என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், இது வரைக்கும் இதுபோல் பயந்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று இருக்கிறார் சந்தானம்.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் அடிபட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம்.

மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று பெரிய பயம் இருந்தது. இது வரைக்கும் இதுபோல் பயந்தது இல்லை. மக்கள் வந்து இருக்கிறார்கள். மக்களுக்கு பெரிய நன்றி. ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் விமர்சனம்.
ஒரு தியேட்டரில் மர்மமான முறையில் அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் கொள்ளப்படுகிறார்கள். இந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரிஷி களம் இறங்குகிறார். தீவிரமாக விசாரிக்கும் நிலையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது.


எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில் எல்லா கொலைகள் நடக்கும் இடத்தில் கஞ்சா இருப்பதை ரிஷி கண்டுபிடிக்கிறார். மேலும் இந்தக் கொலைகளை செய்தவர் ஒருவர்தான் என்பதையரியும் ரிஷி, அவன் யார்? எதற்காக கொலைகளை செய்கிறான்? என்பதை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிஷி இதற்கு முன் அட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். முந்தைய படத்தை விட இந்த படத்தில் நடிப்பில் முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பல இடங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷா பாத்தலோம், நாயகன் ரிஷியுடன் போலீசில் பணியாற்றுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருப்பவர், கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம்டி ஆனந்த். நல்ல கதையை சிறந்த திரைக்கதையாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் ஹீரோ வில்லனை தேடி அலைகிறார். இரண்டாம்பாதியில் வில்லனை பிளாஷ்பேக் பேச வைத்திருக்கிறார். பவர் ஸ்டார் காமெடியை வேண்டுமென்றே திணித்தது போலிருந்தது. கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

கார்த்திக் குரு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக தேவா பாடிய பாடல் ரிப்பீட் மோட். பாலா ரோசைய்யாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் 'மரிஜுவானா' விறுவிறுப்பு குறைவு.
திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது.
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நெடுமுடி வேணு. தமிழில் கமல் நடித்த இந்தியன் படத்தில், சிபிஐ அதிகாரியாக நடித்த இவர், அந்நியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நெடுமுடி வேணுவின் மகன் கண்ணனுக்கும் திருவனந்தபுரம் செம்பழந்தியை சேர்ந்த விரிந்தா நாயர் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் என மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் அருகிலுள்ள துர்கா தேவி கோவிலில், அரசு அறிவித்துள்ள கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற அப்துல் கலாமின் காட்சி பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன். அப்துல் கலாமாக நடித்தவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் தோற்றத்தை பெற்றிருந்த அவர், கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக சிகை அலங்காரம் மற்றும் தோற்றத்தை அப்படியே மாற்றி கொண்டார். இவர் உடுமலை கலாம் என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடித்த அவர், படத்தை பார்ப்பதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார்.
தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள்.
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.
மாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.

இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள். அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சுல்தான் படத்தை அடுத்து கார்த்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை இப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா, ஆர்ஜே.பாலாஜி, ஊர்வசி நடிப்பில் உருவாகி இருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் விமர்சனம்.
நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சமயம் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தியை சேகரித்து வருகிறார்.


ஆர்.ஜே.பாலாஜியின் அம்மா ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால் போக முடியவில்லை. இதனால் குல தெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் போகும் என்று ஒருவர் சொல்ல அங்கு குடும்பத்துடன் தங்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
அங்கு தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி தூங்கும் போது இரவில் மூக்குத்தி அம்மனாக தோன்றுகிறார் நயன்தாரா. அதன்பின் ஆர்.ஜே. பாலாஜியுடன் பயணிக்கும் நயன்தாரா, அவரின் கஷ்டங்களை போக்கினாரா? 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அம்மனாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி அழகு சேர்த்திருக்கிறார். பல விஷயங்களை சாதாரணமாக வசனம் மூலம் சொல்லிவிட்டு செல்கிறார். காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். அம்மனை பார்த்தவுடன் நம்பாமல் சோதிப்பது, பணம் கிடைத்தவுடன் சந்தோஷப்படுவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
அம்மாவாக வரும் ஊர்வசியின் நடிப்பு அற்புதம். பொய் சொல்வது, சமாளிப்பது, கணவருக்காக எங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தாத்தா மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலிச் சாமியாராக வரும் அஜய் கோஷ் சிறந்த தேர்வு. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். முதல்பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள். அதுபோல் கதாபாத்திரங்களிடம் அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலின் அழகை அப்படியே கடத்தியுள்ளது. நிறைய காட்சிகள் குளிர்ச்சியாக உள்ளது. கிரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு தடையாக இருக்கிறது.
மொத்தத்தில் 'மூக்குத்தி அம்மன்' கலகலப்பான தரிசனம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி வெளியான மாஸ்டர் டீசர் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் மாஸ், கிளாஸ், ஆக்சன் என அனைத்தும் கலந்து இந்த டிசர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டீசரில், கேடி ஸ்டூடண்ட் இல்லமா புரபசர், அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்... என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்... இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கட்சி தொடங்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்.

ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மாஸ்க் அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.

பின்னர் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி இருக்கிறார் ரஜினி. இந்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஜூலி கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே தான் இருப்பது போன்ற புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சினிமா நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்றோர் நடித்த படங்களை இயக்கி டைரக்டராகவும் முத்திரை பதித்தார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது.
நயன்தாராவை மணக்க முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல் முறிவுக்கான காரணத்தையும் இருவரும் வெளிப்படுத்தவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.
பிரபுதேவாவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் உறவுக்கார பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பிரபுதேவா தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.






