என் மலர்
சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தவசி. இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் முன்னோட்டம்.
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: “இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.
கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்ததாக பத்ரி கூறினார்.
சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்து பிரபலமான தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் தவசி. அப்படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருந்த அவர், கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருகிறார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு தவசி மற்றும் அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன் இருப்பது தான் அவரின் அடையாளமே. ஆனால் அவர் தற்போது மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவுமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் டேனி, கரிஷ்மா கவுல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘இரண்டாம் குத்து’ படத்தின் விமர்சனம்.
ஹீரோ சந்தோஷும், டேனியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரும் ஒன்றாகவே சுற்றுவதால், பார்ப்பவர்கள் அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் எனக்கூறி கிண்டல் செய்கின்றனர். தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க இருவரும் அழகான இரு பெண்களை திருமணம் செய்கின்றனர்.
திருமணமான கையோடு ஹனிமூனுக்காக தாய்லாந்து செல்கின்றனர். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. நினைத்ததை அடைய முடியாமல் செத்துப்போன அந்தப் பேய், இருவரும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அவ்வாறு உறவு வைத்துக்கொள்பவர்கள் செத்து விடுவார்கள் என்பதையும் சொல்கிறது. இதனால் செய்வதறியாது இருக்கும் இருவரும், அந்த பிரச்னையிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஹீரோ சந்தோஷ், சிக்ஸ்பேக்ஸ் உடற்கட்டுடன் ஸ்டைலிஸாக இருந்தாலும் நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். முகபாவனைகள் எதுவும் அவருக்கு செட்டாகவே இல்லை. இரண்டு ஹீரோயின்களையும், பேயையும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். டேனியையும் இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு காட்டி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஜோக் அடிக்கிறேன் என்கிற பெயரில் ஏதோ செய்து வைத்திருக்கிறார்கள்.
அனுபவ நடிகர்களான ரவி மரியா, சாம்ஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடிகள் சுத்தமாக எடுபடவில்லை. முழுக்க முழுக்க கிளாமரையும், இரட்டை அர்த்த வசனங்களை நம்பியே படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கொஞ்சம் இலைமறை காயாக பேசிய வசனங்கள் இந்த படத்தில் நேரடியாகவே பேசப்பட்டுள்ளன.

பாடல்கள் சுமார் ரகம் தான். பேய் படம் என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் தான் பயப்பட வைத்துள்ளார்கள். அது என்னவெனில், 3-ம் பாகம் வரப்போகுது என இறுதியில் காட்டுவது தான்.
மொத்தத்தில் ‘இரண்டாம் குத்து’ தேவையில்லை.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்கவில்லை. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தீபாவளிக்கு டாக்டர் படக்குழு வெளியிட்ட போஸ்டரில் படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார்.
இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 1 பில்லியன், அதாவது 100 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதால் சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதன் முறை. இதற்கு முன்பு ஓரிரு இந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற வரிசையில் 'ரவுடி பேபி' 5-வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ‘ஹனுமான் சாலிசா’ (1.3 பில்லியன்) என்ற பக்திப் பாடல் உள்ளது. இரண்டாம் இடத்தில் பஞ்சாபி சினிமா பாடலான 'லாங் லாச்சி' டைட்டில் பாடல் (1.2 பில்லியன்) உள்ளது. இந்தப் பாடல்களையும் விரைவில் பின்னுக்குத் தள்ளி 'ரவுடி பேபி' முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#RowdyBaby reaches a Billion Hearts❤️1st ever South Indian Video Song to achieve this Milestone😍 Thanks for all your phenomenal Love & Support🥳#RowdyBabyHits1BillionViews#Maari2@dhanushkraja@Sai_Pallavi92@thisisysr@directormbalaji@vinod_offl@divomovies@RIAZthebosspic.twitter.com/ABeEBkEexT
— Wunderbar Films (@wunderbarfilms) November 16, 2020
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளார்.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது. பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணம் பற்றி திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார்.

இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா... தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “தென்னிந்தியாவில் சினிமாவுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்கின்றனர். இதை வேறு எங்கும் பார்க்க முடியாது. தமிழ், தெலுங்கில் நடிகர், நடிகைகளை ரசிகர்கள் ஆராதிக்கிறார்கள். சம்பளமும் அதிகம் கொடுக்கிறார்கள்.
படப்பிடிப்பையும் திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர். இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் காலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 2 படங்களில் நடித்து விடலாம். நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள். இங்கு 200 கோடிக்கும் வசூல் செய்யும் படங்களும் உள்ளன.

ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். அபிமான நடிகர், நடிகைகள் படங்கள் ரிலீசாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் செய்யும் கோலாகலம் கொஞ்சநஞ்சம் இல்லை. படம் ரிலீசை பெரிய விழாவாக எடுக்கிறார்கள். ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நடிகைகளுக்கு கோவில் கட்டியதும் இங்குதான் நடந்துள்ளது. இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா, இவரின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, தனது தந்தை கனடாவில் பணிபுரிவதாகவும், 10 ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை என்றும் உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார்.
இதையடுத்து அவரது தந்தை, பிக்பாஸ் வீட்டில் வந்து லாஸ்லியாவை சந்தித்த காட்சிகள் மனதை நெகிழ வைத்தது. அப்போது கவினுடனான காதல் விவகாரத்தில் அவர் தனது மகளை கண்டித்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ள லாஸ்லியா அவர் மரணத்திற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இதை அறிந்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிஸ்கோத் படத்தின் விமர்சனம்.
சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். சிறுவயதிலேயே புத்திசாலித்தனமாக இருக்கும் இவரது மகன் சந்தானத்தை, பெரிய பிஸ்கட் கம்பெனி உருவாக்கி அதில் அவரை நிர்வாக தலைவராக அமைக்க வேண்டும் என்று ஆடுகளம் நரேன் ஆசைப்படுகிறார்.



இந்நிலையில் திடீரென்று ஆடுகளம் நரேன் இறந்து போகிறார். இவரது பிஸ்கட் கம்பெனியை ஆடுகளம் நரேன் நண்பரான ஆனந்தராஜ் எடுத்து நடத்துகிறார். இதில் வேலையாளாக இருக்கிறார் சந்தானம்.
பிஸ்கட் கம்பெனியில் வரும் வருமானத்தை வைத்து ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சந்தானம். முதியோர் இல்லத்திற்கு புதியதாக வரும் சௌகார் ஜானகி சந்தானத்திற்கு ஒரு கதை சொல்கிறார்.

அந்த கதை சந்தானத்தின் வாழ்க்கையில் நிஜமாகிறது. மேலும் சௌகார் ஜானகி சொல்லும் அடுத்தடுத்த கதைகள் சந்தானத்தின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இறுதியில் சந்தானத்திற்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தந்தையின் ஆசை போல் பிஸ்கட் கம்பெனியின் நிறுவன தலைவராக சந்தானம் மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதிய கெட்டப் அதற்கேற்ற உடல் மொழி, டைமிங் காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது நடிப்புக்கும் திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரிய பலமாக மொட்டை ராஜேந்திரனும் லொள்ளு சபா மனோகரனும் அமைந்திருக்கிறார்கள். இவர்களின் கெட்டப்பும் பேசும் வசனமும் சிறப்பு.

நாயகிகளாக வரும் தாரா அலிஷா,
ஸ்வாதி முப்பாலா ஆகிய இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சௌகார் ஜானகியை திரைப்படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய அனுபவ நடிப்பால் கதைசொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
பல படங்களின் சாயல்களை வைத்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் கண்ணன். படம் முழுக்க சந்தானம் மட்டுமே அதிக காட்சிகளில் வருகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல்வேறு கட்டங்களில் அதற்கேற்றாற்போல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ரதன் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.
மொத்தத்தில் 'பிஸ்கோத்' நல்ல சுவை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக சந்தானம் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் தியேட்டருக்கு சென்று இருக்கிறார்கள்.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கண்ணன், சந்தானம் இல்லையென்றால் பிஸ்கோத் இல்லை. படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது என்று அறிவித்ததும் பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதை சந்தானம்தான் சரி செய்தார். கேட்டவுடன் ரூபாய் 50 லட்சம் ரெடி பண்ணி கொடுத்தார்.

இவர் செய்த உதவியை மறக்க முடியாது. என்னுடைய அடுத்த படமும் சந்தானத்தை வைத்துதான் இயக்க இருக்கிறேன். என்றார்.






