என் மலர்
சினிமா

இயக்குனர் விருமாண்டி
விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இயக்குனர் பெ.விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






