என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
மும்பை :
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகிற்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
இதேபோல முன்னணி நடிகைகள் ஷரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது அதிடியாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து செல்போன், மடிக்கணினி போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் மதியம் 12 மணியளவில் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் போதை பொருள் விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
இதேபோல கடந்த மாதம் லோனவாலாவில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கேப்ரில்லா டிமெட்ரியாடிசின் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிசை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகிற்கும் போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
இதேபோல முன்னணி நடிகைகள் ஷரத்தா கபூர், சாரா அலிகான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமா தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரின் மனைவி சபீனா செய்யது அதிடியாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து செல்போன், மடிக்கணினி போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கேப்ரில்லா டிமெட்ரியாடிசுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் மதியம் 12 மணியளவில் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் போதை பொருள் விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
இதேபோல கடந்த மாதம் லோனவாலாவில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கேப்ரில்லா டிமெட்ரியாடிசின் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிசை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் விமர்சனம்.
மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.



ஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.
இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.

இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, இளம் நடிகை என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என ரசிக்க வைத்திருக்கிறார்.
தந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. அதுபோல் ''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு.
படத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் பெரியதாக தோன்றவில்லை.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது.
மொத்தத்தில் 'சூரரைப்போற்று' சூர்யாவை போற்று.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்திருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பெயரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் திட்டவட்டமாக மறுக்க, நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தேன், அவருக்கே அது தெரியாது என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். இதையறிந்த விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.

இந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், நவம்பர் 27ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நாளை வெளியாக இருக்கிறது. குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.
சூரரைப் போற்று திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள் இதோ
1 - உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது. நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இயக்குநர் சுதாவும் அவரது அணியும் தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம் செலவிட்டுள்ளனர். தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து அதை இன்று சூரரைப் போற்று இருக்கு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் சாரத்துக்கு உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

2 - பரபரப்பான கதை - சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும்.
3 - தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் - இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது. உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறந்த இந்த அட்டகாசமான ஆக்ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது இன்னொரு காரணம்.

4 - சுதா மற்றும் சூர்யா கூட்டணி - சுதாவின் நுட்பமும், சூர்யாவின் திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யா, முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார். இந்த இயக்குநர் - நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது.
மலையாள பட உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலா, தற்போது சின்னத்திரையில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
மலையாள பட உலகில் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.

சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரங்களில் ஷகிலா நடித்து வந்தார். இந்நிலையில், சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி ஷோவில் ஷகிலா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் இவருடன் நடன இயக்குனர் பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ். இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்துள்ளார்.
'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 'இரண்டாம் குத்து' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்தப் படத்தின் நடிகர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் கடந்தவாரம் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னனியில் சூழ்ச்சி நடந்திருக்கலாம் என்றும் ஒரு சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அவர் தனது யூடியூப் சேனல் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கடந்த சீசனில் வனிதா சென்றது போல், நீங்கள் வைல்ட்கார்டு போட்டியாளராக கூப்பிட்டால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதாவது: “கண்டிப்பாக செல்வேன். நீங்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் இனி தினசரி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமுதவாணன் இயக்கத்தில் பவாஸ், நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ள ‘கோட்டா’ படத்தின் முன்னோட்டம்.
அமுதவாணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கோட்டா. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பவாஸ், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு பணியாற்றியுள்ளனர். ஆலன் செபாஸ்டின் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை வினோத் ஸ்ரீதர் செய்துள்ளார்.

நல்ல அனுபவத்தை வழங்க, இப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக தயாராக இருக்கிறது. சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற இப்படம், இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாகவும், அதில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா லாக்டவுனுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஹீரோயின்களின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் அவரது சம்பளம் ஏறி உள்ளது. நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார்.

நடிகைகள் திரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகிய மூவரும் ரூ.1.50 கோடியும், சுருதிஹாசன் 1 கோடி ரூபாயும், கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாயும், அஞ்சலி 70 லட்சம் ரூபாயும், ரெஜினா 60 லட்சம் ரூபாயும், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெறுகிறார்கள்.
ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து உள்ளனர். நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் 30 லட்சம் ரூபாயும், அனுபமா பரமேஸ்வரன் 25 லட்சம் ரூபாயும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளத்தை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.
புது ஹேர்ஸ்டைல் எந்த படத்திற்காக என்பதை நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
சமீப காலமாக நீளமான தலைமுடியுடன் புதிய கெட்-அப்பில் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சூரரைப்போற்று திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சூர்யாவிடம் புது ஹேர்ஸ்டைல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது: லாக்டவுன் சமயத்தில் தலைமுடியை வளர்த்தேன். கவுதம் மேனனுடனான என் அடுத்த படத்தில் இந்த ஹேர்ஸ்டைலில் தான் நடிக்க இருக்கிறேன். கவுதம் மேனன் படத்திற்காக தீபாவளி முடிந்ததும் 5 முதல் 10 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.

மேலும் இதே ஹேர்ஸ்டைலில் வேறு ஒரு இயக்குனரின் படத்திலும் நடிக்கிறேன் என்றார். யார் அந்த இயக்குனர் என்று கேட்டதற்கு சூர்யா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சூர்யா அடுத்ததாக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். பின்னர் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. நீண்ட நாட்களாக மாஸ்டர் படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாக வில்லை. இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தீபாவளிக்கு டீசரை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்குள் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படலாம் என்பதால் மாஸ்டர் படத்தை அப்போது வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






