என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
    "சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

    பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வந்தார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

    கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் புதிய உற்சாகம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கட்சி தொடங்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்  போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்.

    ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 

    அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

    ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்க ரஜினி விரும்பவில்லை. அதனால் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்க் அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் அனைவரையும் நோக்கி கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

    நல்ல நாளில் ரஜினியை சந்தித்த உற்சாகத்துடன் ரசிகர்கள் புறப்பட்டுச் சென்றனர். ரஜினி ரசிகர்களை நோக்கி கையசைத்தபோது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தலைவா ஹேப்பி தீபாவளி, தலைவரின் லேட்டஸ்ட் தீபாவளி தரிசனம் என்றும் ரசிகர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தை இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். 

    சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா, ரித்விகா நடிக்கிறார்கள். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    படக்குழுவினர்

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இறுதி நாளை முன்னிட்டு கேக் வெட்டி படக்குழுவினருடன் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி, தன்னுடைய நாய்க்குட்டிக்கு போட்டோஷூட் நடத்தி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
    அங்காடித் தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிய அஞ்சலி, ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார்.

    நடிகை அஞ்சலிக்கு தனது நாய்க்குட்டி போலோ மீது அலாதி பிரியம். அதன் பிறந்தநாளுக்காக போட்டோஷூட் நடத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” நீ என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு நான் மிக மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும் உணருகிறேன் என்றென்றும் நீ எனக்கு அன்புக்குரிய தோழன் ஆவாய். 

    அஞ்சலி

    நீ எனக்கு அளவு கடந்த அன்பையும் நான் வீட்டுக்குள் நுழையும் போது நிறைய முத்தங்களையும் கொடுத்திருக்கிறாய், ஐ லவ் யூ போலோ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளியான நாளை டீசரும், பொங்கல் தினத்தில் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

    வெங்கட் பிரபு

    இந்தப் படத்துக்கு முன்னதாக, ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுசீந்திரன். ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜெய்யே இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரை தீபாவளியை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் திடீர் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் சிலர் யூடியூபில் மட்டுமின்றி திரையரங்கிலும் ’மாஸ்டர்’ டீசரை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது படக்குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 



    நாளை மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரை அரங்கிலும் ’மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிம்பு, பிரம்ம முகூர்த்தத்தில் தன்னுடைய படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
    சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ள இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே மாதத்தில் படத்தை முடித்து கொடுத்து விட்டார் சிம்பு. 



    மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளியான நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியிட இருப்பதாக சிம்பு அறிவித்திருக்கிறார். அதிகாலை 4.32 மணி பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தை சிம்பு தேர்வு செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் காணவில்லை என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ’வலிமை’. இப்படத்தின் கடந்த வருட இறுதியில் தொடங்கியது. அதன் பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ’வலிமை’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் டைட்டில் வெளியானதை அடுத்து, இந்த படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அஜித் தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களின் அப்டேட்டுகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் போனி கபூர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    சமூக வலைதளங்கள் மூலம் பல முறை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் போனிகபூர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அஜித் ரசிகர்கள் தற்போது ’போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

    அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

    இந்த போஸ்டரில் போனிகபூர் அவர்களே கடந்த 8 மாதங்களாக ’வலிமை’ படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்டேட்டும் காணவில்லை உங்களையும் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாகவும் அதை மோகன்லால் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடரில் 8 அணிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்நிலையில், அந்த புதிய அணியை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த நடிகர் மோகன்லால், இதுகுறித்த பணிகளுக்காக தான் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

    மோகன்லால்

    ஏற்கனவே ஷாருக் கான், ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா ஆகிய திரையுலக பிரபலங்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் முன்னோட்டம்.
    அட்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிஷி ரித்விக். இவர் எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் மரிஜுவானா. இது ஒரு சைக்கோ திரில்லர் கதை கொண்ட படம். 'தேர்டு ஐ கிரியேஷன்' எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.  

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:- ”ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். கதை உண்மையான சம்பவமே. மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம் தரும் .பெண்ணுக்கான பாதுகாப்பை சமூகம் கொடுக்க வேண்டுமா? இல்லை பெற்றோரின் பொறுப்பா? தவறுக்கு யார் காரணம்? என்னை பொறுத்தவரை பெற்றோர்களே. 40 வயது கடந்த பெண்கள் நிச்சயமாக இந்த படத்தை காண வேண்டும்” என கூறினார்.
    நடிகர் சிம்பு பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் காட்சி வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் கேட்டு வனத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு புதிதாக நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. இதன் முதல் தோற்ற போஸ்டரில் நடிகர் சிம்பு தனது கழுத்தில் பாம்பை போட்டு பிடித்து இருப்பது போலவும், மற்றொரு வீடியோவில், நடிகர் சிம்பு மரத்தில் இருக்கும் பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த காட்சியில் வன விலங்கை துன்புறுத்துவதாகவும், இதனால் நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வன விலங்கு நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசனிடம் புகார் மனு அளித்தார்.

    சிம்பு

    ஆனால் சிம்பு கழுத்தில் போட்டு இருப்பது பிளாஸ்டிக் பாம்பு. அதை வீடியோவில் நிஜ பாம்பு போல கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருப்பதாக வனத்துறையிடம் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரமாகியும் ஆவணங்கள் தரவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து கிண்டி வனத்துறையினர் இது தொடர்பாக நடிகர் சிம்பு வீட்டுக்கு நேரில் சென்று 2-வது முறையாக நோட்டீஸ் வழங்கினார்கள். இயக்குனர் சுசீந்திரன் உள்பட படக்குழுவினருக்கும் 2-வது நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கும் உரிய காலத்தில் ஆவணங்கள் தராவிட்டால் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன.

    இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு “கோடியில் ஒருவன்” என பெயரிடப்பட்டுள்ளது. 

    கோடியில் ஒருவன் பட போஸ்டர்

    அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    ×