என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரை தொடர்ந்து பிரபல நடிகையான அஞ்சலியுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘பூச்சாண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பேண்டஸி காமெடி கலந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் ராமர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

    பூச்சாண்டி

    தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, மதுர படங்களில் நடித்த சோனியா அகர்வால், தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்.
    காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். இவர் டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

    தற்போது தன்னுடைய முகம் மற்றும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய புது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள். 

    சோனியா அகர்வால்

    தற்போது இவரது நடிப்பில் வன்முறை திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.

    முன்னணி நடிகராக இருக்கும் அஜித் என்னுடைய தயக்கத்தை போக்கினார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி பேட்டியளித்துள்ளார்.
    உறியடி படத்தின் சண்டைக்காட்சிகள் மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றவர் விக்கி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது. அடுத்து சூரரை போற்று படமும் இவருக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்கிறார்கள். 

    விக்கி அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘வீரம் படப்பிடிப்பில் அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார். என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. 

    விக்கி

    வீரம் படத்தை அடுத்து, உறியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவன், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வோரு சண்டைக்காட்சியையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்.
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இப்படத்தில் இடம் பெறும் ரகிட ரகிட என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தில் இடம் பெறும் ‘புஜ்ஜி’ என்ற வீடியோ பாடலை தீபாவளி தினத்தை முன்னிட்டு 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவரும் தற்போது நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நீச்சல்குள பிகினி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
    தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

    ரைசா

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் நீச்சல் குளத்தை விரும்புவேன், நீச்சல் குளம் என்னையும் விரும்புகிறது’ என்று அந்த பதிவில் ரைசாவில்சன் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியின் வாழ்க்கை கதையை படமாக்க பிரபல இயக்குனர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
    அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படமாக வந்துள்ளன. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை சினிமா படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது:-

    “நான் இதுவரை வாழ்க்கை கதைகளை படமாக எடுக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு படத்துக்கு தேவையான அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் உள்ளன. அவரது தீவிர ரசிகன் நான், அவரது நடிப்பு, ஸ்டைல் அனைத்தும் பிடிக்கும். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளார். நல்ல குடும்ப பின்னணியை கொண்டவர். 

    லிங்குசாமி

    ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஆரம்பித்து எல்லா பக்தி மார்க்கங்களிலும் தொடர்பு உள்ளவர். அவரது வாழ்க்கையை படமாக்கினால் மக்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும். முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு அவரது வாழ்க்கை படம் முன்மாதிரியாகவும் இருக்கும். அவரது வாழ்க்கை கதையை திரையில் இளைஞர்கள் பார்க்கும்போது இன்னும் உழைக்க வேண்டும் என்ற வேகம் வரும். ரஜினியின் அனைத்து பேட்டிகளையும் நான் படித்து வருகிறேன். ரஜினி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் தனுசுக்கு நன்றாக வரும்.”

    இவ்வாறு அவர் கூறினார். தனது வாழ்க்கையை படமாக்க ரஜினி ஒப்புதல் அளிப்பாரா என்று தெரியவில்லை.
    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்து தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறார் சிம்பு.
    சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்தனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்து. இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்திலும், பொங்கல் தினத்தில் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

    சிம்பு

     இந்நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது. இதை அறிவித்து புகைப்படம் ஒன்றை சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நாளை திறக்க இருப்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு நாளை (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து தியேட்டர்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரிய கதாநாயகர்கள் படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும் தற்போதையை சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டு குத்து 2, களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்கள் மட்டும் திரைக்கு வர தயாராக உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

    ஆனால் வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா அறிவித்து இருப்பது புது படங்கள் ரிலீசில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் சமரசம் ஏற்படவில்லை. 

    அஜித் விஜய்

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர் கூறும்போது, “அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்” என்றனர். 

    ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விசுவாசம், தனுசின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
    தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
    தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டனர். 

     இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.

    சிரஞ்சீவி

    இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
    நடிகை தீபிகா படுகோனே மேலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவுக்கு போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    இந்த நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, கடந்த மாதம் 27-ம் தேதி திடீரென நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா சிக்கியதாகக் கூறப்பட்டது. மேலும், கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.

    இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அதன்படி அவர் அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை என்று அவரது வக்கீல் கூறினார். இதையடுத்து, வரும் 10-ம் தேதி கரிஷ்மா பிரகாஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதேபோல், போதை பொருள் வழக்கு ஒன்றில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கைக்கு முன் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அதில் 10 கிராம் மாரிஜுவானா என்ற போதை பொருள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

    இந்நிலையில், போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலா விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
    அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். 

    முற்றிலும் கிராமப்புற பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது. 

    சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி அபர்ணா அளித்த பேட்டி:
     சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். சூர்யா சாரின் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார் எனக்கும் சரி சமமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது பெரிய விஷயம். 

    அபர்ணா பாலமுரளி, சூர்யா

    இந்த பொம்மி கதாபாத்திரம் காலகட்டங்களை தாண்டி நிற்கும். சிறு வயதில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கதை படிக்கும் காலகட்டத்தில் அவரை பார்த்து பயந்தேன். படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப கூலாக இருந்தார். சூர்யா சாரின் படத்தில் நடிப்பதால் அவரது ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×