என் மலர்
சினிமா செய்திகள்
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன், தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், அஜித், விஜயகாந்த், விக்ரம், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் சிம்ரன்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ரஜினிமுருகன் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தற்போது சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் முடி முழுவதும் நரைத்தும் கன்னமெல்லாம் சுருங்கியும் தற்போதுள்ள நேச்சுரல் லுக்கில் பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்து என்ன சிம்ரன் இப்டி ஆயிடிங்க என கேட்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டப்பிங் பணியை முடித்து இருப்பதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து இருப்பதாக சமூகவலைதளத்தில் பிரேம்குமார் பதிவுசெய்திருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விடுமுறை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.
எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி படத்தின் இயக்குனர் தற்போது தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை கதையை இயக்குகிறார்.
ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன்.

இந்திய குடியரசு தலைவர் தன் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கெளரவித்த பெண்மணிகளில் இவரும் ஒருவர். இப்படி பல சாதனைகளை செய்த இவரின் அசாதாரணமான வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது.
இப்படத்தை டிராபிக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, லாபம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று லாபம். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது ஓடிடி தளத்தில்தான் வெளியாகிறது என்று செய்திகள் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லாபம் திரைப்படம் முதலில் தியேட்டர்களில் தான் வெளியாகும் அதன் பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.
பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

மேலும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முன்னோட்டம்.
'ஏ1' படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் காமெடி படமாக இருந்தாலும், படத்தில் சந்தானம் தாதாவாக நடிக்கிறார்.
கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தில் வலிமை பட பிரபலம் பணியாற்றியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தன் நேர்த்தியான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கக்கூடியவர் நிரவ் ஷா. இவர் தமிழில் போக்கிரி, தலைவா, 2.0, பில்லா, நேர்கொண்ட பார்வை என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் என்கிற ஹாலிவுட் படத்திலும் இவர் பணியாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்டன. அதில் நீரவ் ஷா கூடுதல் கேமரா ஆபரேட்டராக பணிபுரிந்துள்ளார். டெனெட் படத்தின் இறுதியில் வரும் எண்ட் கார்டில் நீரவ் ஷாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளமான டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டுவர விஜய், சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால், இன்று வித்தியாசமாக விஜய், சூர்யா ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டுவிட்டர் நிறுவனம் தான். இந்த ஆண்டு இந்திய அளவில் டுவிட்டர் பதிவுகளில் எவையெவை சாதனை புரிந்தன என்ற பட்டியலை டுவிட்டர் நிறுவனம் இன்று வெளியிட்டது.
அதன்படி விஜய் டுவிட்டரில் பதிவிட்ட செல்பி புகைப்படம், இந்திய அளவில் அதிகம் ரீ-டுவிட் செய்யப்பட்ட பதிவு என்ற சாதனையை படைத்திருந்தது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் ‘#VIJAYRuledTwitter2020’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
அதேவேளையில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் #SooraraiPottru ஹேஷ்டேக், இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்ததாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் ‘#SURIYARuledTwitter2020’ என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். டுவிட்டர் டிரெண்டிங்கில் யார் முதலிடம் பிடிப்பது என்று இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், கைதி பட வெற்றியின் மூலம் மேலும் உயர்ந்தார். தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
இதனிடையே கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு விக்ரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசில் தான் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ரைட்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டரில் ஆண்டுதோறும் அதிக லைக்ஸ், ரீ டுவிட், அதிகம் பேசப்பட்ட விஷயம் என்ன என்பது பற்றி சர்வே எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் விஜய்யின் செல்பி படம் அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் நெய்வேலி ரசிகர்களுடன் செல்பி படம் எடுத்தார். அந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். இந்த செல்பி படம் தான் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்யின் செல்பி படத்தை ரசிகர்கள் மீண்டும் இணைய தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதேபோல் இந்தாண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்டாக, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த விராட் கோலியின் டுவிட் முதலிடத்தில் உள்ளது. மேலும் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட்டாக, அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்த டுவிட் முதலிடம் பிடித்துள்ளது.
The most Liked Tweet of 2020
— Twitter India (@TwitterIndia) December 8, 2020
2020 का सबसे ज्यादा लाइक किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் லைக் செய்யப்பட்ட டுவீட் pic.twitter.com/lMN18Z5KEd
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வருகிற 14-ந் தேதி ஐதராபாத் செல்ல உள்ள நிலையில், இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 168-வது படமாகும். இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இன்னும் 40 சதவீதம் படப்பிடிப்பு எஞ்சியுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வாரம் அறிவித்தார். அதற்கான முறையான அறிவிப்பு வருகிற 31-ந்தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
எனவே அரசியல் கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதையொட்டி ரஜினி பெங்களூர் சென்று தனது அண்ணன் சத்திய நாராயணனிடம் ஆசி பெற்றார். வருகிற 12-ந்தேதி பிறந்த நாளையொட்டி அவர் பெங்களூரிலேயே தங்கி இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென்று அவர் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி சென்னையில் இருந்து வருகிற 14-ந் தேதி தனியார் ஜெட் விமானம் மூலம் ஐதராபாத் செல்கிறார். 15-ந்தேதி முதல் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

படப்பிடிப்பின் போது ரஜினி மற்றும் நடிகர்- நடிகைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ராமோ ஜிராவ் பிலிம்சிட்டிக்குள் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் பிரத்தியேகமாக சில தளங்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரஜினியின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க பிரத்தியேகமாக டாக்டர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளர். ‘அண்ணாத்த’ படத்தில் துணை நடிகர்- நடிகைகள் கூட்டமாக பங்கேற்ற காட்சிகள் ஏற்கனவே ஊரடங்குக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டன. எனவே நடிகர்- நடிகைகளின் தனிப்பட்ட காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட உள்ளன.
‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு காலம் 45 நாட்கள் ஆகும். படப்பிடிப்பு தவிர அதன் பிந்தைய பணிகளுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. எனவே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.






