என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதி, அனுசுயா பரத்வாஜ்
    X
    விஜய் சேதுபதி, அனுசுயா பரத்வாஜ்

    சில்க் சுமிதா பயோபிக்கில் விஜய் சேதுபதி?

    சில்க் சுமிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    சில்க் சுமிதா, அனுசுயா பரத்வாஜ்

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×