search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள்
    X
    சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள்

    7 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு.... ரீ ரிலீஸ் ஆன படங்கள் என்னென்ன?

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
    கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபத்தில் அரசு தளர்வு களை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து 7 மாதங் களுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அரசு தியேட்டர்களை திறக்க கடும் விதிமுறைகள் அறிவித்திருந்ததால் கடந்த சில தினங்களாக தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.

    பழுதான இருக்கைகளும் மாற்றப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்துள்ளனர். டிக்கெட் முன்பதிவுகள் இரண்டு தினங்களாக நடை பெற்று வந்தன. 

    தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,140 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் பெரும்பாலானவையும் தனி தியேட்டர்களில் பல தியேட்டர்களும் இன்று திறக்கப்பட்டன. செவ்வாய்கிழமை என்பதால் செண்டிமெண்ட் படியும் புது படங்கள் ரிலீசில் சிக்கல் நீடிப்பதாலும் சில தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

    தியேட்டரில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது

    தனி தியேட்டர்களில் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விஸ்வாசம், தனுசின் அசுரன் மற்றும் தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள், ஓ மை கடவுளே, திரெளபதி போன்ற படங்களை திரையிட்டு உள்ளனர். 

    இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கும் போதும் தியேட்டர்கள் எதுவும் நிரம்பவில்லை. மல்டி பிளக்ஸ்களில் மட்டும் கால்வாசி இருக்கைகள் நிரம்பியுள்ளன. புதிய படங்கள் வெளியாகும்போது இந்த நிலை மாறும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×