என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது பெற்றோருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித் தனது பெற்றோர்களுடன் கோவிலிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வழக்கம் போல அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். 

    அஜித்

    இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வலிமை படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் அஜித் தனது பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடனும் இருப்பதை போன்ற இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
    தமிழில் முகமூடி படத்திலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கும் பூஜா ஹெக்டே சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு சினிமா பற்றி இவர் சொன்ன கருத்து சர்ச்சையாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில், தெலுங்கு சினிமாவில் பெண் கதாபாத்திரங்களைக் காட்சிப் பொருளாக்குவது குறித்து பூஜா ஹெக்டேவிடம் கேட்கப்பட்டது. 

    அவர் நடித்த 'அலா வைகுந்தபுரமுலோ' திரைப்படத்தின் காட்சியையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த பூஜா, "தென்னிந்திய சினிமாக்களுக்கு இடுப்புப் பகுதியின் மீது மோகம் இருப்பது உண்மைதான். ஆனால், ஒரு ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவைப் பற்றி பூஜா ஹெக்டே தவறாகப் பேசிவிட்டதாகவும், அவருக்குத் தொடர் வாய்ப்புகள் அளிக்கும் தெலுங்குத் திரைத்துறையைப் பழித்துப் பேசுவதாகவும் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் பூஜா ஹெக்டே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

    பூஜா ஹெக்டே

    அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் பேசிய விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நான் சொன்னவற்றைத் திரிக்கலாம். ஆனால், தெலுங்குத் திரைத்துறை மீது எனக்கிருக்கும் அன்பைத் திரிக்க முடியாது. தெலுங்குத் திரைத்துறையே எனது உயிர் மூச்சு. எனது படங்களை விரும்பும் என் ரசிகர்களுக்குக் கூட இது தெரியும். தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை". இவ்வாறு அவர் கூறியுள்ளார். அடுத்து பூஜா அகில் அக்கினேனியுடன், 'பொம்மரில்லு' புகழ் பாஸ்கர் இயக்கத்தில் 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' படங்களில் நடிக்கிறார். மேலும், பிரபாசுக்கு ஜோடியாக 'ராதே ஷ்யாம்' திரைப்படத்திலும் நடிக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.
    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை ஆர்ஜே பாலாஜி விறுவிறுப்பாக கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ படம் வெற்றியடைய தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றில் கூறியதாவது:

    ஆர்ஜே பாலாஜி அவர்களுடைய ’மூக்குத்தி அம்மன்’ தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. நான் இந்த படத்திற்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கின்றேன். நான் மட்டுமன்றி என்னுடைய குடும்பமும் என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.



    ஏனெனில் ஆர்ஜே பாலாஜி அவர்களின் கமெண்ட்ரிக்கு எங்கள் ஊர் பொதுமக்கள் மிகப்பெரிய ரசிகர்களாகிவிட்டனர். அவருடைய கமென்ட்ரி அவ்வளவு சூப்பராக இருந்தது. எனவே அந்த படத்திற்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார். 
    இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் இரண்டாம் குத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ . இப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா கவனிக்கிறார்.

    இரண்டாம் குத்து

    இந்நிலையில் இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து என்கிற அடல்ட் காமெடி ஹாரர் படத்தின் முன்னோட்டம்.
    ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ . இப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா கவனிக்கிறார்.
    நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

    இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய சூர்யா, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

    ஹலிதா ஷமீம்

    இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை ஹலிதா ஷமீம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி பிரபலமானவர். மேலும் இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதிய படங்களுக்கு வி.பி.எப் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக கியூப் நிறுவனமும் அறிவித்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், சுமார் 7 மாத இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

    முன்னதாக வி.பி.எப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் ரிலீசாகாது என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்தார். இதற்கு கியூப் நிறுவனம், திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன.

    கியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில், நேற்றிரவு கியூப் நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனமான யூ.எப்.ஓ, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எப் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் கியூப் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

    இதையடுத்து, நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எப் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக கியூப் நிறுவனமும் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பின் மூலம், தீபாவளிக்கு தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கியூப் நிறுவனம் வி.பி.எப் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால், படங்களை வெளியிடுவது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இரண்டாம் குத்து, களத்தில் சந்திப்போம், மரிஜுவானா உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
    கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் அரசு தளர்வு களை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து 7 மாதங் களுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அரசு தியேட்டர்களை திறக்க கடும் விதிமுறைகள் அறிவித்திருந்ததால் கடந்த சில தினங்களாக தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.

    பழுதான இருக்கைகளும் மாற்றப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்துள்ளனர். டிக்கெட் முன்பதிவுகள் இரண்டு தினங்களாக நடை பெற்று வந்தன. 

    தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,140 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் பெரும்பாலானவையும் தனி தியேட்டர்களில் பல தியேட்டர்களும் இன்று திறக்கப்பட்டன. செவ்வாய்கிழமை என்பதால் செண்டிமெண்ட் படியும் புது படங்கள் ரிலீசில் சிக்கல் நீடிப்பதாலும் சில தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

    தியேட்டரில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது

    தனி தியேட்டர்களில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விஸ்வாசம், தனுசின் அசுரன் மற்றும் தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள், ஓ மை கடவுளே, திரெளபதி போன்ற படங்களை திரையிட்டு உள்ளனர். 

    இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கும் போதும் தியேட்டர்கள் எதுவும் நிரம்பவில்லை. மல்டி பிளக்ஸ்களில் மட்டும் கால்வாசி இருக்கைகள் நிரம்பியுள்ளன. புதிய படங்கள் வெளியாகும்போது இந்த நிலை மாறும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஆர்.ஜே.பாலாஜி, ரஜினி பற்றி நான் அப்படி பேசியிருக்க கூடாது என கூறி உள்ளார்.
    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆர்.ஜே.பாலாஜி டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 

    அப்போது ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ‘நான் சூப்பர் ஸ்டாரோட ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும் போது என் தாத்தா ‘ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று சொன்னார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து விட்டது. 

    ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். ‘தளபதி’ முதல் ‘தர்பார்’ வரை அவரை பற்றி நிறைய நினைவுகள் எனக்குள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. 

    நான் அப்படி பேசியிருக்க கூடாதுனு தோன்றும். அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு அனைத்து சந்தோஷங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

    நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால், விக்ரம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

    சமீபத்தில் விக்ரம் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருப்பதாகவும் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டளவில் குடும்பத்தினர் சிறிய விழா எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா வுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் நடிகர் விக்ரம் தாத்தாவாகி உள்ளார். 

    கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த இரண்டு படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.
    இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.
    மும்பை:

    பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து இந்தி திரையுலகம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியது. இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(என்.சி.பி.) விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்டோரை கைது செய்தனர். நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் உள்ளார்.

    இதேபோல போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா, எம்.டி., சரஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மும்பை ஜூகுவில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யதை அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர்கள் மும்பை பாந்திராவில் உள்ள பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் (47), வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நடிகரின் டிரைவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நாளை (புதன்கிழமை) போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு சம்மன் கொடுத்தனர்.

    போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், நடிகரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுகம் தினேஷ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் 'பற்ற வைத்த நெருப்பொன்று' படத்தின் முன்னோட்டம்.
    செல்போன் திருட்டை கருவாக கொண்டு, ‘பற்ற வைத்த நெருப் பொன்று’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. புதுமுகம் தினேஷ், ‘தடம்’ பட நாயகி ஸ்மிருதி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். வினோத் ராஜேந்திரன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “ஒவ்வொரு மனிதருக்கும் மூன்றாவது கை போல் இருப்பது, செல்போன். நமது மனசாட்சிக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவும் செல்போனுக்கும் தெரியும். அதனுள் சேமித்து வைத்த விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். அதுபற்றிய கதை, இது.

    செல்போன் தகவல்களை திருடி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பற்றிய படம். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் இந்த பிரச்சினை எவ்வாறு விபரீதமாகிறது? என்பதை எச்சரிக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
    ×