என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சித்ரா தற்கொலை விவகாரத்தில் அவரது கணவர் மற்றும் உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகளிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ‘முல்லை’ கேரக்டரில் நடித்து பிரபலமான டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா திடீரென தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்துக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இதன் பிறகு இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு பல நேரங்களில் சித்ராவை ஹேம்நாத் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த அளவுக்கு இருவரும் அன்பாகவே இருந்துள்ளனர். 

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென பதிவு திருமணம் செய்தது ஏன்? இத்தனை ஆண்டுகளும் திருவான்மியூர் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்த சித்ரா ஓட்டலில் தங்கியது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    சித்ரா, ஹேம்நாத்

    திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு கரையான்சாவடியில் உள்ள ஹேம்நாத் வீட்டில் சித்ரா தங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. மக்கள் மத்தியில் சித்ராவை பிரபலப்படுத்திய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ‘முல்லை’ கேரக்டரே அவரது உயிருக்கு எமனாக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ‘முல்லை’ கேரக்டரில் 3-வது மருமகளாக நடித்த சித்ரா கணவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் அதில் ஹேம்நாத்துக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அது மோதலாக மாறி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதேநேரத்தில் திடீரென பதிவு செய்து கொண்டது ஏன்? என்பதும் பலத்த கேள்வியை எழுப்பி உள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகளுடன் சித்ரா

    ஜனவரி மாதம் வரையில் திருமணத்துக்கு காத்திருக்காமல் சித்ரா- ஹேம்நாத் இருவரும் தங்களது கணவன்- மனைவி உறவை உறுதிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்த வி‌ஷயம் எது? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    திருமணம் நிச்சயமான பிறகு சித்ரா-ஹேம்நாத் திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் முல்லை கேரக்டரால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாகவும் நசரத்பேட்டை போலீசார் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

    சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சித்ராவுடன் நண்பர்களாக பழகிய சின்னத்திரை நடிகர்- நடிகைகளிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட அன்று படப்பிடிப்பின்போது சித்ரா அடிக்கடி போனில் பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அன்று முழுவதும் அவர் யார்-யாரிடம் போனில் பேசினார். அவருக்கு போன் செய்து பேசியவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களை சேகரித்துள்ள போலீசார் அனைவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள பல நடிகர்-நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.

    நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது முகத்தில் 2 இடங்களில் ஏற்பட்ட காயங்களும் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சித்ரா மரணத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்த உள்ளனர். இதன் பிறகே சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுவதற்கு வாய்ப்புள்ளது.
    சின்னத்திரையில் இதுவரை ஏராளமான நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அதன் விவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
    தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் பின்வருமாறு,

    சாருகேஷ், வைஷ்ணவி

    நடிகர் சாருகேஷ்
    சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

    நடிகை வைஷ்ணவி
    2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    முரளி மோகன், பாலாஜி யாதவ்

    முரளி மோகன்
    வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    பாலாஜி யாதவ்
    கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

    ஷோபனா, மயூரி

    ஷோபனா
    சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

    நடிகை மயூரி
    தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துவந்த மயூரி 2005ஆம் ஆண்டு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாவதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பிரதியுஷா, சாய் பிரசாந்த்

    பிரதியுஷா
    இந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சாய் பிரசாந்த்
    பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.

    சபர்ணா, சித்ரா

    சபர்ணா
    சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    சித்ரா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சித்ரா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இவ்வாறு தொடர்ந்து டிவி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். போதைப் பொருள் வழக்கில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தது பரபரப்பானது. 

    இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள ரகுல் பிரீத் சிங், “நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. எனக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. 

    ரகுல் பிரீத் சிங்

    தனியாகத் தான் இருக்கிறேன். எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்” என்றார். மேலும் “தமிழ், தெலுங்கு, இந்தியில் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும்” என்றார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அமீர் கான் பட வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    மேலும் அது எப்போதும் தொன தொனவென்று பேசிக் கொண்டிருக்கும் கதாபாத்திரமாம். அதை விஜய் சேதுபதிக்காக ஒரு தமிழர் கதாபாத்திரமாக மாற்றியமைக்க அமீர் கான் முடிவு செய்திருந்தாராம்.

    அமீர் கான், விஜய் சேதுபதி

    இந்நிலையில், அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக, விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க தவறியதால் அவருக்கு பதில் ஒரு இந்தி நடிகரை தேர்வு செய்து விட்டார்களாம். 
    பாலிவுட் நடிகரான சோனு சூட் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

    குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம். 

    சோனு சூட்

    இத்தகைய மனிதநேயமிக்க உதவிகளை செய்துவந்த அவருக்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ஏழை மக்களுக்கு உதவ தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளையே அடமானம் வைத்த சோனு சூட்டின் செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
    தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.
    தன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார்.  ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.

    ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய `கிழக்குச்சீமையிலே' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது.

    பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-

    ``ஜானகி சபதம் படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய போதே பாரதிராஜாவின் திறமையை தெரிந்து கொண்டேன். எனக்கும் `வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்குமான பாடல் காட்சியை எப்படி எப்படி எடுத்தால் சிறப்பாக அமையும் என்று பாரதிராஜா விலாவாரியாக என்னிடம் விவரித்தபோது, ``இவர் சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்'' என்பதை உணர்ந்து கொண்டேன்.

    படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம், பாடல் காட்சி பற்றிய பாரதிராஜாவின் அற்புதமான கற்பனை பற்றி நான் கூறியபோது அவரும் ஆச்சரியப்பட்டார். அப்போது நான் பிஸியாக இருந்த நிலையிலும், ``மறுபடியும் அந்தப் பாடல் காட்சியை எடுப்பதாக இருந்தால் கால்ஷீட் தருகிறேன். அதோடு பாடல் காட்சிக்கு தேவையான பிலிம் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கே.ஆர்.ஜி.யிடம் கூறினேன்.

    ஆனால் கே.ஆர்.ஜி., அதற்கு உடன்படவில்லை ``மறுபடியும் படப்பிடிப்பு நடத்த நேரம் இல்லை'' என்று கூறி விட்டார்.

    அந்தப் படம் ரிலீசான ஒரு சில மாதங்களில், `16 வயதினிலே' படத்தை பாரதிராஜா இயக்குவதாக செய்திகள் வந்தன. நான் குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்து வந்தேன். பாரதிராஜாவும் அதே எல்லையம்மன் காலனியில்தான் தன் குடும்பத்தை குடி வைத்திருந்தார். நான் படப்பிடிப்புக்கு காரில் புறப்படும்போதோ, இரவில் திரும்பி வரும்போதோ பெரும்பாலும் பாரதி என் பார்வையில் படுவார். ஒரு சில வினாடிகள் நலம் விசாரித்துக் கொள்வோம்.

    இப்படி நான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். கார் புறப்பட்டு தெருமுனையைக் கடந்த போது திடீரென காரை கைகாட்டி நிறுத்தச் சொன்னார், பாரதி.

    கார் நின்றதும், ``என்ன பாரதி? என்ன விஷயம்?'' என்று கேட்டபடி இறங்கினேன்.

    ``16 வயதினிலே என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன். இன்று மாலை படத்தின் சிறப்புக் காட்சி இருக்கிறது. அவசியம் நீங்கள் வந்து படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும்'' என்றார், பாரதி.

    நான் அவரிடம், ``படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால், நிச்சயம் வந்து விடுவேன். தவிர்க்க முடியாமல் படப்பிடிப்பு நீண்டு போனால் மட்டும் வர முடியாமல் போய் விடும், எனவே, வர முடியாவிட்டால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்'' என்று சொன்னேன்.

    ஆனால், சொல்லி வைத்த மாதிரி அன்றைய படப்பிடிப்பு இரவு 9 மணி வரை நீண்டு விட்டது. இதனால் பாரதிராஜா படத்தின் `பிரிவிï' காட்சிக்கு போக முடியவில்லை.

    அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ஆனால் பாரதிராஜா மறக்காமல் இருந்திருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும், கதைப்புரட்சியையும் உருவாக்கி, மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து `கிழக்கே போகும் ரெயில்'', ``சிகப்பு ரோஜாக்கள்'', ``நிறம் மாறாத பூக்கள்'' என்று, அவர் இயக்கத்தில் வெளி வந்த எல்லாமே வெற்றிப் படங்களாயின.

    நானும் அவர் வளர்ச்சியில் பெருமைப்பட்டேன். நான் பிஸியாக இருந்ததால் அவர் படங்களில் நடிக்க என்னை அழைக்காததை ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

    இப்படி வருஷங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் `கலைப்புலி' தாணு சார், பாரதிராஜா இயக்கத்தில் ``கிழக்குச் சீமையிலே'' என்ற படத்தை தயாரிக்கவிருந்தார். அண்ணன் - தங்கையின் பாசப் பிணைப்பு தான் கதையின் முடிச்சு என்பதால் அண்ணன்- தங்கை கேரக்டர்களில் யார் யாரைப் போடலாம் என்று தாணு சார் பாரதிராஜாவிடம் ஆலோசித்திருக்கிறார்.

    தங்கை கேரக்டரில் நடிக்க ராதிகா முடிவானார்.

    இந்நிலையில், `கலைப்புலி' தாணு சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. `கிழக்குச் சீமையிலே' என்று ஒரு படம் தயாரிக்கிறேன், பாரதிராஜா டைரக்டு செய்கிறார். அண்ணன்- தங்கை இடையேயான அளப்பரிய பாசம்தான் கதை. அண்ணன் கேரக்டர் சிவாஜி சார் பண்ணக்கூடிய அளவுக்கு வலுவானது. நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாரதிராஜாவிடம் சொன்னேன். அவரோ ``முடியாது. நான் இயக்கும் படங்களில் அவரைப் போடுவதில்லை'' என்று கூறி விட்டார். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ``நான் முதன்முதலாக இயக்கிய ``16 வயதினிலே' படத்தின் `பிரிவிï' காட்சியை பார்க்க  வருந்தி அழைத்தும் வராமல் இருந்து விட்டார். அப்போதே நான் இயக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டேன்'' என்றார்.

    பாரதிராஜா என்ற பெரிய கலைஞனுக்குள் இப்படியொரு குழந்தையா? எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார்!'' என்று தாணுவிடம் கூறி விட்டேன்.

    நேராக பாரதிராஜா வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது. என்றாலும் இயல்பாக வரவேற்றுப் பேசினார்.

    ``ஒரு பிஸி நடிகரின் அன்றாட நாட்கள் கூட அவனுக்கு சொந்தமில்லை என்பதை உங்கள் திரைவாழ்விலும் பார்த்திருப்பீர்களே'' என்று பேச்சின் இடையே கூறினேன். பாரதியிடம் நெகிழ்ச்சி தெரிந்தது. `கிழக்குச் சீமையிலே' படத்தில் நான் அண்ணன் ஆனது இப்படித்தான். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    பாரதிராஜா விஜயகுமாரை இத்தோடு விட்டு விடவில்லை. அடுத்து அவர் இயக்கிய ``அந்தி மந்தாரை'' படத்திலும் அவரை நடிக்க வைத்தார். சிறந்த படத்துக்கான மத்திய அரசு விருது அப்படத்துக்கு கிடைத்தது. தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வழங்கி கவுரவப்படுத்தியது.

    ஆனாலும் விஜயகுமாருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்காததில் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் வருத்தம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    ``மதுரையில் நடந்த படவிழாவில் எனக்கு மத்திய அரசின் விருது கிடைக்காத வேதனையை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். ``இந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்த மாதிரி, படத்தில் அற்புதமாக நடித்த விஜயகுமாருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. என்றாலும் நிச்சயம் என் வாழ்நாளில் நான் இயக்கி அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தே தீருவேன்'' என்று உணர்ச்சிமயமாய் பேசினார்.

    பாரதிராஜா என் நடிப்பு மீது வைத்த இந்த நம்பிக்கையை விடவா எனக்கு விருது பெரிது? அப்போதே தேசிய விருது பெற்றதை விட அதிக சந்தோஷம் அடைந்தேன்''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
    ஆறுமுகசாமி இயக்கத்தில், பாண்டியன் சாசனா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூடு படத்தின் விமர்சனம்.
    நாயகன் பாண்டியன் திண்டுக்கல்லில் உள்ள கிராமத்தில் தாய், மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயம் செய்து நல்ல முறையில் பணம் சம்பாதித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் ஒருவர் இவருடைய குடும்பத்தை அழிக்க முயற்சி செய்கிறார்.

    அவர் மூலம் மது போதைக்கு அடிமையாகும் பாண்டியன், மனைவி மற்றும் தொழிலை இழக்கிறார். இறுதியில் பாண்டியன் மது போதையில் இருந்து விடுபட்டு இழந்த சந்தோஷத்தை மீட்டு எடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    விமர்சனம்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாண்டியன், நாயகியாக நடித்திருக்கும் சாசனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

    மதுபோதைக்கு அடிமையானால் அவர்களின் குடும்பம் எப்படி செல்லும் என்பதை படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆறுமுகசாமி. அடுத்தடுத்த காட்சிகள் சம்பந்தம் இல்லாமலும், திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலும் இருக்கிறது. இது போன்ற கதைகள் பல வந்திருந்தாலும், இப்படம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    விமர்சனம்

    ஆறுமுகசாமியின் இசையும் ரமேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை.

    மொத்தத்தில் 'சூடு' தாங்க முடியவில்லை.
    பிரபல நடிகராக இருக்கும் ஆர்யாவின் பிறந்தநாளுக்கு நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.
    பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது

    இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனை ஆர்யா நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 11-ஆம் தேதி ஆர்யாவுக்கு பிறந்தநாள் வரும் நிலையில், கமல் பாராட்டி இருப்பது, பிறந்தநாள் பரிசு என்று ஆர்யா கூறியிருக்கிறார்.

    கமல் - ஆர்யா

    சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
    சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
    உலக அளவில் தேடல் இணையதளங்களில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இணையதளம் கூகுள். இந்த தேடுதல் தளத்தை தான் இந்தியாவில் உள்ள மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

    2020ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கும் நிலையில் இந்த வருடம் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவைகள் எவை என்பது குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

    சூரரைப் போற்று

    திரைப்படம் சம்பந்தமான தேடல்களில் முதலிடத்தை ஹிந்திப் படமான ‘தில் பேச்சரா’ பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சூர்யா நடித்து வெளிவந்த ‘சூரரைப் போற்று’ படம் பிடித்துள்ளது. டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படம் இதுதான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நெகிழ வைத்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் ஆட்டோ ஓட்டுனரை நெகிழ வைத்திருக்கிறார்.

     புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரான முத்து சரவணன் என்பவர் தனது முகநூலில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், "நடிகர் விஷால் என் ஆட்டோவில் பயணித்தார். புதுச்சேரி கடற்கரை சாலை பழைய நீதிமன்ற வளாகம் அருகாமையில் நேற்றிரவு 11 மணி அளவில் வேகமாக ஓடிவந்து என் ஆட்டோவில் ஏறினார். நான் திரும்பிப் பார்க்கும் முன்னரே ஆட்டோவை எடுங்கள் எடுங்கள் என்று என்னை அவசரமாக தட்டினார். ஒரு நொடி எதுவும் புரியாமல் பதறிப்போனேன். சிறிது தூரம் சென்றவுடன் நான் சிறிய குழப்பமான மன நிலையில் திரும்பிப் பார்த்து நீங்கள் நடிகர் விஷால்தானே என்று சந்தேகத்துடன் கேட்டேன். அதற்கு அவர் இயல்பாக ஆமாம்” என்றார்.

    விஷால்

    அதன் பிறகு என்னிடம் பேசிய விஷால், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்கள் ஆட்டோவுக்கு சவாரி எல்லாம் எப்படி கிடைக்கிறது என்ற படியே மிகவும் இலகுவாக பேச ஆரம்பித்தார். ராஜீவ் காந்தி சதுக்கம் அருகாமையில் இருக்கும் ஹோட்டல் அக்கார்ட் வரைக்கும் இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

    அந்த சிறிய நேரம் பெரிய சந்தோஷமாக இருந்தது. அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து என்னிடம் அப்படியே கொடுத்தார் . புகைப்படம் எல்லாம் எடுத்து முடிந்த பிறகு ஹோட்டல் வெளியே வந்து எண்ணிப் பார்க்கையில் 370 ரூபாய் இருந்தது. சகோ தேங்க்ஸ் விஷால்" என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித் குடிசை வாழ் மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
    அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் கபாலி காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வருகிறார்.

    இந்நிலையில், சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

    ஆளும்கட்சியினர் சென்னையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியில் இருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

    இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

    மாநாடு படக்குழுவினர்

    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×