search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவசி"

    • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் வந்திருந்தார்.
    • தவசி படம் வசனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தே.மு.தி.க. கட்சியின் தலைவர், பிரபல நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.

    சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் வந்திருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய தவசி படத்துக்கு நான் உரையாடல் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதையடுத்து, 2001ல் வெளியான "தவசி" திரைப்படத்திற்கு படத்தின் இயக்குநர் உதயசங்கர் தான் வசனம் எழுதினார் என்பதை படம் எடுத்து வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தவசி படத்தின் இயக்குநர் உதயசங்கரே இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினார் என்றும், அப்போது இயக்குநராக அவர் மாறிய நிலையில், மீண்டும் எழுத்தாளராக மாற்றி விடுவார்கள். அதனால், வசனகர்த்தா என பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் தான் அவருக்கு நன்றி சீமான் என கார்டு போட்டேன் இந்த படத்திற்கு வசனம் எழுதியது சீமான் தான் என உதயசங்கர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

    ×