என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாகி உள்ளது.
டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் பேராவூரணி அரசுப்பள்ளி மாணவி சகானாவும் ஒருவர். இவருக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் குக்கிராமத்தை சேர்ந்த இவரது தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். மாணவி சகானா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 524 மதிப்பெண் பெற்றிருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த சகானாவின் குடும்ப சூழல் பற்றி அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை தன் சொந்த செலவில் நீட் பயிற்சி வகுப்பில் படிக்க வைத்துள்ளார். அதன்படி நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகானாவுக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மதத்தினர் இடையே பகையை தூண்டும் டுவிட்டர் பதிவுக்காக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் 3-வது தடவையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை :
வெவ்வேறு மதத்தினர் இடையை பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு அவர்கள் தங்களது சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் குடும்ப திருமண வேலைகளில் இருப்பதால் தற்போதைக்கு ஆஜராக இயலாது என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் பதிலளித்தனர்.
இந்தநிலையில் கடந்த 9, 10-ந் தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனாவுக்கு போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெவ்வேறு மதத்தினர் இடையை பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு அவர்கள் தங்களது சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் குடும்ப திருமண வேலைகளில் இருப்பதால் தற்போதைக்கு ஆஜராக இயலாது என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் பதிலளித்தனர்.
இந்தநிலையில் கடந்த 9, 10-ந் தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனாவுக்கு போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அருள் இயக்கத்தில் டிஜே, பௌசி, காளி வெங்கட், சீனு மோகன் நடிப்பில் வெளியாகியிருக்கும் தட்றோம் தூக்றோம் படத்தின் விமர்சனம்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகிறார் நாயகன் டிஜே. இவருக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பிக்கும் டிஜே, காளி வெங்கட் வேலை பார்த்து வரும் ஒயின்ஷாப்பில் இருக்கும் பாட்டிலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.


அதிக பணம் சம்பாதித்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் டிஜே. போதிய பணம் இல்லாததால் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் சரக்கு எடுத்து வர நண்பர்கள் மூன்று பேரும் செல்கிறார்கள். அங்கு இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் டிஜேக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதிலிருந்து மீண்டாரா? வெளிநாட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அசுரன் படத்தில் தனுசுக்கு மூத்த மகனாக நடித்த டிஜே இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நண்பர்களாக வருபவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் பௌசி, டப்ஸ்மாஷ் செய்வது, டிஜேவை காதலிப்பது, சண்டை போடுவது என கதாபாத்திரத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் சீனு மோகன், அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார். காளி வெங்கட், சம்பத் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்து இருக்கிறார்கள்.

ஆதரவற்ற இளைஞர்கள், பணமதிப்பிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருள். கதாபாத்திரங்களிடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். பொழுதுபோக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பிளஸாக அமைந்து இருக்கிறது.
பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சிம்பு பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. சதீஷ் முருகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் 'தட்றோம் தூக்றோம்' சுவாரசியம்.
பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது முதலமைச்சராக மாறி இருக்கிறார்.
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது.
இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காட்சிகள் பாண்டிசேரியில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.

சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டீசர் வெளியானது போல் நாளை சிம்பு ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 9.09 மணிக்கு அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசருக்கு பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை 9.09 மணிக்கு நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ டீசர் வெளியானது போல் நாளை காலை அதே 9.09 மணிக்கு சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளிவர உள்ளது. இதனை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

’மாநாடு’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தனது 48-வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘செம்பருத்தி’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரோஜா.

2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி - ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கும் ரோஜா தனது கணவர், குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஜிவி.சந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்வகோளாறு படத்தின் முன்னோட்டம்.
புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்வகோளாறு. ஜிவி.சந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் மார்ட்டின் ஜெயராஜ், யாகவன், ஜெகதீஷ், சக்தி, பாய்ஸ் ராஜன், சிந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனக மீசை வேலு நடித்துள்ளார். பாடல்களுக்கு சரண் பிரகாஷ் இசைஅமைத்துள்ளார். பின்னனி இசையை பாலகணேஷ் கவனிக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் ஸ்ரீநிவாஸ் மேற்கொண்டுள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: எந்த ஒரு செயல் செய்தலும் அதில் ஆர்வ மிகுதியால் செய்யும் தவறுதான் ஆர்வகோளாறு. இன்னும் சொல்ல போனால் நமது வாழ்க்கையில் எங்கோ ஒருமுறை ஆர்வகோளாறு நடந்திருக்கும். அது தொழிலில் இருக்கலாம். நட்பில் இருக்கலாம். காதலில் இருக்கலாம். குடும்பத்தில் இருக்கலாம்.

நாம் செய்த ஆர்வகோளாறு நாம் உணர சில நாட்கள் ஆகும், இல்லை சில மாதமாகும், சில வருடங்கள் கூட ஆகலாம். அதை உணரும் பொழுது சிரிப்பு வரும், சில நேரம் அழுகை வரும், தவிக்க முடியாத ரணமும் பாதிப்பும் ஏற்பட்டுவிடும். அதை தவிர்க்க முடிந்தால் அதற்கொரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்லும் திரைப்படம் ஆர்வகோளாறு.
சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டனர்.
இன்னொரு படத்தில் நடித்தபோது நான் பேசிய வசனம் ஹீரோவுக்கு பிடிக்கவில்லை. அந்த வசனத்தை மாற்றும்படி சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடனே டப்பிங் கலைஞரை வைத்து எனக்கு தெரியாமலேயே அந்த வசனத்தை பேச வைத்து விட்டார்கள்.

வேறொரு படத்திலும் மோசமான சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த படத்தில் நான் வரும் அறிமுக காட்சி ஹீரோவின் அறிமுக காட்சியை விட சிறப்பாக இருந்தது. இதனால் அந்த ஹீரோ தலையிட்டு எனது அறிமுக காட்சியை வேறுமாதிரி மாற்ற வைத்து விட்டார்.
ஒரு படத்தில் நடித்தபோது ஹீரோவின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக எனது சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். இப்படி கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கதாநாயகர்கள் தயங்கும் நிலையும் உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் தடை விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
காகிதப்பூக்கள் என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் லோகன், பிரியதர்ஷினி ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை முத்து மாணிக்கம் இயக்கி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் அங்கு சென்றனர். ஆனால் கிராமத்தினர் கொரோனா அச்சத்தால் ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து படக்குழுவினரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து இயக்குனர் முத்து மாணிக்கம் கூறும்போது, “படப்பிடிப்பு நடத்த விடாமல் கிராமத்தினர் தடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவோ பேசியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினோம்” என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகி விட்டார்.
இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் உள்ளனர். பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமான நெல்சன் சொன்ன கதையும் விஜய்யை கவர்ந்ததாக பேசினர்.

இந்த நிலையில் புதிதாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் 2000-ஆம் ஆண்டு வெளியான குஷி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் நண்பன், மெர்சல் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை காதல், திகில், அதிரடி அம்சங்களுடன் இருந்ததாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதில் விஜய் நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் ‘நெற்றிக்கண்’. அவரின் காதலியான நயன்தாரா தான் இப்படத்தின் ஹீரோயின். ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திரில்லர் படமான இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு, நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உதவி உள்ளார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தனது சிகிச்சைக்கு திரைத்துறையினரோ, அரசோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், அவருக்கு இலவச சிகிச்சை அளித்து உதவி செய்தார். இதனையடுத்து அவருக்கு நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் ரூபாயும், சூரி மற்றும் சிவகார்த்திகேயன் தலா 25,000 ரூபாயும், சவுந்தரராஜா 10,000 ரூபாயும் வழங்கினர்.
நேற்று செல்போன் மூலம் தவசியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு, தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உதவி உள்ளார்.






