என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

    கடந்த நவம்பர் 4-ம் தேதி தனது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

    இந்தப் புகைப்படம் குறித்து கோவா சுரக்‌ஷ் மன்ச் என்கிற அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. புகாரில் ஆபாசமான இந்தப் புகைப்படத்தால் கோவாவின் கலாச்சாரத்தை களங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிலிந்த் சோமன்

    முன்னதாக கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் நடிகை பூனம் பாண்டே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததற்காக அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மிலிந்த் சோமனை மட்டும் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட் பிரபலமானதால் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
    தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் இந்தியிலும் அதிக படங்களில் வந்தார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

     வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பையும் எற்படுத்தி கொடுத்தார். படத்தில் வில்லனாக நடிக்கும் நீங்கள் நிஜத்தில் ஹீரோ என்று சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். 

    சோனு சூட்

    இந்த நிலையில் சோனுசூட் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க கால்ஷீட் கேட்டு அவரை அணுகியபோது ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. கொரோனாவுக்கு முன்பு ரூ.2 கோடி வாங்கினார் என்கின்றனர்.
    தமிழில் புதிய முகம், காதலர் தினம், மே மாதம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகர் வினித் பெயரில் பண மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    தமிழில் ஆவாரம்பூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினித். புதிய முகம், காதலர் தினம், மே மாதம், ஜாதிமல்லி, சந்திரமுகி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். வினித் பெயரில் ஆன்லைனில் பண மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

    வினித் பெயரில் போலி கணக்கை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு பணம் பறித்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வினித் அதிர்ச்சியானார். இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் எங்கள் குடும்ப படத்தையும் எனது சமூக வலைத்தள கணக்கை போலியாக பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    வினித்

    வினித் அளித்துள்ள பேட்டியில், ‘எனது நண்பரிடம் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பேசி உள்ளது. அவர்தான் இந்த மோசடியை என்னிடம் தெரிவித்தார். மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.
    தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிஹரிகாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நிஹரிகா. தற்போது அசோக் செல்வன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். 

    இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். நிஹரிகாவுக்கும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு என்பவருக்கும் திருமணம் முடிவானது. 

    நிஹரிகா

    கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். 
    இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.
    விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், 
    அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இதற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டார்.

     இந்நிலையில், இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி, ஒரு இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி, “நான் என் மகனுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அவன் நன்றாக இருக்க வேண்டுமென்று 1993இல் அவருக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன். தற்போது அவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார். அதனால் அவர் எனக்கு பிள்ளை என்று ஆகிவிடாது. அவரை நான் இன்னமும் குழந்தையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதை நான் அவரது நல்லதாகவே செய்துள்ளேன். அதை அவர் விரைவில் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். 

    தனது ரசிகர்களை நான் தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்பா அவரது நல்லதுக்குதான் செய்தார் என்பதை அவர் புரிந்து கொள்வார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். நான் பொதுவாகவே விஜய்யிடம் ஆறு மாதத்திற்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் பேசுவேன். தற்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்காது. எனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதுபோல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதை வரலாறு தானே.

    விஜய்  சந்திரசேகர்

    விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் அரசியல் கட்சியாக மாற்றி உள்ளேன். எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் இல்லை என்றால் அவர் விலகிக் கொள்ளட்டும். அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. 

    எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான். விஜய் தான் என் கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
    எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.
    விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், 
    அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

    இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா

    இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் புதிய தகவலை நடிகர் சிம்பு அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். 

    ஈஸ்வரன்

    அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு செய்து காட்டியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக சிம்பு அறிவித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும், பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் சிம்பு கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    இயக்குனர் விசு இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    விசு நடித்து இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தேசிய விருது, பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது விசுவின் மரணத்திற்கு பின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

    இயக்குனர் விசு

    சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையும், பா விஜய் பாடல்களும், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் வசந்த முல்லை படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். 

    சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது.

    இப்படத்திற்கு வசனம் - பொன்னி வளவன், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேஷன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கும் விவேக்கின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார். கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்டு வருகிறார்.

    சமீபத்தில், நடிகர் விவேக் வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    விவேக்

    தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி இருக்கிறது.
    பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கொடுத்த புகாரை நான் விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.
    பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ சார் விசாரித்து வருகின்றனர். மோசடி வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றும், இதுகுறித்து மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் சூரி தரப்பு வக்கீல் முறையிட்டார். அதேபோல, போலீஸ் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் கோரிக்கை விடுத்தார்.

    சூரி

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கைதான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி கொண்டார்.
    சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக தடம் பட இயக்குனருடன் இணைந்துள்ளார்.
    பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. 

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

    ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

    மகிழ்திருமேனி, நிதி அகர்வால், உதயநிதி ஸ்டாலின்

    இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார். அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.
    ×