என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பி.வாசு அவர்களின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
‘சந்திரமுகி,’ ‘சின்ன தம்பி,’ ‘வால்டர் வெற்றிவேல்’ உள்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்த பி.வாசுவுக்கு, சக்தி வாசு என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கிறார்கள். மகன் சக்தி வாசு, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.

மகள் அபிராமி, ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர் பொன் சுந்தர். இவரும் ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார். செங்கல்பட்டை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன்.

அபிராமி-பொன் சுந்தர் திருமணம் வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே ஓட்டலில் நடைபெற இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரே இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் அந்தக் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், விஷாலோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபஸ்டியன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிவரும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் மடோனா செபஸ்டியன் வெட்டிங் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா சுசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகர் செல்ல இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகர் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகரான ஆசிம் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆசிம் பகல் நிலவு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக ஆசிம் நடித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், தமிழர்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும், தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகை சதீஷ் - சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 55.

தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர்.

இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியதற்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இயக்குனர் பெ.விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபாலின் திருமண புகைப்படம் வெளியான விவகாரத்தில் ஐகோர்ட்டு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அமலாபால். இவர், இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அமலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் என்னுடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். புகைப்படங்களை வெளியிட அவருக்கு தடை விதிக்க வேண்டும். அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகரான விஜய் ஜேசுதாஸ் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். தரவூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மீது மோதியது.


இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. எனினும் காருக்குள் இருந்த விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்த விஜய் ராஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.
நடிகர் விஜய் ராஸ், தற்போது வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மஹாராஷ்டிரா போலீசார் விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர், விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கும் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகி வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.
வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






