என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறார்.
    தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். 

     கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.

    சிரஞ்சீவி

     படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியானது.. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

    இந்நிலையில் சிரஞ்சீவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக இளம் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
    தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 'சிம்ஹா', 'லெஜண்ட்' என பெரும் வரவேற்பை பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு - பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது. இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. 

    இதில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவருக்குத் தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக சாயிஷா சைகல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஆர்யாவை காதல் திருமணம் செய்த சாயிஷா கணவருக்கு ஜோடியாக டெடி படத்தில் நடித்துள்ளார். அதன் பின் அவர் ஒப்பந்தமாகி உள்ள படம் இது.

    சாயிஷா - பாலகிருஷ்ணா

    இதையறிந்த ரசிகர்கள் 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பதா என்று அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
    நடிகையும் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வினையாற்று படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுத்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

    எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

    படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    எதிர்வினையாற்று

    இந்நிலையில், நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உதவ இருக்கிறார்.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.

    மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது பின்னணி வேலைகளுக்கு அரசு தளர்வு அளிக்கப்பட்டதால் கபடதாரி படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    ஏ.ஆர்.ரகுமான்

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாளை (நவம்பர் 13) மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

    கடந்த சில மாதங்களாக இப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து தீபாவளிக்காவது டீசர், டிரெய்லர் என எதையாவது வெளியிடும்படி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 



    இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதாக மாஸ்டர் படக்குழு டுவிட் செய்துள்ளது. அதன்படி, மாஸ்டர் படத்தின் டீசரை தீபாவளி தினமான நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    காலா, விஸ்வாசம் படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.
    காலா, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்‌ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் தற்போது புரவி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனியுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

    ‘வல்லதேசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் என்.டி.நந்தா, தற்போது 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பிரணய் காளியப்பன் நாயகனாக நடித்திருக்கிறார். 

    படக்குழுவினர்

    இந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, மிரட்டியிருக்கிறாய் என்று நந்தாவையும், பிரணய் காளியப்பன் மற்றும் சாக்‌ஷி அகர்வாலை வாழ்த்தி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்கிறார்.

    பிஸ்கோத் படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: "இது சந்தானத்தின் 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். 

    பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.
    'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர், சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.
    சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் 'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயர பறந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவக்கார இளைஞன், ஆர்வமிகு இளம் தொழில் அதிபர், அன்பான கணவன் என அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடிப்பு அபாரமாக உள்ளது. தான் தோன்றும் ஒவ்வொரும் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகேத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களைப் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களைத் தொடுவார்கள்.

    சூர்யா

    ஊர்வசியின் நடிப்பு அற்புதம். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். 

    இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று. அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில், நான் அதற்காகப் போராடுவேன்.

    இறுதியாக, சுதா கொங்கரா, தொலைநோக்கு பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியை சம்பாதித்துள்ளீர்கள். சல்யூட்”. இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    கோலிவுட்டின் ஈ.பி.எஸ் யார் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுருக்கமாக ஈ.பி.எஸ் என்று அழைப்பர். நேற்று கோலிவுட்டின் ஈ.பி.எஸ் யார் என்று போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகியது. அது யாராக இருக்கும் என பலரும் யோசித்து வந்த நிலையில், அதற்கான விடையும் கிடைத்துள்ளது. ஈ.பி.எஸ் என்றால் ‘எங்க பாட்டன் சொத்து’ என்ற படத்தின் தலைப்பு என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    எங்க பாட்டன் சொத்து பட போஸ்டர்

    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் அழகர்சாமி தயாரிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சற்குணம் இயக்கிய ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘களவாணி 2’ ஆகிய படங்களில் விமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

    கடந்த சில மாதங்களாக இப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து தீபாவளிக்காவது டீசர், டிரெய்லர் என எதையாவது வெளியிடும்படி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

    இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதாக மாஸ்டர் படக்குழு டுவிட் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும்பாலும் இது டீசர் குறித்த அறிவிப்பாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

    நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுவுடன் கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். 

    காஜல் அகர்வால்

    திருமணம் முடிந்த கையோடு இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
    நடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது. 

    நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது. 

    தமன்னா

    கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள் பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன். 

    அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். கொரோனா பாதித்து ஆஸ்பத்திரியில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். இவ்வாறு தமன்னா கூறினார்.
    ×