என் மலர்
சினிமா செய்திகள்
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா, 2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடிகை சித்ரா கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் அக்டோபர் 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து உள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

ஜனவரியில் திருமணம்
இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

பெற்றோர் கண்ணீர்
குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

முகத்தில் காயங்கள்
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.
42 வயதாகும் பாடகி சுனிதா, ராம் வீரபனேனி என்ற தொழில் அதிபரை 2-வது திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரபல சினிமா பின்னணி பாடகியான சுனிதா, தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற ‘காதல் சொல்வது...’ பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி இருக்கிறார். இவர் தமிழைவிட தெலுங்கில் தான் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சில நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். படங்களிலும் நடித்திருக்கிறார்.
பாடகி சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயா பாடகியாக இருக்கிறார். 42 வயதாகும் சுனிதா இன்னொருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அவர் அதனை மறுத்தார்.

இந்நிலையில் சுனிதா தற்போது 2-வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார். அவருக்கு ராம் வீரபனேனி என்ற தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. எனது வாழ்க்கையில் நல்ல நண்பராக ராம் நுழைந்து உள்ளார். விரைவில் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறோம் என்று சுனிதா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, அட்லீ தயாரித்த அந்தகாரம் மற்றும் ஆஸ்கருக்கு தேர்வான மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய 3 படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ரசித்தவை என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ஷங்கர், சூரரைப்போற்று படத்தையும், அதில் ஜிவி பிரகாஷின் இசை ஆத்மார்த்தமாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்தகாரத்தில் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ள ஷங்கர், ஜல்லிக்கட்டு படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘ஒரு பக்க கதை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அந்த படத்திற்கு பின் ஒப்பந்தமான படம் ‘ஒரு பக்க கதை’. கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்தாலும், சில காரணங்களால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இதுதான் அறிமுக படம். இருப்பினும் இப்படம் தாமதமானதால் அவர்கள் இருவரும் வேறு படங்கள் மூலம் அறிமுகமாகிவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 6 வருடங்களாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் வருகிற டிசம்பர் 25-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சில்க் சுமிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜயகுமார், ``அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதன் மூலம் திரை உலகில் தனது 2-வது ரவுண்டை வெற்றிகரமாகத் தொடங்கினார், விஜயகுமார்.

``கதாநாயகனாக நடித்த நீங்கள் வில்லனாக நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று மதுரை ரசிகர்கள் கேட்டதால், படங்களில் நடிப்பதை நிறுத்தினார், விஜயகுமார். ஆனால், ஒரு திறமையான நடிகர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருப்பதை தவிர்க்கும் விதத்தில் மீண்டும் அவரை `அக்னி நட்சத்திரம்' படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார், மணிரத்னம்.
ஒரு அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த 2 மகன்களும் ஒருவரை மற்றவர் சந்திக்கும் போதெல்லாம் அக்னி நட்சத்திரமாக உரசிக் கொள்வார்கள். இந்த 2 மகன்களின் உணர்வுகளையும் அன்பால் கட்டுப்படுத்தும் அப்பா கேரக்டரில் விஜயகுமார் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மஞ்சுளா பெயரில் ஒரு சைவ உணவகம் தொடங்கி நடத்தினோம். மூன்று வருடங்களுக்குள் மிகச்சிறந்த உணவகமாக அது வளர்ந்து வந்த நேரத்தில் சென்னைக்கு ஒரு வேலையாக வரவேண்டியிருந்தது. இங்கே வந்தபோதுதான் மீண்டும் படத்தில் நடிக்கும் அழைப்பு தேடி வந்து விட்டது.
``பட அதிபர், ஜீ.வி. என் நண்பர். அவர் தனது தம்பி மணிரத்னம் இயக்கத்தில் `நாயகன்' படத்தை எடுத்தபோதே அந்தப் படம் விஷயமாக பேசிக் கொண்டிருப்போம். நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, படத்தின் ஒட்டுமொத்த டீமும் புகழ் பெற்றது.
இதே ïனிட் அடுத்த `அக்னி நட்சத்திரம்' படத்தை ஆரம்பிக்கும்போது, ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தும் அந்த `அப்பா' கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். டைரக்டர் கே.சுபாஷ் அப்போது மணிரத்னத்திடம் அசோசியேட் இயக்குனராக இருந்தார். அவர் ஒருநாள் என்னை இந்தப் பட விஷயமாக சந்தித்து பேசினார்.
``படத்தின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய அந்த அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி சாரை போடலாமா என்று யோசித்தோம். சிவாஜி சார் நடிக்கும்போது அவருக்கே உரிய அற்புத நடிப்பாற்றல் வெளிப்பட்டு படத்தையும் தாண்டி அவர்தான் நிற்பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில், படம் பேசப்படும். அதே நேரத்தில் அந்த அப்பா கேரக்டரும் பேசப்பட வேண்டும். `அப்படி ஒரு அப்பா'வுக்கு யோசித்ததில் எங்களுக்கு சட்டென நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான். எனவே மறுக்காமல் நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
நான் அவரிடம், ``நான் நடிப்பில் இருந்து விடுபட்டு 3 வருஷம் ஆகி விட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்'' என்று சொன்னேன்.
அவரோ விடவில்லை. ``சார்! எங்களுக்காக இந்த ஒரு படத்தில் மட்டுமாவது நடியுங்கள். இந்த கேரக்டருக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் எங்களால் யோசிக்க முடியவில்லை'' என்றார், விடாப்பிடியாக.
சினிமாவில் வழக்கமாக இரண்டு பெண்டாட்டிக்காரர் கதை என்றால், இரண்டு பெண்டாட்டிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் கணவர் கேரக்டரை நகைச்சுவையாகவே சித்தரிப்பார்கள். மனைவியர் என்ன சொன்னாலும் அதற்கு `ஆமாம்... ஆமாம்' சொல்கிற கணவராக இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.
ஆனால் மணிரத்னம் என்னிடம் அந்த அப்பா கேரக்டரை விவரித்தபோது நிஜமாகவே பிரமிப்பு ஏற்பட்டது. `இந்த கேரக்டரையா விட இருந்தோம்?' என்கிற சிந்தனையை இந்த கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தி விட்டது.
படம் ரிலீசான போது, என்னைப் பாராட்டாதவர் கள் இல்லை. குறிப்பாக அந்த அப்பா கேரக்டரில் நடிக்கவில்லை; `வாழ்ந்த மாதிரி' இருக்கிறது என்று பாராட்டியவர்கள் அதிகம். இந்த படத்துக்குப் பிறகு நான் மீண்டும் படங்களில் பிஸியாகி விட்டேன்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
டைரக்டர் அவினாசிமணி இயக்கத்தில் `ஜானகி சபதம்' என்ற படத்தில் நடிகை கே.ஆர்.விஜயா ஜோடியாக விஜயகுமார் நடித்தார்.
அந்தப் படத்தில் அவினாசிமணியின் உதவி யாளராக ஓடியாடி வேலைபார்த்த இளைஞரை விஜயகுமாருக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. சினிமாவில் இப்படி அக்கறையாய் தொழில் செய்யும் இளைஞர்கள்தான் பின்னாளில் தங்கள் திறமை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் சிகரம் தொடுவார்கள்.
விஜயகுமார் இப்படி வியந்து பார்த்த அந்த உதவி இயக்குனர் வேறு யாருமல்ல; பாரதிராஜாதான்!
பாரதிராஜாவுடன் அந்தப் படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்தது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:
``ஜானகி சபதம் படத்தில் எனக்கும், நிர்மலாவுக்கும் ஒரு பாடல் காட்சி. இந்த பாடல் காட்சியை படமாக்கும் பொறுப்பை டைரக்டர் அவினாசிமணி, பாரதிராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பு, பாரதிராஜா என்னிடம் ``இந்தப் பாடலை இந்த மாதிரியான சூழ்நிலையில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும்'' என்றார்.
எதிர்காலத்தில் அவர் பெரிய இயக்குனராக வருவார் என்பதை அப்போதே தெரிந்து கொண்டேன்.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர் பிரபாஸ் வீட்டின் மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி இப்படத்திற்கு பின் இந்திய சினிமாவின் மிக பெரிய பிரமாண்ட நட்சத்திரமாக மாறினார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட பிரம்மாண்ட நடிகரின் ஆடம்பர பண்ணை வீட்டின் மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள பிரபாஸின் பண்ணை வீட்டின் மதிப்பு 60 கோடி என தெரியவந்துள்ளது. இந்த வீட்டில், பிரம்மாண்டமான தோட்டம், நீச்சல் குளம், உள்-உடற்பயிற்சி கூடம், ஒரு விளையாட்டு பகுதி மற்றும் பல வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடாக இருக்கிறதாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் மாநாடு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் இணைந்திருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 'மாநாடு' திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியல் இணைந்துள்ளார். சிம்புவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, ஓராண்டு நிறைவு என்று கூறி புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 18 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செல்லப் பிராணிகள் மீது அன்பாகவும் ஆசையுடன் இருக்கும் திரிஷா, தான் வளர்த்த zoya என்ற நாய் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அதன் நினைவஞ்சலியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.