என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பிரபல நடிகை, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறி உள்ளனர். கடந்த வாரம் சனம் வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் அவருடன் நெருங்கி பழகி வந்த அனிதா, சனம் வெளியேறிய போது கண்ணீர்விட்டு கதறி அழுதார். அனிதா அழுததை பார்த்து எரிச்சலடைந்த நெட்டிசன்கள், அவர் நடிப்பதாகவும், அடுத்த வாரம் வெளியேறிவிடுவோமோ என்ற பயத்தில் இவ்வாறு செய்வதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீ பிரியா, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘அய்யோ.... தயவு செஞ்சு அழாத... அருவருப்பா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். ஸ்ரீபிரியாவின் இந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள படத்துக்கு ‘அவள் அப்படித்தான்’ என பெயரிட்டுள்ளனர்.
நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார்.
தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ், சில்க் சுமிதாவின் தோற்றம்” என்று தன் படத்தை வெளியிட்டுள்ளார்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை ஏற்கனவே பாலிவுட்டில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் வித்யா பாலன் சில்க் சுமிதாவாக நடித்திருந்தார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி சர்ஜா இறப்பதற்கு முன் தன்னிடம் கடைசியாக என்ன சொன்னார் என்பதை நடிகை மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா இறந்த தினமான ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது என்று அவரது மனைவி மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளை போன்று, அந்த நாளும் சாதாரணமாகத் தான் தொடங்கியது. சிருவின் சகோதரர் துருவா, அவரின் மனைவி மற்றும் நான் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக என் மாமனார் எங்களை அழைத்தார்.

நாங்கள் சென்று பார்த்தபோது சிரு சுயநினைவில்லாமல் இருந்தார். நாங்கள் அவரை அப்படி பார்த்ததே இல்லை. அதன் பிறகு லேசாக நினைவு திரும்பியது. நாங்களே அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவமனையை அடைந்ததும், மருத்துவர்கள் சிருவை எமர்ஜென்சி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதன் பிறகு சிருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்னதை மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னைப் பார்த்து, நீ டென்ஷன் ஆகாத, எனக்கு ஒன்னும் ஆகாது என்பது தான் சிரு என்னிடம் கடைசியாக பேசியது என்று கூறினார்.
நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.
சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.
1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.
மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.
எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.
பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.
அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.
என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.
இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்'' என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.
அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.
இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.
மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.
அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் கன்னி ராசி படத்தின் விமர்சனம்.
கன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார். இவருக்கு நான்கு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் காதல் திருமணம் தான் செய்துவைக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் பாண்டியராஜன்.
தந்தையின் ஆசைப்படி அவருடைய மூன்று பசங்களும், அவருடைய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடைக்குட்டியான விமலுக்கு காதல்னாலே பிடிக்காது. இதனால் கல்யாணமே பண்ணாமல் இருக்கிறார். விமலுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது? அது காதல் திருமணமா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நாயகன் விமல் நேர்த்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெமினி கணேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஜெமினி கணேசன் என்றால் காதல் மன்னன் என்பார்கள். ஆனால் இந்த படத்தில் நாயகனோ காதலே வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு, காளி வெங்கட் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது. இத்தனை பேர் இருந்தும் ஒன்றிரண்டு இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் காமெடி கைகொடுக்காதது படத்திற்கு பின்னடைவு.

கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமரன், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் அவர்களது திறமைக்கு ஏற்ற வேடம் படத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். செல்வக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘கன்னி ராசி’ கலகலப்பில்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கேங்ஸ்டர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அந்தவகையில் தற்போது கேங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிம்பு, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்த மாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்குறியே தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் தனது முக்கியத்துவம் குறைவதால் சமந்தா இந்த முடிவை எடுத்ததாகவும், சமந்தாவுக்கு பதில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம். அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

ஒரு கோடிக்கு மேல் பாலோவர்கள் இருந்தால் போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம். எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம்.
சமீபத்தில் ஹனிமூன் கொண்டாட சென்ற நடிகை காஜல் அகர்வாலும் இந்த சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம்.
அது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தானாம். மேற்கண்ட நடிகைகள் அனைவரும் மாலத்தீவு சென்றபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா, துக்ளக் தர்பார் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை திரையில் காண ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15-ந்தேதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல் பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது விவசாயிகள், இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களை தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கான நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.