல நாய்க்குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது: சமூக விலகல் மற்றும் கட்டாய தனிமை காரணமாக இன்னும் சில நாட்கள், என் குழந்தைகளை என்னால் கட்டித் தழுவ முடியாது. இருப்பினும் அவர்களின் இனிமையான முகங்களை பார்க்கும் போது எனக்கு உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது என்று கூறியுள்ளார்.

நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்கான் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ்கானை பிரிந்த மலைக்கா அரோரா தனது மகனுடன் வசித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம் பெற்ற தைய தைய தைய்யா தைய்யா பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும் என்று சௌந்தரராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்.
இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. அவர்கள் குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். பலரும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும்.
நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் அவர் வந்தால் சிறப்பாக இருக்கும். என்னுடைய விருப்பம் மட்டுமில்லை, பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. அவர்கள் குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். பலரும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும்.
நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் அவர் வந்தால் சிறப்பாக இருக்கும். என்னுடைய விருப்பம் மட்டுமில்லை, பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்று பிரபல நடிகையின் தந்தை பகீர் தகவல் அளித்துள்ளார்.
பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என தெரிகிறது.

இந்தநிலையில் மலையாள திரையுலகிலும் கூட போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது என தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் பகீர் தகவலை கூறியுள்ளார்.

“மலையாள திரையுலகிலும் போதை பொருட்கள் புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. படப்பிடிப்பு சமயங்களில் சில புரோடக்சன் பையன்களே எங்களிடம் வந்து, “சார், கேரவனுக்குள்ளேயே நுழைய முடியவில்லை.. அந்த அளவுக்கு வாடை அடிக்கிறது” என அடிக்கடி கூறிய நிகழ்வுகளும் உண்டு என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர்கள், நடிகைகள் பலரும் இந்தி தெரியாது போடா டி-சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் மேலும் ஒரு நடிகை அணிந்து புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ’இந்தி தெரியாது போடா ’மற்றும் ’I am a தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதுகுறித்து ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் ஒருவரான சாந்தினி தமிழரசன் ’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சாந்தனு நடித்த ‘சித்து+2’ என்ற படத்தில் அறிமுகமான சாந்தினி தமிழரசன், அதன்பின் ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘பில்லா பாண்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மருத்துவர் உதவியுடன் 20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 14) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கடைசியாக 10 ஆம் தேதி உங்களிடம் பேசியிருந்தேன். இன்று தேதி 14. இந்த நான்கு நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது.
பிசியோதெரபியும் நடந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் அப்பாவை உட்கார வைத்தார்கள். அப்பாவால் தொடர்ந்து 15-20 நிமிடங்களுக்கு உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. அப்பா சீராக இருக்கிறார். முன்னேற்றம் தொடர்கிறது. இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லி குடும்பத்தில் நடந்த சோகத்தால் இதயம் உடைந்து போயிருக்கிறது என்று அவர் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
பிரபல இயக்குனர் அட்லியும் நடிகை பிரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் பிரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:-

பிரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் எனக்கு இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துபோயிருக்கிறது.

எங்கள் குடும்பம் ஒரு தூணை, நல்ல நண்பரை இழந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள்.
நாம் வாழும் ஒவ்வொரு நாளும் கடவுளின் பரிசாகும். இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா அறிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசு, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிக்கிறார்கள். நீட் போன்றதொரு மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளையும் உயிர்களையும் பறிக்கிறது.
மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும். அன்பான குடும்பம், நல்ல உறவு, நண்பர்கள் என இந்த அற்புத வாழ்வுக்கு முன்னால், தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம். மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களின் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டதுபோல, நவீன துரோணர்கள் குழந்தைகள் தேர்வெழுதி தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. நாளையும் நடக்கும். சாதரண குடும்ப பிள்ளைகளின் டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட் தேர்வு” என்று குறிப்பிட்டிருந்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், “முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் கொண்டாடும் விதமாக வைக்கப்படும் பேனர் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? இதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே. தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட ஒருவகையில் தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்” என்று கூறியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டம்.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். வருகிற அக்டோபர் 30ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாக உள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா, தனஞ்ஜெயன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர் பாரதி ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவே புதிதாக சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலுவானவர்கள் எல்லோரும் இணைந்துள்ளோம்.
திரையரங்க உரிமையாளர்கள் அவர்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். எங்கள் துணைத்தலைவர் எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. பதில் அளித்த பின்னர் சங்கத்தில் ஆலோசித்து எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் அவருடைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரம் வலுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த டிசர்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு நடிகர்கள், இளைஞர்கள், அந்த வாசகத்துடன் டிசர்ட் அணிந்து தங்களின் புகைப்படத்தை வெளியிட்டு மொழி உணர்வை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலடியாக பா.ஜனதாவினர் எனக்கு இந்தி தெரியும் போடா என்ற வாசகத்துடன் டிசர்ட் அணிந்து அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இருதரப்புக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கன்னட திரையுலகிலும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் வலுத்துள்ளது. பிரகாஷ்ராஜ் இந்திக்கு எதிரான டி சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கர்நாடக வரைபடத்துடன் கூடிய அந்த டி சர்ட்டில் இந்தியைத் திணிப்பதை எதிர்த்த வாசகம் இடம் பெற்றுள்ளது. என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எனது கற்றுக் கொள்ளுதல் என்பது என்னுடைய விருப்பத்திற்குரியது. எனது வேர் மிகவும் ஆழமானது. எனது பெருமை எனது தாய்மொழி. இந்தியைத் திணிக்காதே என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த டுவிட் வைரலாகியுள்ளது.

கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் பலரும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்செய் ஆகியோரும் தங்களது டி சர்ட் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் டிரண்ட் பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






