என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு பிரபலம் ஒருவர் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று சனம் ஷெட்டி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.

    ஆரி

    பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் சனம் வெளியேறியது அதிர்ச்சியளித்தது. வெளியேறிய பின் கமல்ஹாசன் முன்னிலையில் சனம் இதர போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆரி, “நீ ஒரு ட்ரூ வாரியர் சனம். இந்த எவிக்‌ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது” என கமல் முன்பாகவே ஓப்பனாக சொல்லிவிட்டார். இதற்கு பதிலளித்த சனம் மக்களின் தீர்ப்பை மதிப்போம் என கூலாக சொல்லிவிட்டு வெளியேறினார்.
    சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தேனாம்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29-ந்தேதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9-ந்தேதி வரை காட்சி அளிக்கும். மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் முக்கிய வழிதடங்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை, சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி சென்று தரிசனம் செய்து உள்ளார். அங்கு அவர் மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர், திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது. ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் அவர் மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி (கைடு) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த பிரபல நடிகர், தற்போது 275 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்துள்ளாராம்.
    கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதைக் கடைபிடித்த பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கடந்த 9 மாதங்களாக வீட்டிலேயே இருந்தாராம்.

    அதன் பிறகு இப்போதுதான் அவர் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதாவது 275 நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி, த பிரீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லையாம்.

    மம்மூட்டி

    இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பிய அவர், நேராக மெரைன் டிரைவ் சென்றாராம். பின்னர் டீ கடைக்கு சென்று நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தபடி டீ குடித்துள்ளார்.

    அவருடன் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷராடி, சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் காரில் சென்றுள்ளனர். அவர் காரில் சுற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபம் படத்தின் முன்னோட்டம்.
    விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'டாக்டர்', 'அயலான்', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.

    இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ரூபம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

     2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் 'ரூபம்' படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.
    கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், எலிசெபத் டெபிகி நடிப்பில் வெளியாகி இருக்கும் டெனெட் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன் போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார். இவரை டெனெட் என்ற ரகசிய அமைப்பு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது. அதில் அவருக்கு ஒரு பணி கொடுக்கப்படுகிறது. 

    அது என்னவென்றால், பின்னோக்கிப் பயணம் செய்யக்கூடிய துப்பாக்கி தோட்டாக்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அது கடந்த காலத்தையே அழிக்கக் கூடியவை என்பதால், அவற்றை அழித்து உலகை காக்க வேண்டும் என்பது தான். இதனை நாயகன் செய்து முடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

    டெனெட் விமர்சனம்

    கிறிஸ்டோபர் நோலனின் படங்கள், மற்ற ஹாலிவுட் படங்களைப் போன்றவை அல்ல. இவருடைய படங்களை ஒரு முறை பார்த்தால் புரியாது, இரண்டு, மூன்று முறை பார்த்தால்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதற்கு இவரின் முந்தைய படங்களான இண்டர்ஸ்டெல்லார், இன்செப்சன் ஆகிய படங்கள் உதாரணமாக சொல்லலாம். 

    ஆனால் இந்தப் படத்தை இரண்டு, மூன்று முறை பார்த்தாலும் புரிந்து கொள்வது சிரமம் தான். கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்.

    டெனெட் விமர்சனம்

    நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா, எலிசெபத் டெபிகி என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு மற்றும் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். லுட்விக்கின் பின்னணி இசை படம் தொய்வடையும் இடங்களை தூக்கி நிறுத்துகிறது. அதே போல ஒளிப்பதிவு. ஒரே நேரத்தில் திரையின் ஒரு பகுதி முன்னோக்கி செல்வது போலவும் மற்றொரு பகுதி பின்னோக்கி செல்வது போலவும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் அற்புதம். 

    குறிப்பாக கார் சேஸிங் காட்சிகள், விமானம் வெடிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் என படம் முழுக்க பிரம்மிப்பூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வேன் ஹோய்டெமா.

    மொத்தத்தில் ‘டெனெட்’ பிரம்மிப்பு.
    ‘பியார் பிரேமா காதல்’ படத்தை கொடுத்த ஹரிஷ் கல்யாண் - இளன் - யுவன் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்திருந்தனர். அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் இசையில் படத்தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட்டாக, படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் குவித்தது. 

    இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் - இளன் - யுவன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
    பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
    ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

    அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர். 

    இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற 'மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

    பிரபாஸ்

    பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது. 
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
    தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    சூரி, வெற்றிமாறன்

    இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ஜாக்பாட் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
    நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    ‘கோஸ்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கல்யாண் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் கல்யாண்

    பேண்டசி ஹாரர் காமெடி படமாக தயாராகும் இதில் யோகிபாபு, ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன்,  கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 23 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம். ஒரு முன்னணி நடிகரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் நடிகை காஜல் அகர்வால் கைவசம் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2 ’ போன்ற படங்களும் உள்ளன.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
    அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது. 

    அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார்.

    அஜித்

    அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வம் இருந்து வருகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. தற்போது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சில போட்டியாளர்களை அனுப்புவது வழக்கம். அதன்படி ஏற்கனவே அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றனர். மேலும் சில போட்டியாளர்களும் அவ்வாறு செல்ல உள்ளதாக கூறப்பட்டது.

    அதன்படி சீரியல் நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக குவாரண்டைனில் இருந்த அவர், சொந்த காரணங்களுக்காக திடீரென விலகினார். இதனால் அசீமுக்கு பதில் யார் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    விஜே மகேஸ்வரி

    சமீபத்தில் ஓட்டலில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த தொகுப்பாளினி மகேஸ்வரி, ‘சீக்கிரமே ஒரு ஆச்சரியமான அறிவிப்பை எதிர்பாருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அதே ஓட்டலில் மகேஸ்வரியும் குவாரண்டைனில் உள்ளதால் அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×