என் மலர்
சினிமா

பற்ற வைத்த நெருப்பொன்று பட போஸ்டர்
பற்ற வைத்த நெருப்பொன்று
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுகம் தினேஷ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் 'பற்ற வைத்த நெருப்பொன்று' படத்தின் முன்னோட்டம்.
செல்போன் திருட்டை கருவாக கொண்டு, ‘பற்ற வைத்த நெருப் பொன்று’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. புதுமுகம் தினேஷ், ‘தடம்’ பட நாயகி ஸ்மிருதி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். வினோத் ராஜேந்திரன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: “ஒவ்வொரு மனிதருக்கும் மூன்றாவது கை போல் இருப்பது, செல்போன். நமது மனசாட்சிக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவும் செல்போனுக்கும் தெரியும். அதனுள் சேமித்து வைத்த விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். அதுபற்றிய கதை, இது.
செல்போன் தகவல்களை திருடி பணம் பறிக்கும் ஒரு கும்பலை பற்றிய படம். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் இந்த பிரச்சினை எவ்வாறு விபரீதமாகிறது? என்பதை எச்சரிக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
Next Story






