என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நான் பிரமாதமான நடிகன் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
    நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். யாரை சந்திக்கிறோம் யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதும் முக்கியம்.

    நான் பிரமாதமான நடிகன் இல்லை. என்னால் கேமரா முன்பு உடனே நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஒரு கதையில் எனது வாழ்க்கையில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் இருக்குமானால் தைரியமாக நடிக்க தொடங்கி விடுவேன். 

    சூர்யா

    நான் நினைத்து பார்க்காத இடம் சினிமாவில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே நல்ல வாய்ப்புகள் வரும்போது மெனக்கெட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு புது முயற்சியும் பயத்தை கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வளர்ச்சி அடைய முடியும். அடுத்த கட்டத்துக்கும் போக முடியும் என்பது எனது நம்பிக்கை. சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் புதிய முயற்சியாக இருக்கும். அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறேன். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் வாடிவாசல் என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறேன்.

    இவ்வாறு சூர்யா கூறினார்.
    இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
    இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும்போது முன்பு வந்த திரைப்படங்களான பாசமலர் போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர்.

    இரண்டாம் குத்து

    இதைவிட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள் தகாத உறவுகள் ஆகியவற்றைப் பற்றியே கூறுகிறது. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


    மனுதாரர் தரப்பில் இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ மாணவிகளின் பார்ப்பதன் மூலம் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
    மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி நேரில் ஆஜராகும் படி மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். 

    அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.

    இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலிவுட்டில் உள்ள போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரிசில் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி பயங்கரவாதியால் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

    பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில்  ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகிய இருவரும் வரும் 10-ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
    விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஜி.டி.ஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 
    நாகார்ஜுனாவுக்கு பதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
    தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு இருந்ததால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். 

    இந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடித்ததோடு சரி, தெலுங்கும் சரளமாக பேச வராது. அங்குள்ள போட்டியாளர்களை எப்படி கையாள்வது என்றெல்லாம் பயமாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனா உன்னால் முடியும் போ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். 

    சமந்தா

    அங்கு எனது மைத்துனர் அகில் வந்திருப்பதை பார்த்ததும் சகஜமானேன். நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு பலரும் என்னை பாராட்டினர். இப்போது என்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்றார். 
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
    சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

    இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். 

    சிம்பு

    அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு செய்து காட்டியிருக்கிறார். சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாம். 22 நாட்களில் சிம்பு இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஒரிரு நாட்கள் ஓய்வெடுக்க உள்ள சிம்பு, அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9-ந் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
    நடிகை லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 

    லாஸ்லியா

    இதனிடையே, நடிகை லாஸ்லியாவிற்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லாஸ்லியா, “இப்போதைக்கு திருமண என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான்,'' எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
    ‘சூரரைப் போற்று’ படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

    சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அது யார் வீட்டு திருமண விழா என்பது தெரியாமல் இருந்தது.

    சூர்யா, உத்ரா

    இந்நிலையில், அது இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண விழா என தெரியவந்துள்ளது. புதுவிதமான தோற்றத்தில் பாரம்பரிய உடையணிந்து இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, மணமக்களை வாழ்த்தினார். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்புவுக்கு, விஜய்யின் ரீல் தங்கை பரதம் கற்று கொடுத்துள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பது நடிகர் விஜய்யோட ரீல் தங்கை தான். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் தான் சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்துள்ளார்.

    விஜய், சரண்யா மோகன், சிம்பு
     
    மேலும் சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக பரதநாட்டியம் கற்கவில்லை என்றும், அவரின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
    போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தலைமறைவாக உள்ளார்.
    மும்பை :

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    இந்த நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.

    இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அதன்படி அவர் அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

    இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கரிஷ்மா பிரகாஷ் சம்மனை ஏற்று ஆஜராகாததால் அவருக்கு மேலும் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒருபோதும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பதிலும் அளிக்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

    இதற்கிடையே கரிஷ்மா பிரகாஷ் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    தனது 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கான் கூறியுள்ளார்.
    நடிகர் அமீர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.

    "என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால் இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.

    எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.

    அமீர் கான்

    எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.

    ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல" என்று ஐரா கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் நடித்து வரும் புதிய படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
    விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு, ஐதராபாத்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியது படக்குழு. இதனை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். 

    இதில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும் சில முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.  இந்நிலையில் ஜெயலலிதா பேரணி செல்வது போன்ற காட்சிகளை பிரம்மாண்டமான முறையில் சென்னையில் படமாக்க திட்டமிட்டிருந்தது படக்குழு. 

    கங்கனா

    ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான நபர்களே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தை வைத்து படமாக்க இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமென்பதால் படக்குழுவினர் அந்த காட்சியை கிராபிக்ஸ் மூலம் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    ×