என் மலர்
சினிமா செய்திகள்
ஆபாசமான வகையில் வீடியோ வெளியிட்டதற்காக இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.
கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். பின்னர் சில தினங்களில் இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போதும் தனது கணவர் சாம் பாம்பே உடன் கோவாவில் உள்ள பூனம் பாண்டே நேற்று முன்தினம் ஷப்போலி அணைக்கட்டு அருகில் நின்று ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவா முன்னேற்ற கழக மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பூனம் பாண்டே கைதாகலாம் என பரபரப்பு
ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவா கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக சர்ச்சைக்குரிய மாடல்-நடிகை பூனம் பாண்டேவை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் இயக்குனர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித் வழங்கும் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போடப்பட்டு, வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் தள்ளி போனதாகவும் விஜய் வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

பேரரசு, சுதா கொங்கரா, மகிழ் திருமேனி என பல பெயர்கள் அடிபட்டன. இந்த வரிசையில் தற்போது கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சனும் இணைந்துள்ளார். அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி உள்ளார். நெல்சன் சொன்ன குடும்ப காமெடி கதைக்கு விஜய் சம்மதம் சொல்வாரா என்பதே இப்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்பு.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மிடில் கிளாஸ் படத்தின் முன்னோட்டம்.
'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் மிடில் கிளாஸ் என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம்.
'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும். மேலும், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து விவாதங்கள் உருவாகும்.

'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் விட அரசியல் ரீதியான விஷயங்களைத் தவிர்த்தார் விஜய்.
இதனால், அரசியல் விஷயங்களில் விஜய் பின்வாங்குவதாகத் தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் காட்சியாக மாறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை:
அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது,
தமிழகத்தில் வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். புதிய படங்களை வெளியிட்ட பிறகு விபிஎப் கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும்.
திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ளதால் உடனே பேசி தீர்வு காண்பது இயலாத காரியம், தமிழ்மொழியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது அதிமுகவிற்கு தெரியும்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுகவினர் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவித்திருக்கலாமோ என கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, நவீன் சந்திரா நடிப்பில் நரேந்திரநாத் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி இருக்கும் மிஸ் இந்தியா படத்தின் விமர்சனம்.
சிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி பெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார். அதிலும் போட்டியாளரான ஜகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து எப்படி வென்றார் என்பதே கதை.


நடிகையர் திலகம் படத்துக்கு பின் தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படத்துக்கு பின் வெளியாகும் படம். இந்த படத்தில் உடல் மெலிந்து பொலிவான தோற்றத்தில் வருகிறார். கனவுகளை அடைய போராடும் கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாளராக வரும் ஜகபதிபாபுவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். சில இடங்களில் விஸ்வாசம் படத்தை நினைவுபடுத்துகிறார். ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா என கீர்த்தி சுரேசின் குடும்பத்தினராக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பு. கீர்த்தி சுரேசுக்கு உதவும் கதாபாத்திரங்களான சுமந்த், நவீன் சந்திரா இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
தமனின் பின்னணி இசையும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் படத்தை கமர்சியல் படமாக மாற்ற உதவுகின்றன. படம் முழுக்கவே வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் பிளாஷ்பேக்காக அமைத்ததால் சுவாரசியம் குறைகிறது. யூகிக்க முடிந்த காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் மில்லியன் டாலர் போட்டி ரசிக்க வைக்கிறது. வசனங்களும் அருமை. நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் அதற்கான திரைக்கதை சுவாரசியமாக அமைக்க தவறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தான் படத்தை தாங்கி இருக்கிறார். அவருக்காக மட்டுமே பார்க்கலாம்.
மொத்தத்தில் 'மிஸ் இந்தியா' திரைக்கதை மிஸ்ஸிங்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்ததற்கு, இவர் எல்லாம் அம்மனா என்று மீரா மிதுன் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆர் ஜே பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஆடி குத்து என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும் அதற்கு தயாரா எனக்கு ஆர் ஜே பாலாஜி பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த மீரா மிதுன் திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். இந்த அசிங்கம் எல்லாம் கோலிவுட் சினிமாவில் தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.
இவருடைய இந்த பதிவை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலுடன் சமரசம் ஏற்பட்டதாக வந்த செய்திக்கு வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்தார். பீட்டர் பாலின் மனைவி இதை எதிர்த்து போலீசில் புகார் அளித்ததால் இது சர்ச்சையானது. பின்னர் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றபோது வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர்.

பீட்டர் பால் மீது வனிதா பல்வேறு புகார்களை கூறினார். சமீபத்தில் வனிதா மீண்டும் பீட்டர் பாலுடன் இணைய முயன்றதாகவும் ஆனால் அதை பீட்டர் பால் ஏற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளுக்கு வனிதா விஜயகுமார் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது,
நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவில் இருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள்.

உறவு முறிவைப் பற்றி நான் பதிவேற்றிய கடைசி வீடியோவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை அவர் எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. ஆனால், முன்பு சொன்னதுபோல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என் யாருமே அவர் வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும், காதலில் மதிகெட்டும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன். எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே, இதற்கு மேல் யூகிப்பதை, விவாதிப்பதை நிறுத்துங்கள். அவரோடு எனக்குச் சட்டரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் இப்போது உணர்ச்சியற்றுப் போயிருக்கிறேன். நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் உங்கள் பணிகள் எனக்கு ஊக்கம் என்று பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. அங்கு இந்தி நடிகர் சோனுசூட்டை விஷால் சந்தித்து பேசினார். அப்போது இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். அதனை விஷால் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனுசூட் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அவர் செய்த உதவிகள் பெரிய வரவேற்பை பெற்றன.

ஐதராபாத்தில் சோனுசூட்டுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அற்புதமான ஆன்மா சோனுசூட். கடவுள் மனித இனத்துக்கு தந்த பரிசு. அறிமுகம் இல்லாத குடும்பங்களுக்கு நீங்கள் செய்த சமூக பணிகள் எனக்கு ஊக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து இதுபோல் சிறப்பாக செயல்படுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக பிரபல நடிகரின் மகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்தனர். இதையடுத்து சின்னத்திரை நடிகரான ஆசிம் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே ஹோட்டலில் இந்திரஜா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






