என் மலர்
சினிமா செய்திகள்
யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபமாகவே நடிகர்களின் வித்தியாசமான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகின்றன. நடிகர் மன்சூர் அலிகான், நாசர், கருணாஸ், மனோபாலா உள்ளிட்ட நடிகர்கள் போட்டோஷூட் செய்து அதை தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விவேக் வெள்ளை நிற உடையில் தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து கருப்பு நிற கோட் ஷூட்டிலும் கலக்கலாக போஸ் கொடுத்திருந்த விவேக்கின் புதிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்தப் புகைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளர் சத்யா ஆடை வடிவமைத்திருந்தார்.

விவேக்கின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு நடிகர்களுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வந்தார்கள். மேலும் மற்ற நடிகர்களுக்கு போட்டியாக விவேக் களம் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் தேனிலவுக்கு சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் தேனிலவுக்காக கணவருடன் இணைந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் காஜல் அகர்வால். எந்த ஊருக்குச் செல்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் பயணம் குறித்த பதிவுகளை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ராய் லட்சுமி தனது தந்தை மறைவு குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், அவர் தனது தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: என் தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களைப் போல யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் வேதனையில் உள்ளது. மன்னிக்கவும், உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்துக் கொள்கிறேன்.
நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருந்தது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்பது உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களைத் தருவீர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை நீங்கள் முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
ஒரு பொன்னான இதயம், துடிப்பதை நிறுத்திவிட்டது. என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும் உங்களை கடவுள் விரும்பி எடுத்துக் கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது சர்ச்சையான நிலையில், இயக்குனர் சுசீந்திரன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோ வைரலாகப் பரவிய, அதே வேளையில், சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பை வைத்து படமாக்கியதாக அப்படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், கம்பியூட்டர் கிராபிக்ஸ் செய்யும் போது, கசிந்த காட்சிகள் குறித்து விசாரித்து வருவதகாவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுப்படுத்தி உள்ளதாக சுசீந்தீரன் தெரிவித்து உள்ளார்.
அஜித் பட நடிகை ஒருவர் தயாரித்து நடித்த நட்கட் என்ற குறும்படம் ஆஸ்கர் விருது விழாவுக்கு தேர்வாகி உள்ளது.
பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.


சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார். இந்நிலையில், வித்யா பாலன் தயாரித்து நடித்துள்ள, நட்கட் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது. அதோடு இது சிறந்த இந்திய குறும்படத்துக்கான விழாவில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடுத்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு அக்டோபர் 6-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், சனம் ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிறந்தநாளைக் கொண்டாடும்போது கண் கலங்கினார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்தனர். ரேகா, பாடகர் வேல் முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.


இன்று கமல் தனது பிறந்தநாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாடினார். போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து கமலுக்கு சிறப்பு கேக் செய்து அனுப்பினார்கள். மேலும், அவரது பாடல்களை போட்டியாளர்கள் பாடி வாழ்த்து கூறினார்கள்.

இதை கேட்ட கமல், நீங்கள் பாடும் போது எனக்கு 2 பேர் ஞாபகம் வருகிறார்கள். ஒருவர் இளையராஜா, மற்றொருவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள். கடந்த சில வருடங்களாக எஸ்பிபி தொடர்ந்து என்னுடைய பிறந்தநாளுக்கு என்னை சந்தித்து வாழ்த்து சொல்லுவார். ஆனால் இந்த வருடம் சொல்ல முடியவில்லை.
கடந்த வருடம் என்னை அவர் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வாய்ஸ் மூலம் எனக்கு வாழ்த்து சொன்னார். அந்த வாழ்த்து இன்று நான் கேட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை இந்த வார்த்தையை கேட்டு கொண்டே இருப்பேன். என்றார்.

பின்னர் போட்டியாளர்கள் அனைவருக்கும் எஸ்பிபியின் வாழ்த்தை கேட்க வைத்தார். அதை கேட்கும் போது போட்டியாளர்கள் உட்பட கமல் மேடையில் கண் கலங்கினார்.
சுந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வரும் சிம்பு, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது.

சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் பாலாவின் சிரிப்பை நிறுத்த சொல்லி கமல் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்தனர். ரேகா, பாடகர் வேல் முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் பேசுவதற்கும், குறும்படம் காட்டுவதற்கும் பல விஷயங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் முதலாவது சனம் பாலாஜி பிரச்சினையை கையில் எடுக்கிறார் கமல். அதன்பிறகு அந்த ஒரு வார்த்தையை குறித்து விசாரிக்கிறார். பாலாஜியை சிரிக்க வேண்டாம் என்று கூறியும், அதன் பிறகு அவரிடம் விளக்கம் கேட்கவும் செய்கிறார். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தையடுத்து கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் இப்படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர் கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் படம் நடித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டைட்டில் லுக் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் முன்னணி பிஆர்ஓ- வாக இருக்கும் நிகில் முருகன், பவுடர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்க இருக்கிறார்.
சினிமாவில் முன்னணி பிஆர்ஓ- வாக இருப்பவர் நிகில் முருகன். இவர் 300 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது பவுடர் படம் மூலம் நடிகராக களமிறங்கி இருக்கிறார்.

பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி வருகிறார். இவர் 'தாதா 87' படத்தில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் பவுடர் படத்தில் வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்க வலிமை மிக்க போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ நிகில் முருகன்.
இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை 'பவுடர்' படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன். ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன். என்றார்.






