என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

    தவசி

    நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசி அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருப்பவர், எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்தான் என்று சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
    பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் ரஜினியுடன் முதன் முதலாக ராஜாதி ராஜா படத்தில் நடித்தார். ரஜினியின் பிரபலமான எங்கிட்ட மோதாதே பாடல், ஆனந்தராஜை கேலி செய்து தான் இடம்பெற்றிருக்கும். பின்னர் பாட்ஷா படத்தில் ரகுவரனுக்கு அடுத்த இரண்டாவது வில்லனாக நடித்து புகழ் பெற்றார். மின் கம்பத்தில் ரஜினியை கட்டி வைத்து ஆனந்தராஜ் அடிக்கும் காட்சி ரசிகர்களையும் தாய்மார்களையும் கண்கலங்க வைத்தது.

    ஆனந்தராஜ் கொடூரமான வில்லனாக இருப்பார். பின்னர் ரஜினியும் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஆனந்தராஜுக்கு சிறந்த வில்லன் நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது பாட்ஷா திரைப்படம்.

    ரஜினியுடன் ஆனந்த்ராஜ்

    இந்நிலையில், தற்போது ஆனந்தராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் நிறைய படம் செய்தேன். ஆனால், நான் உங்களுடன் பணிபுரிந்த அந்த திரைப்படம் எனக்கு சிறந்த வில்லன் என்று பெயரிடப்பட்டது. எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்,” என்று கூறி ரஜினியை டேக் செய்துள்ளார்.

    பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
    தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 

    சினேகன்

    இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக திருமயம் போலீசார் சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், விழிப்புணர்விற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் டேனி என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். 

    வரலட்சுமி சரத்குமாரின் பதிவு

    இந்நிலையில், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இதை விட சிறந்த விளக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. !!!! #Staysafe #WearAMask #covid இன்னும் எல்லா இடங்களிலும் அதிகம்.. !! #பொறுப்புள்ளவராய் இருங்கள். என்று பதிவு செய்திருக்கிறார்.

    மிகவும் கீழ் தரமான பதிவு, ஆண்கள் இதே போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா.. என்று நெட்டிசன்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். 
    பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

    ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

    எமி ஜாக்சன்

    ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன், தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி உலக சாதனை படைத்துள்ளது.
    விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார்.

    இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு வெளியானது. நீண்ட நாட்களாக 'மாஸ்டர்' அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீஸர் கொண்டாட்டமாக இருந்தது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீஸர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது வரை 'மாஸ்டர்' படத்தின் டீஸர் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய்

    இந்தியாவில் வெளியான படத்தின் டீஸர்களில் அதிக லைக்குகளை பெற்ற டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதுவும் டீஸர் வெளியான ஒரு நாளுக்குள்ளேயே இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.
    சந்தோஷ் நம்பிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்திருக்கும் ‘அகண்டன்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘டூலெட்’ படத்தில் நடித்து பாராட்டு பெற்ற சந்தோஷ் நம்பிராஜன் முழுக்க முழுக்க செல்போனில் ஒரு முழு படத்தையும் எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்துக்கு ‘அகண்டன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

    படத்தை பற்றி சந்தோஷ் நம்பிராஜன் கூறியதாவது: “செல்போனில் படமான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது, ‘அகண்டன்.’ இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    அகண்டன் படக்குழு

    ரோட்டில் இரவு சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவராக நடித்து இருக்கிறேன். அவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. கல்லாவில் மனைவியை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற கனவு. அந்த கனவில் இடியாக வந்து விழுகிறது, ஒரு கொலை வழக்கு. அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான்? என்பது கதை.

    அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இதில் நான் ஒரு சீன நடிகருடன் மோதும் சண்டை காட்சி, படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஹரிணி என்ற புதுமுகம் நடிக்க, அவருடன் 30 புதுமுகங்கள் படத்தில் இடம்பெறுகிறார்கள். செல்போனில் படமாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம், சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும்.” என அவர் கூறினார்.
    சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகை திரிஷா, தற்போது இரண்டே மாதத்தில் குதிரையேற்ற பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
    ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதிப்பது, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, மலை ஏற்றம் செல்வது என சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் நடிகை திரிஷா. இவர் தற்போது செய்துள்ள சாகசம் என்னவென்றால், இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை ஆனது தான்.

    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கும் திரிஷா, இந்த படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஒரு வார பயிற்சி போதுமானது தான். ஆனால் திரிஷாவோ கொரோனா லாக்டவுன் காலத்தை பயன்படுத்தி குதிரையேற்ற பயிற்சியை முறையாக பயின்று அதற்கான சான்றிதழும் பெற்று அசத்தியுள்ளார்.

    குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்த அவர், தற்போது ஆரம்பக்கட்ட குதிரையேற்ற வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதில் இன்னும் இரண்டு நிலைகளை அவர் முடித்தால் குதிரை பந்தையங்களில் கூட கலந்து கொள்ளும் தகுதி அவருக்கு வந்துவிடுமாம். திரிஷாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

    திமுக எம்.எல்.ஏ.வும் டாக்டருமான சரவணன் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். அதேபோல் நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

    தவசியுடன் சவுந்தர்ராஜா

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தவசியின் மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசியை நேரில் சந்தித்த நடிகர் சவுந்தரராஜா, நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய 1 லட்சம் ரூபாயை வழங்கிவிட்டு, தன் சார்பாக ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினார்.
    புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
    சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் தவசி. அப்படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருந்த அவர், கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். 

    தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன் இருப்பது தான் அவரின் அடையாளமே. ஆனால் அவர் தற்போது மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருப்பது காண்போரை கண்கலங்க செய்தது. 

    டாக்டர் சரவணனுடன் தவசி

    தவசிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

    இந்நிலையில், தவசியின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி அவருக்கு நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் சூரி முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர். மேலும் நிதியுதவி தேவை என்றால் தங்களை தாராளமாக கேட்கலாம் என தவசியின் குடும்பத்தினரிடம் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    விவேக் இயக்கத்தில் பிரியாமணி நடித்துவரும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    பிரியாமணி நடிப்பில் உருவாகும் படம் ‘கொட்டேஷன் கேங்’. இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்குகிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது. காயத்ரி சுரேஷ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.

    கொட்டேஷன் கேங் பட போஸ்டர்

    இந்நிலையில், தெய்வத்திருமகள் படத்தில் நடித்து பிரபலமான பேபி சாரா, இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து, இயக்குனர் விவேக் கூறுகையில், “தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களின் மூலம் திறமையான நடிப்பில், கியூட்டான முகபாவங்கள் தந்து, அழகான சிறுபெண்ணாக அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட சாரா, கொட்டேஷன் கேங்கில், அனைவரையும் அதிரச் செய்யும் தைரியமிக்க இளம்பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்” என்றார்.
    நடிகை காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். 

    அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

    கணவருடன் காஜல் அகர்வால்

    இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
    ×